நல்ல கட்டுரையில் …

வணக்கம் சார்

ஒரு கட்டுரையின் வடிவம் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள்
எழுதியிருந்தீர்களே அதை அடிப்படையாகக் கொண்டே இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதிவிட்டேன். உங்களுடைய எழுத்துக்களை படித்தே என்னுடைய எழுத்துக்களை மேம்படுத்தி வருகிறேன். எழுத்தை பொருத்த வரையில் உங்களை என் குருவாக நினைக்கிறேன். நன்றி

சமீபத்தில் உங்கள் தளத்தில் என்ன நடக்கிறது என்ற கட்டுரையில்
//கும்பமேளா நிகழ்ச்சிகளை எழுதியதோடு சரி. அதற்குமேல் ஒன்றும் எழுதவில்லை. சின்னச்சின்ன விஷயங்கள் எழுதினேன், அவை படைப்புத்தன்மை கொண்டவை அல்ல// என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். இதுவரை எழுதினால் போதும் என்று எண்ணியிருந்த எனக்கு படைப்புத்தன்மை என்ற வார்த்தை புதுமையாக இருந்தது. படைப்புத்தன்மை என்றால் என்ன? சாதாரணமாக எழுதுவதற்கும் படைப்புத்தன்மையோடு எழுதுவதற்கும் என்ன வித்தியாசம் என்று சொல்ல முடியுமா!

நன்றி

பா.பூபதி

அன்புள்ள சாய்,

ஒரு நல்ல கட்டுரையில் அதன் இயல்பான வடிவ நேர்த்தி, மொழி போன்றவற்றுக்கு அப்பால் ஒன்று நிகழவேண்டும். எழுதும்போது நம் சிந்தனை குவிவதன் விளைவாக புதியன சில வெளிவரவேண்டும். அதற்கு முன் நம்மில் இல்லாதிருந்தவை. புதிய கருத்துக்கள், அவற்றை சொல்வதற்கான புதிய படிமங்கள், அவை அமையும் புதிய சொல்லாட்சிகள். அப்படி அவை வெளிவருவதற்குப் பெயர்தான் படைப்பூக்கம். இது இலக்கியம் தத்துவம் போன்ற தளங்களில் எழுதப்படும் கட்டுரைகளுக்குத்தான். மற்ற கட்டுரைகளைப்பற்றி எனக்கு தெரியாது

ஜெ

http://www.jeyamohan.in/?p=3985 படைப்பியக்கம்
http://www.jeyamohan.in/?p=336 சிறுகதை ஒரு சமையல்குறிப்பு
நாவல் ஒரு சமையல்குறிப்பு http://jeyamohan.in/?p=206
http://www.jeyamohan.in/?p=170 கட்டுரை வடிவம் பற்றி ஒரு கடிதம்…

*

முந்தைய கட்டுரைஇன்றைய காந்தி -கடிதம்
அடுத்த கட்டுரைகண்ணதாசன் விருதுகள்