சினிமாவுக்குள் நுழைந்த பின்னர் நான் உணர்ந்துவரும் வியப்புகளில் ஒன்று வாய்ப்புகள் வரும் விதம். யாரோ யாருடனோ சொல்கிறார்கள். அவர் இன்னொருவர் வழியாக அணுகுகிறார். அலகிலாத ஓரு விளையாட்டு நடந்து கொண்டே இருக்கிறது. திரையுலகில் யார் எப்படி வாய்ப்புகள் பெற்றார்கள் என்று பேசிக்கொள்வது மிக ஆர்வமான ஓர் உரையாடல். ராம்கோபால் வர்மாவின் இக்கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது அதனால்தான்
கட்டுரை குப்பைத் தொட்டியும் சிம்மாசனமும்