கொற்றவை பித்து- 3

r

அன்பு ஆசிரியனே!,

உண்ணும் அனைத்தையும் விண்ணுக்குக் கொண்டு செல்லும் ஓயாத பெரு நடனமே காப்பியம்

காப்பியத்திற்கு மேலுமொரு அறிமுகம்.
நினைக்கையில் விரிக்கவும் நேரம் தாண்டி சுருக்கவும் கூடிய அனைத்தும் மீதும் ஆறாத காதலுண்டு உலகிற்கு காட்டாக பீலியும் லிங்கமும் காப்பியம் ஒருவகை பீலி மறுவகையில் குறி!

எளியோர்க்கு வாமன் கதை போல
வள்ளுவன் போல ஈரடி கொண்டும் உலகளக்கலாம்
அந்தாதி பாடி அண்டம் ஆளலாம் பேருருக்கொண்டு

அண்டமதில் பிண்டம் பிண்டமதில் அண்டம்

அறிக எங்கும் நுகமின்றி மேழி இல்லை!

நீலி சொன்ன நப்பின்னை கதை குறள் வெண்பா என்றால் நீலன் வந்த நீலம் அந்தாதி அல்லவா!!

வணக்கத்துடன்
சக்திவேல்
சென்னை

f

அன்பு ஆசிரியனே!,

கண்ணதாசன் பாடல், நப்பின்னை கதை, நீலம் மூன்றும் சூழ் கொண்ட உச்சம் ஒன்றே அல்லவா?

ஒரு எளியவன் காதுக்கு
‘கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ காற்றில் மறைவேனோ’
என்று அந்த நாமகள் நாம் அரிதிற்ப் பெற்ற கோமகள் படும் போது
நம் கண்ணில் தெரிவது நப்பின்னை தானே ?

கங்கைக்கரை தோட்டம் அதில் கடம்பவனம் கண்டிருப்பாரோ கவிஞர்?
நீலக்கடம்பின் நிழலில் சிற்றாடை கட்டி குமின்சிரிப்புடன் நிற்கும் அந்த வள்ளி
கரியவன் வந்து குழலூதும் பொது மெய்ப்பிப்பது கவிஞர் வரியை தானே ?

என் பொருட்டு இம்முன்றும் முழுமை அடையும் பாதையின் படிகள்
முதற்படி கங்கைக்கரை தோட்டம்
இரண்டாம் படி நப்பின்னை கதை
மூன்றாம் படி பர்சனாபுரியின் பித்தி கதை

காப்பியம் என்பது ஒன்றில் தொடங்கி ஒன்றில் முடிவது அன்று
அது பலதில் தொடங்கி முழுமையில் அடங்குவது
சுருக்கவும் விரிக்கவவும் முடிவது
அணுவாகவும் அண்டமாகவும் ஆவது

வணக்கத்துடன்
சக்திவேல்
சென்னை

கொற்றவை அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 68
அடுத்த கட்டுரைஇலைமேல் எழுத்து- கடிதம்