முதற்கனல் செம்பதிப்பு மீண்டும்

unnamed

முதற்கனல் மறுபதிப்பாகி கிழக்கு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கடைகளில் கிடைக்கிறது. ராயல் அளவில் பெரிய எழுத்துருக்களுடன் தரமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏராளமான வாசகர்கள் முதற்கனலின் செம்பதிப்பு தேவை என்று கேட்டார்கள். முதலில் அது 600 பிரதிகள் மட்டுமே அச்சிடப்பட்டு முன்பதிவுசெய்தவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. மழைப்பாடல் முதல் செம்பதிப்பு வாங்கிய பலர் முதல்பாடலை விட்டுவிட்டனர். அவர்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர்

இப்போது கிழக்கு பதிப்பகம் முதற்கனல் செம்பதிப்பை மீண்டும் கொண்டுவருகிறது. ஆனால் collector’s edition என்பதனால் இதுவும் கடைகளில் கிடைக்காது. கோருபவர்களுக்கு மட்டுமே அனுப்பப்படும்.

முதற்கனல் செம்பதிப்பை முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் கீழ்க்கண்ட இணைப்பில் சென்று புத்தகத்துக்கு ஆணையிடலாம். [ https://www.nhm.in/shop/mutharkanal_classic_edition.html ]

மேலதிக விவரங்கள் அந்த இணைப்பிலேயே உள்ளன.

பிரயாகை வெளியீடு

முந்தைய கட்டுரைநாடகங்கள்
அடுத்த கட்டுரைஜெயகாந்தன் நினைவஞ்சலி