«

»


Print this Post

விஷ்ணுபுரம்,விவாதம்


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு…

தங்களின் விஷ்ணுபுரம நாவல் படித்தேன்…

மூன்று நாட்களில் படித்து முடித்தேன்…

நல்ல அனுபவத்தை தந்தது நாவல்… அதை பற்றிய என் கருத்தை இந்த இணைப்பில் காணலாம்..

http://pichaikaaran.blogspot.com/2010/07/matrix-chaos.html

மீண்டும் இன்னொரு முறை படித்து விட்டு விரிவாக எழுதுவேன்..

தங்கள் முன் சில கேள்விகள்..

1 விஷ்ணு புரம் என்ற தலைப்பு, இது மத ரீதியான நூல் என்ற அடையாளத்தை தருவதால், என்னை போல பல வாசகர்களை நெருங்க முடியாமல் போகிறது … ஒரு தத்துவ நூலான இதற்கு, பின் தொடரும் நிழலின் குரல் என்பது போல செகுலர் பெயரை வைத்து இருப்பதுதான் பொருத்தமாக இருந்துஇருக்கும்..உங்கள் கருத்து என்ன ?

2 பின் தொடரும் குரல் நாவலில் இருந்த அளவுக்கு வடிவ அமைப்பு நேர்த்தி இதில் இல்லை என தோன்றுகிறது… உதாரணமாக பி தொ குரலில் இருந்த குறுநாடகம் நன்றாக இருந்தது..இது தட்டையாகஇருக்கிறதே?

3 மன்னர்கள், ஆழவார்கள், வைதீகர்கள் என அனைவரையுமே எதிர்மறையாக காட்டி இருப்பது நெருடலாக இருக்கிறது..

4 ஞான சபை விவாதத்தில் தமிழ் மரபான சித்தர் மரபு சார்ந்த விவாதம் இல்லாததது ஒரு குறை. ஏன் விட்டு போனது ?

5 அத்வைதம், த்வைதம் , விஷிஷ்டத்வைதம் போன்ற வார்த்தைகளியே காணவில்லை … மருபிரப்ப்பு, ஊழ் போன்றவற்றை விரிவாக அலசவில்லையே .ஏன் ?

அன்புடன்,
ரவி

அன்புள்ள ரவி

ஒரு நாவல் எழுதி முடித்ததுமே எழுத்தாளன் வேலை முடிந்துவிட்டது. நான் ஒரு வாசகனாக ,வேண்டுமானால் விமர்சகனாக அதற்குள் நுழைய முடியும். அவ்வளவே. அவ்வாறாக என் பதில்கள் இவை.

1. பொதுவாக நான் எழுத்தாளன் அரசியல்சரிநிலைகளைப் பற்றி கவலைப்படக்கூடாது என்ற கருத்து உள்ளவன். சமகாலத்தில் எவையெல்லாம் மனிதாபிமானம், முற்போக்கு ஒழுக்கம் என்று கருதப்படுன்றனவோ அவற்றை ஏற்று அவற்றுக்கேற்ப சிந்திப்பவன் அசல் சிந்தனையாளனும் அல்ல. அசல் படைப்பாளியும் அல்ல. படைப்பாளிக்கு அவனுடைய அனுபவங்களும், அகத்தேடலும் மட்டுமே வழிகாட்ட வேண்டும். அப்போதுதான் அது உண்மையான வாசகனின் அந்தரங்கத்தைச் சென்று தொட முடியும். அப்படி இல்லாமல் காற்றுக்கேற்ப பாய்விரிக்கும் எழுத்துக்கள் மேலோட்டமான சமகால முக்கியத்துவத்தை மட்டுமே அடைய முடியும். விஷ்ணுபுரம் வந்து 13 வருடங்கள் ஆகின்றன. அன்றுள்ள அரசியலே இன்றில்லை. இன்னும் ஐம்பது வருடத்தில் இன்றுள்ள அரசியலின் சுவடே இருக்காது. நூறு வருடத்தில் இக்காலகட்டத்தின் வரலாறுகூட எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. இலக்கியங்கள் அப்போதும் இருக்கும் – விஷ்ணுபுரம் போன்ற செவ்வியல் ஆக்கங்கள்

நீங்கள் சொல்வது சரி, மேலோட்டமான வாசகர்களில் கணிசமானோர் அந்த தலைப்பை மட்டுமே வைத்து ஓர் அபிப்பிராயத்தை உருவாக்கி அதை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது, அவர்கள் என் வாசகர்கள் அல்ல அல்லவா? வாசிக்காவிட்டால் இழப்பு அவர்களுக்கு மட்டுமே.

2 என் நோக்கில் பின்தொடரும் நிழலின் குரலை விட கச்சிதமான வடிவ நேர்த்தி – ஒரு சொல்கூட மிகாத தன்மை- உடையது விஷ்ணுபுரம். அடுத்து அந்த கச்சிதம் கொற்றைவையில் மட்டும்தான் சாத்தியமாகியது. விஷ்ணுபுரத்தின் எல்லா உறுப்புகளும் பிற உறுப்புகளுடன் ஒரே வலையாக பின்னியுள்ளன. தட்டையான, பொதுவான சித்தரிப்புகள் ஏதுமில்லை. காரணம் அதன் வடிவம் புராணங்களின் வடிவம். அதன் அழகியல் செவ்வியலின் அழகியல்

3 முழுமையாக எதிர்மறையாக காட்டவில்லை. ஆனால் பொதுவாக ஒன்றுண்டு செவ்வியல் என்பதே மானுட மனத்தின், வரலாற்றின் இருட்டையும் கசப்பையும் அதிகமாகச் சொல்லக்கூடியதாகவே இருக்கும். அங்கதமே அதன் மையச்சுவையாக திரண்டு வரும். விஷ்ணுபுரமும் அப்படித்தான். அப்படி அது நிகழ்ந்தது. அது எனக்கே ஆச்சரியம். அதை முன்னுரையிலேயே சொல்லியிருந்தேன்.

3 கவனித்து படியுங்கள். விஷ்ணுபுர ஞானசபை விவாதங்களின்போது அனைத்து ஞானத்திற்கும் உச்சமாகக் காட்டப்படுவது சித்தர்களின் ஞானமே.

4 அத்வைதம் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. விஷிஷ்டாத்வைதம் 13 ஆம் நூற்றாண்டு. துவைதம் 14 ஆம் நூற்றாண்டு. இந்தவிவாதங்கல் கிபி 5 ஆம் நூற்றாண்டில் நிகழ்கின்றன

5. ஞானசபை விவாதம் பிரபஞ்ச உற்பத்தி குறித்த அடிப்படை வினாவைச்சுற்றி மட்டுமே எழுகிறது. அதாவது ரிக்வேதத்தின் சிருஷ்டி கீதம் எழுப்பும் கேள்விகளைப்பற்றி மட்டும்

நன்றி

ஜெ

விஷ்ணுபுரம் விவாதங்கள்…

http://www.jeyamohan.in/?p=6054

http://www.jeyamohan.in/?p=5957

http://www.jeyamohan.in/?p=5697

http://www.jeyamohan.in/?p=5150

http://www.jeyamohan.in/?p=3084

http://www.jeyamohan.in/?p=2408

http://www.jeyamohan.in/?p=2345

http://www.jeyamohan.in/?p=829

http://www.jeyamohan.in/?p=486

http://www.jeyamohan.in/?p=484

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7299

5 comments

Skip to comment form

 1. pichaikaaran

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு…

  தங்கள் பதிலுக்கு நன்றி…

  இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் அதை படிக்கும் விதம் வேறு.. என்னை போன்ற வாசகர்கள் அதை படிக்கும் விதம் வேறு…. உங்கள் பதில்களில் சிலவற்றை நான் ஏற்கவில்லை…

  1 . ” மேலோட்டமான வாசகர்களில் கணிசமானோர் அந்த தலைப்பை மட்டுமே வைத்து ஓர் அபிப்பிராயத்தை உருவாக்கி அதை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள்”

  நான் கவனித்தவரை வாசகர்கள் மட்டுமன்றி கணிசமான விமர்சகர்களும் , நாவலின் தலைப்பின் காரணமாக ஒரு அபிப்ராயத்தை உருவாக்கி கொண்டு , நாவலை படிக்காமலேயே , எதிர்மறையாக கருத்து சொல்லும் நிலை உள்ளது… எல்லோரையும் உள்நோக்கம் காரணமாக அப்படி சொல்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது… அதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

  நான் மிகவும் மதிக்கும் பெரியவர் ஜெயகாந்தன் அவர்கள் கூட நாவலில் நுழைய முடியவில்லை என கருத்து சொல்லி இருக்கிறார்..

  நீங்களும் கூட இதை ஒரு கடினமான நாவல் என்ற கருத்தையே உருவாக்கி இருக்கிறீர்கள்..

  என்னை பொறுத்தவரை, நாவல் கடினமான ஆழமான விஷயத்தை பற்றியது என்றாலும், அதன் நடை கடினமானது, உலர்ந்த நடை என்றெல்லாம் சொல்ல மாட்டேன்…

  ஆங்கில படம பார்ப்பது போல பல காட்சிகள் இருந்தன… உதாரணமாக சிற்பி , கோயிலில் ஏறும் காட்சி, ரகசிய கதவுகள், கடவு சொல் வார்த்தை போன்ற பகுதிகள் சைன்ஸ் பிக் ஷன் போல் இருந்தன,…

  இருதி பகுதியில், சிலைக்கு கண் வரைந்து , அது உயிர் பெறும் காட்சி, கிராபிக்ஸ் எபெக்டில் , சினிமா க்ளைமேக்ஸ் போல இருந்தது….

  அதே போல, சிலை வடிக்கும் காட்சியை நுணுக்கமாக வர்ணித்த இடம் , ஒரு என்ஜினீயர் என்ற முறையில் எனக்கு பிடித்து இருந்தது.. pattern making , casting , போன்றவற்றை இனிய தமிழில் சொல்லி இருந்தது , தமிழில் எதை வேண்டுமானாலும் சொல்லும் திறன் ஆச்சர்ய படுத்தியது… மானை உதைத்து அந்த சிலையை பார்க்கும் பொது ஏற்படும் அதிர்சி…. மிக அருமையான இடம்…

  அதே போல, சிலையை மாற்றாமல், அதன் தோற்றத்தை மாற்ற, ஆடையை மட்டும் மாறி அமைக்கும் படி கூறும் இடம்…. கைதட்டி ரசிக்கும்படி இருந்தது…
  கச்டைசிபகுதியில் வரும், ஒரு அத்தியாம் முழுக்க வரும், வயதான குரு , குரு பேதத்தின் சீடன் பார்க்க வருபவரை, தன்னை அடியேன் என் கூற கட்டாயபடுத்தும் இடம்…

  சொல்லி கொண்டே போகலாம்…

  இந்த அருமையான நாவலை , நீங்கள் உட்பட யாரும் சரியான முறையில் அறிமுகம் செய்யவில்லை என்பதே என் குற்றச்சாட்டு…

  இதையெல்லாம் தாண்டி , ஆழமான விஷயத்தை பற்றி நாவல் பேசுகிறது என்பதுதான் முக்கியம்… ஆனால் நாவல் அப்படி ஒன்றும் கடினமாக இல்லை….

  2 “என் நோக்கில் பிந்தொடரும் நிழலின் குரலை விட கச்சிதமான வடிவ நேர்த்தி – ஒரு சொல்கூட மிகாத தன்மை- உடையது விஷ்ணுபுரம்”

  விஷ்ணுபுரம போன்ற நாவலை இனி நீங்களே நினைந்தாலும் படைக்க முடியாது என்பது உண்மைதான்..

  நான் சொல்ல வந்தது வேறு… பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் பல யுக்திகளை பயன் படுத்தி இருந்தீர்கள்… உதாரணமாக அதன் நடுவில் ஒரு வசிய சக்தி கொண்ட நாடகம் ஒன்று வரும்… அது அனைவரையும் கவர்ந்தது… ஆனால், விஷ்ணுபுரத்தில் அப்படி எதையும் முயற்சிக்கவில்லை …

 2. கோவை அரன்

  திரு.ரவி,

  விஷ்ணுபுரம் பற்றி ஜெயகாந்தன் http://www.jeyamohan.in/?p=461

  கீதையினுள்ளே நுழையக் கூட கீதாமுகூர்த்தம் வர வேண்டுமென்று சொல்வார்கள் , தவறு கீதையினுடையது அல்லவே ?

  //விஷ்ணுபுரம போன்ற நாவலை இனி நீங்களே நினைந்தாலும் படைக்க முடியாது என்பது உண்மைதான்..//

  உங்களை போன்ற வாசகராகிய என் நண்பர் அருண் ”பின் தொடரும் நிழலின் குரலுக்கு அப்புறம் ஜெ எதற்க்காக எழுதுகிறார் , உச்ச படைப்பு அதுதான்” என்கிறார் . அசோகவனம் வந்தபின் நம் கருத்துக்கள் மாறலாமே ?

  //நான் சொல்ல வந்தது வேறு… பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் பல யுக்திகளை பயன் படுத்தி இருந்தீர்கள்… உதாரணமாக அதன் நடுவில் ஒரு வசிய சக்தி கொண்ட நாடகம் ஒன்று வரும்… அது அனைவரையும் கவர்ந்தது… ஆனால், விஷ்ணுபுரத்தில் அப்படி எதையும் முயற்சிக்கவில்லை …//

  சரியான கேள்விவிதானா ? அந்த படைப்புக்கு அப்படி ஒரு அங்கத நாடகம் தேவைப்பட்டிருக்கலாம் . விஷ்ணுபுரம் மூன்றாம் பாக படிமங்கள் போல நிழலின் குரலில் ஏன் வரவில்லை என்று கேள்வி கேட்க முடியுமா ?

  ஆனால் உங்கள் ஆழ்ந்த வாசிப்பு மகிழ்ச்சிக்குறியது .

 3. pichaikaaran

  நண்பர் கோவை அருண் அவர்களே,
  விஷ்ணுபுரத்தை விட சுவையான நாவல் வர வாய்ப்பு இருக்க கூடும் . ஆனால் இதை விட ஆழமான , நுட்பமான நாவல் வர வாய்ப்பில்லை.

 4. pichaikaaran

  வாசிப்பு அனுபவத்தை , எழுத்து திறனை தாண்டிய, அதற்கு அப்பாற்பட்ட ஒன்றை விஷ்ணுபுரத்தில் உணர முடிந்தது. அதை விளக்கி சொல்ல முடியவில்லை.

 5. muthukumar

  jayamokan sir avarkale unkal eluthukkal samooka avalam neekka erukkumaru muyartchi ullathu parattukkal;

  unkal eluthukkal saamanianukkum poriumpadi eluthunkal

  panam pannum eluthalarkal mathiil unkal pani parattuk kuriyathu

  enathu kealvi

  (ethirkalathil arivu geevikal than suya lapathukkaka moolai vipacharam seivarkal)
  moolai vipacharikalai uruwakkum kalvi murayai matra mudiyuma please answer me

Comments have been disabled.