அன்பு ஆசிரியனே!,
இவ்வெளிய வாசகனுக்கு கொற்றவை அதுவும் ஒரு புத்தகமே!.. ஆனால் ஆழ்மனத்து உறுபசிக்கு புத்தகம் போதாதே ! என் இயற்மொழியாம் தமிழில் அதை ‘நூல்’ எனலாம்.
ஏன் நூல்? நூற்பது, பின்னுவது, நெய்வது, ஆடையாவது, அணிவது இறுதியில் அதுவே அவிழ்வது
எனவே கொற்றவை புத்தகமல்ல ‘நூல்’ எமக்கு!
எமக்கு கொற்றவை மந்தணச் சொற்குவை,
கோழிச்சாத்தன் மீண்ட கதையில் தொல்தமிழ் அவனை சேர்த்த கரையில் இருந்து புகார் அணையும் வரை நடத்தியது போல ஒவ்வொரு வாசிப்பும் அதனதன் வழியே கொற்றவையை வந்தடையும் எனக்கு
காட்டாக வெண்முரசு — முதற்க்கனலும், நீலமும் அவ்வளவில் மனதிற்கே அணுக்கமானவை காரணம் அம்பையும் ராதையும் எம்மினிய தோழியர்
கருப்பனை என்றும் பெருங்காதலுடன் ராதிப்பவள் அந்த ராதை என்றால் ‘கருப்பியை’ அப்பெருங்காதல் வெல்லும் அருங்காதலுடன் ராதிப்பவன் இந்த ராதன்.
உண்ணும் அனைத்தையும் விண்ணுக்குக் கொண்டு செல்லும் ஓயாத பெரு நடனமே காப்பியம் என்றால் உமது கொற்றவை அதில் கொடுகொட்டி
வணக்கத்துடன்
சக்திவேல்
சென்னை