மாட்டிறைச்சித் தடை

IMG_5756-400x320

ஜெமோ,

நேரடியான கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல ஆரம்பித்திருக்கிறீர்கள். இதற்கும் பதில் சொல்லுங்கள். மகாராஷ்டிரம் மாடுகளைக்கொல்ல தடைவிதித்திருப்பதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சாம்

அன்புள்ள சாம்,

நுட்மான ஆழமான சமூக- பொருளியல்- அழகியல்- ஆன்மீக அலசல்களின் அடிப்படையில் சொல்கிறேன்,கேனத்தனம்.

ஆனால் நுட்பமான அரசியல் கணக்கும் கூட. இதுஅதிகாரத்திற்கு வர பாரதிய ஜனதாவுக்கு உதவிய சக்திகளுக்கு அளிக்கும் கப்பம். அதாவது அவர்கள் உண்மையிலேயே விரும்புவதைக் கொடுக்காமல் பதிலுக்கு இதை போடுகிறார்கள் என நினைக்கிறேன்

இது எந்தவகையிலும் நீடிக்கமுடியாது. ஏனென்றால் லாபம் இல்லாத , முதிய மாடுகளை எந்த விவசாயியும் வளர்க்கமாட்டார். அதை தெருவில் துரத்திவிடுவார். அவற்றை அரசு வளர்ப்பதென்றால் பெரிய செலவாகும். கார்ப்பரேட் பாரதிய ஜனதா அதைச்செய்யும் அளவு அறிவுகெட்டது அல்ல

தெருவில் நடமாடமுடியாமலாகும்போது மாடுகள் ‘எப்படியோ’ கொல்லப்படும். கொஞ்சநாள் பார்த்தபின் சட்டம் விலக்கிக்கொள்ளப்படும், அவ்வளவுதான். ‘செஞ்சாச்சு ஆனா செய்யலை’ மாதிரி ஒரு விஷயம்.

உண்மையில் எனக்குள்ள சந்தேகமே நாமெல்லாம் இதைப்பற்றி பேசட்டுமே என்றுதான் செய்கிறார்களா என்பதுதான்.

ஆகவே இதில் பொங்கி எழ ஒன்றுமில்லை. மேலும் தமிழகத்தில் மாட்டிறைச்சி தடைசெய்யப்படுவதை நான் ஆதரிக்கிறேன். இங்கே இன்றுவரை நல்ல மாட்டிறைச்சிப்பொரியல் சாப்பிட்டதில்லை. கேரளத்தில் கைவைத்தால் நடப்பதே வேறு

ஜெ

முந்தைய கட்டுரைஇலைமேல் எழுத்தின் கலை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 65