ராய் மேக்ஸிமம்

2
ஜெமோ அவர்களுக்கு,

ராய் மாக்ஸிம் என்ற எழுத்தாளரை எந்த ஒரு ஆங்கில அறிஞரும் சொல்லிக்கேட்டதில்லை. நீங்கள் இவரை ஒரு பெரிய ஆங்கில அறிஞர் ஆய்வாளர் என்றெல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். யார் இவர்? எந்தக்கல்லூரியிலே பட்டம் பெற்றார்? இவரது ஆய்வுகளுக்கு என்ன மதிப்பு? இவர் சொல்வதற்கெல்லாம் என்ன ஆதாரம்?

இப்போது பாஜக ஆட்சிக்கு வந்திருப்பதற்கும் இந்தமாதிரி போலி வெள்ளைக்கார அறிஞர்கள் புதிசாக கிளம்பி வருவதற்கும் என்ன சம்பந்தம்? ஆங்கிலேயரின் ஆட்சிகளையும் மிஷனரிகளையும் கொச்சைப்படுத்துவதற்காக இந்துத்துவ சக்திகளால் உருவாக்கப்பட்ட பூதம்தான் இந்த ராய் மாக்ஸிம். இதை அறிந்துகொள்ள பெரிய ஊகமெல்லாம் தேவை இல்லை

சாம் ராபின்ஸன்

அன்புள்ள சாம் றாபின்ஸன்

நலம்தானே?

அற்புதமான ஒரு படம் கைவசம் இருந்தது. அதைப்போடுவதற்கு கட்டுரை யோசித்துக்கொண்டிருந்தேன். நன்றி

அவர் ராய் மாக்ஸிமம் அல்ல மினிமம் தான்

ஜெ

ராய் மாக்ஸம் பற்றி இந்திரா பார்த்தசாரதி

முந்தைய கட்டுரைகுந்தவை பீபி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 56