ஞானபீட விருது பெற்ற எழுத்துச்சிங்கம் ஜெயகாந்தன் நேற்றிரவு ஒன்பது மணிக்கு காலமான செய்தி இன்றைய காலை நாளிதழ்கள் பெரும்பாலானவற்றில் வெளிவரவில்லை.செய்தித்தாள்களை புரட்டி ஏமாந்ததுதான் மிச்சம். ஆனால் மலையாள மனோரமா நாளிதழில் ஜெயகாந்தன் மறைவுச்செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டு அவருக்குஅஞ்சலி செலுத்தியிருந்தார்கள். கலைஞர்களுக்கு மரியாதை செய்வதில் கேரளா நம்மை விட ஒரு படி மேலே தான்!
திருவட்டாறு சிந்துகுமார்