«

»


Print this Post

ஒரு வாழ்க்கைக்குறிப்பு


இந்தக்கட்டுரை என்னை கொஞ்சம் மனம் கலங்கச் செய்தது. ஏனென்றால் இந்த ஆசிரியரை நான் இருமுறை நேரில்சந்தித்து சில சொற்கள் பேசியிருக்கிறேன். கற்பனை கலக்காமல் நேரடியாக எழுதப்பட்ட இந்த கட்டுரை ஒரு துயரமான சிறுகதைபோல் இருக்கிறது. எந்தக்கதையைவிடவும் வாழ்க்கை மர்மமானது.

“அன்பு”ள்ள ஆசானுக்கு’
http://ninaivilnintravai.blogspot.com/2010/04/blog-post.html

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7315/

7 comments

Skip to comment form

 1. ramji_yahoo

  உங்கள் பரிந்துரைக்கு மிகுந்த நன்றிகள். படித்தேன், நன்றாக எழுதி உள்ளார் அந்த மாணவர், அன்பு ஆசிரியரைப் பற்றி.

  இறந்த மனிதரை பற்றி குறை கூறுவது நல்ல பண்பு அல்ல, இருந்தும் கேட்கிறேன்.

  ஏன் அந்த ஆசிரியரின் உபதேசங்கள் நிஜ வாழ்வில் ஜெயிக்க உதவ வில்லை. தன்னை விட வயதில், பலத்தில், அதிகாரத்தில் குறைந்து உள்ள மாணவர்களிடம் காட்டிய வீரத்தை ஏன் அந்த ஆசிரியரால் வாழ்விடம் காட்ட முடியாமல் போயிற்று.

 2. Prasanna

  ஒரு நல்ல ஆசிரியனின் வாழ்க்கை என்பது அவர் வாழும் காலம் என்பதையும் கடந்து ஒரு நல்ல மாணவனின் மனதில் நீங்கா இடம் பிடிப்பதில் தான் இருக்கிறது என்பதை அன்பு நிருபித்து இருக்கிறார். என்ன செய்வது பொருளாதாரத்தை முதல் குறியாய் பின்பற்றும் இன்றைய ஆசிரிய சமூகத்தில் அன்பு போன்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை விரல் விட்டு என்ன கூடிய அளவில் தான் இருக்கிறது

  பிரசன்னா
  .

 3. Prasanna

  அன்புள்ள ராம்ஜி,
  நலமா? சில நேரங்களில் மற்றவர்களுக்கு பலம் அளிக்கும் நம்முடைய அறிவுரைகள் நம் வாழ்கையில் பலம் இழந்து போய் விடுகின்றன, வாழ்கையின் விடை தெரியா கேள்விகளில் இதுவும் ஒன்று என்று தான் நான் நினைக்கிறேன்.

  பிரசன்னா

 4. tdvel

  அறிவுரை சொல்வதும் அதன்படி நடத்தலும் வெவ்வேறானவை. அந்த ஆசிரியருக்கு மட்டுமல்ல நமக்கும் பொருந்தும். பிள்ளைகளை நேரத்தை வீணாககாமல் படிக்கவேண்டும் என ஓயாமல் அறிவுறுத்துகிறோம். ஆனால் நாம் நம் கடமையை எப்படி செய்கிறோம்? என் பிள்ளைகளை, மாணவர்களை அறிவுறுத்தும்போதெல்லாம் எனக்கு எப்போதும் இந்த உறுத்தல் இருக்கவே செய்யும். ஆனாலும் அவர்களாவது உருப்படவேண்டுமல்லவா?
  த.துரைவேல்

 5. gomathi sankar

  கவலைப் படுவதை நிறுத்துவது எப்படி என்று புத்தகம் எழுதிய Dale Carnagie கூட தற்கொலை தான் செய்துகொண்டார் என்று சொல்லப்படுவது உண்டு.வாழ்வு நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் செய்யும் ஒவ்வொரு செய்கையையும் பொய்ப்பித்துக் கொண்டேதான் இருக்கிறது.

 6. ஜெயமோகன்

  மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
  மிகுந்த பதற்றத்துடன் இந்த கடிதத்தை உங்களுக்கு வரைகிறேன். முதலில் “நினைவில்நின்றவை” சுட்டியை உங்கள் வலைப்பக்கத்தில் இடம்பெற செய்ததிற்கு மிகமிக நன்றி. இதை நான் சற்றும் கனவில்கூட நினைத்துப்பார்த்ததில்லை. அந்த கட்டுரை இரண்டு மாதம் முன்பு எழுதினேன். அதுவும் ரொம்ப நாளாய் கனவில் வரும் அன்பு சாருக்காக. அப்புறம் ஏனோ என்னிடம் அலுவல் காரணமாக கற்பனைஓட்டம் குறைந்து கரைந்து கடமைஓட்டம் சூடுபிடித்தது . சென்றவாரம் உங்கள் வலைப்பக்கத்தில் எனது சுட்டியைக் கண்டதும் எனது நானங்களில் புதிய ரத்தம் பாய்வதாய் ஒரு உணர்வு. அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றி . இதற்கு முன் உங்களுக்கு இரண்டு முறை கடிதம் எழுதியுள்ளேன் . அக்கடிதத்தையும் அதற்கு உங்களின் பதிலையும் பார்த்தே பரவசப்பட்டுக்கொண்டிருந்த எனக்கு இப்படி ஒரு நிகழ்வு எப்படி இருக்கும் என்பதை வார்த்தைகளால் சொல்ல இயலாது. நான் மேன்மேலும் எழுதவேண்டும் என்ற தூண்டுதலை உங்களின் ஒரு சுட்டி ஏற்படுத்திவிட்டது. இப்பொழுது பலபேர் எனது வலைப்பக்கத்தைப் படிக்கிறார்கள் . அதற்கு காரணம் நீங்கள் தான். எப்படி உங்களுக்கு எனது வலை முகவரி கிடைத்தது ? உங்களுக்கு அன்பு சாரை எப்படித் தெரியும் ? என்ற பலவாறு இரண்டு நாளாய் ஆராயந்துகொண்டிருந்தவன் இப்பொழுது அக்கேள்விகளை விட்டுவிட்டு அமைதியாய் இருக்கிறேன். மீண்டும் எனது உளமார்ந்த நன்றி .
  இப்படிக்கு உங்கள் எழுத்துலகின் ரசிகன் ,
  பிரவின் சி

 7. kumaran

  அன்புள்ள ஜெ நலமா ,
  நல்ல எழுத்தை அங்கீகரிக்க நீங்கள் எடுத்துக்கொள்ளும் காலம் வியக்க வைக்கிறது . இந்த சம்பவம் நடந்த பொழுது நான் விடுமுறையை கழிக்க மைசூரில் இருந்தேன் . என் குடும்பத்தில் எல்லோருக்கும் அவரை தெரியும். எல்லோரும் இரண்டு நாட்களுக்கு பிரமை பிடித்தது போல இருந்தோம். அன்பு சார் ஒரு கடின உழைப்பாளி. வாழ்க்கையின் ஒவ்வொரு படிகட்டையும் அவர் தன்னுடைய கடின உழைப்பாலேயே தாண்டி வந்தார். அதுவே அவருக்கு தன்னுடைய திறமையின் மீதான அஹங்காரத்தை ஏற்படுத்தி இருக்கலாம் . அவரை சுற்றியிருந்த போகவிட்டு புறம் பேசும் செட்டி வெள்ளாள சமுதாயம் அவரை ஒரு மண்டை வீங்கியாகவே அடையாளப்படுத்தியது. அவர் இறப்பதற்கு இரு மாதங்களுக்கு முன்னால் அவரை தாஜ் பரோட்டா கடையில் பார்த்தேன். அவருடைய இறுக்கமான ஆளுமையை அவர் அப்போது இழந்திருந்தார் . கண்களில் தெளிவும் தன்னம்பிகையும் போய் குழப்பமும் அவநம்பிக்கையும் வந்திருந்தது. இரண்டு மாதங்களுக்கு பின் அம்மாவின் மூலம் எல்லாம் தெரிந்து கொண்டேன். வசீகரமான ஆளுமை உள்ளவர்களின் தற்கொலை அந்த ஆளுமையால் ஈர்க்கப்பட்டவர்களை நிலை குலையச்செய்யும் என்பதற்கு பிரவீனின் எழுத்துகள் சாட்சி. இப்பொழுதெல்லாம் நிம்மதி இல்லத்தை தாண்டி செல்லும் போது மனதில் எழும் நகை முரண் சில மணி நேரங்களுக்கு என் நிம்மதியை குலைக்கிறது. ஆற்றாமையுடன் ஒரு பெருமூச்சு நெஞ்சை அடைக்கிறது.
  @ பிரவின் – ஒனக்கு ரொம்ப தன்னடக்கம்டே

  குமரன்.

Comments have been disabled.