ராய் மாக்ஸம் நிகழ்ச்சி

1
ராய் மாக்ஸம் நிகழ்ச்சியைப்பற்றி விரிவாகவே எழுதவேன்டும். ஆனால் இரண்டுநாட்கள் இணையதளத்தில் பிரச்சினை. எங்கள் இணையதளத்தை எவரோ ஹேக் செய்துவிட்டனர். தொடர்ந்து சரிசெய்தார்கள் நண்பர்கள். மீண்டும் மீண்டும் ஹேக் செய்யப்பட்டது. இப்போது சரியாக இருக்கிறது. ஆனால் நான் அதற்குள் இணையதள வசதி இல்லாத ஒரு மலைவாசத்திற்கு வந்துவிட்டேன். இங்கிருந்து எழுதிக்கொடுத்தனுப்பவேண்டியிருக்கிறது. ஆகவே சுருக்கமாக

9
இந்த விழாவை ஒருங்கிணைத்த மூவருக்கு நன்றி சொல்லவேன்டும். முதலில் நண்பர் ஜெயகாந்தன். [இப்படியெல்லாம் பெயர் வைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக மரியாதையை பிடுங்கிக்கொள்கிறார்கள்] இரண்டு சுரேஷ்பாபு. மூன்றாமவர் செந்தில்குமார் தேவன். செந்தில் வந்திறங்கியது முதல் தொடர்ந்து எல்லா ஊர்களிலும் ராய் மாக்ஸம் கூடவே இருந்தார். ராய் பற்றிய இரு கட்டுரைகளை என் தளத்தில் எழுதினார்.

Roy Moxham final 303
4
[செந்தில்குமார் தேவன்]
ராயின் வருகையின் உற்சாகமூட்டும் அம்சம் என்னவென்றால் நாம் மேலைநாட்டு எழுத்தாளர்களை வாசித்திருப்போம், ஆனால் நேரில்கண்டு நெருங்கிப்பழகும் வாய்ப்பு மிக அரிதானது என்பதுதான். அவருடனான எந்த சம்பிரதாயங்களும் இல்லாத நட்பு என்பது எனக்கும் வாழ்க்கையின் அரிய நினைவுகளில் ஒன்று. என் இல்லத்தில் அவர் மூன்றுநாட்கள் தங்கியிருந்தார். சேர்ந்துபயணம் செய்தோம். சிரித்துக்கொண்டே இருந்த நாட்கள்
8

ராய் நகைச்சுவை உணர்ச்சி கொண்டவர். சற்றேனும் பகடியோ சிரிப்போ இல்லாமல் எதையும் சொல்லக்கூடாதென்ற எண்ணம் கொண்டவர். எதையும் குறைத்தே சொல்லவேன்டும் என்பதில் கவனம் கொண்டவர். அது ஒரு பிரிட்டிஷ் குணமும் கூட. அத்துடன் அனைத்தையும் திட்டமிட்டு சரியாகச் செய்ய விரும்புபவர். நான் ராய் குறித்த பேச்சில் அதை மட்டுமே சொல்லி சுருக்கமாக முடித்துக்கொண்டேன். ஏனென்றால் விழா ராயுடையது.அவர் பேச விரும்பினேன்

ஆனால் செந்தில்குமார் தேவன் தொகுப்புரையில் ராய்பற்றிய தன் அவதானிப்புகளையும் சுவாரசியமான அனுபவங்களையும் சொல்லிக்கொன்டே சென்றார். விழாவின் சிறப்பான அம்சமாக அமைந்தது இதுதான். சிறில் ராய் குறித்தும் நூல் குறித்தும் அறிமுக உரை நிகழ்த்தினார். சுரேஷ்பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். அவரது முதல் உரை என்பதனால் அடிக்கடி சற்று தழுதழுத்தாலும் சிறப்பாகவே அமைந்தது
3
பேச்சாளர்கள் மூவர். களப்பணியாளர் பால்ராஜ் உப்புவேலி என்ற நூலை இன்றைய சூழலில் எப்படி வாசிக்கலாம் என்பதைப்பற்றிச் சொன்னார். இன்று பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை கவ்வ வரும் நேரத்தில் உப்புவேலி போன்ற ஒரு வரலாற்று நினைவை நாம் எப்படி குறியீடாக வாசித்து இன்றைய அரசியல் தேவைக்கென புரிந்துகொள்ள வேண்டும் என்றார். நூலின் பல நுட்பமான தகவல்களை குறிப்பிட்டுப்பேசினார்
6
ஆய்வாளர் ராமச்சந்திரன் தமிழக மன்னர்கள் எப்படி உப்புக்கு வரியிட்டார்கள் என்பதையும் தமிழகத்தில் உப்புவரிக்கு நிகரான பருத்தி வரி எப்படி பாளையக்காரர்களின் கலகத்துக்கு வழிவகுத்தது என்றும் பேசினார்

யுவன் சந்திரசேகர் எந்த ஒருவரலாற்று நூலையும் அது புதிய எதிரிகளை உருவாக்கி விடும்  என அஞ்சுபவன் தான் என்றும் ஆனால் இந்நூல் எந்த எதிரியையும் கட்டமைக்க முயலாமல் வரலாற்றை ஒரு சமநிலையில் நின்று காட்டுகிறது என்றும் சொன்னார் . ராய் ஒரு பெரிய புனைகதைக்கு நிகராக இந்நூலை எழுதியிருக்கிறார் என்றும் சிறிலின் மொழியாக்கம் சிறப்பாக சரளமாக உள்ளது என்றும் சொன்னார்

2
ராய் மாக்ஸம் வரைபடங்களைக் காட்டி உப்புவேலி பற்றிய தன் தேடலை, கண்டடைதலைச் சொன்னார். பின்னர் வாசகர்களின் வினாக்களுக்கு பதில் சொன்னார். இனிய கச்சிதமான நிகழ்ச்சி என நண்பர்கள் சொன்னார்கள். ராய் மிகுந்த மனநிறைவைத் தெரிவித்துக்கொன்டார்

7

11
பதிப்பாளரான அலெக்ஸின் நன்றியுரையும் அவருக்கும் இந்நூலுக்குமான உறவை விளக்குவதாக இருந்தது. நன்றியுரை முடியும்வரை கூட்டம் அமர்ந்திருந்ததும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ராயிடம் கையெழுத்து பெற்றதும் வியப்புக்குரியது என தோன்றியது.

more photos

முந்தைய கட்டுரைமத்துறு தயிர்-கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 47