ஒரு வரி

‘ஒடிவதுபோல் இடை இருக்கும் என்று தேவிகாவைப் பார்த்து PBS குரலில் பாட ஜெமினிமாமாவுக்கு எப்படி மனசு வந்தது?’

ஜெ, ஒரு கேள்வி. இந்த வரியை எழுதிய எழுத்தாளார் யார்?

சண்முகம்

அன்புள்ள சண்முகம்

சட்டென்று பேயோன் என்று சொல்லத்தோன்றினாலும் ஒரு பட்டியலில் உள்ள யாரும் எழுதியிருக்கலாம். பாரா, இரா.முருகன். அனேகமாக இரா.முருகன். அவருக்குத்தான் வணிக சினிமா மீது கசப்பு பாதி இனிப்பு மீதி. மலையாளத்திலே சொன்னால் ‘மதுரிச்சிட்டு துப்பானும் வய்ய, கய்ச்சிட்டு தின்னானும்ம் வய்ய’ [இனிப்பால் துப்பவும் மனம்வரவில்லை கசப்பால் தின்னவும் மனம் வரவில்லை]

ஜெ

முந்தைய கட்டுரைஐந்தாவது மருந்து, மொழியாக்கம்
அடுத்த கட்டுரைஇலக்கிய வாசிப்பின் பயன் என்ன?