நவீன தமிழ் இலக்கியத்தில் சிறந்த ஆளுமையாகவும் விமர்சிகராகவும் அறியப்படுபவர் ஜெயமோகன், இவரது மாடன் மோட்சம் தமிழின் சிறந்த சிறு கதைகளில் ஒன்று.”மாடன்” என்பது சேரி பகுதியில் ஆயிரம் வருடங்களாய் வாழும் குல தெய்வங்களுள் ஒன்றாக வாழ்ந்து, தற்போது கேட்பாரற்று கிடப்பதை விவரித்து கதை தொடங்குகிறது
http://meetmadhan.blogspot.com/2009/01/blog-post_28.html
கதையை படிக்க இந்த சுட்டியை அணுகவும்
1 comment
raghunathan
July 1, 2010 at 3:54 pm (UTC 5.5) Link to this comment
இது வரை படித்த தமிழ் சிறுகதைகளில் மிக அதிக ரசனை அனுபவம் தந்த கதை மாடன் மோட்சம். சுடலை மாடனும் அப்பியும் most loveable rascals. கதை தந்த தைரியம்/சுதந்திரம் எவரையும் ராஸ்கல் எனக் கூவத்துணியும். சாமி-பூசாரி உறவு இதை விட அழகாய், இயல்பாய், பாந்தமாய் இருக்க முடியாது. இப்படி ஒரு சாமி இருந்தால், ஆயுசுக்கும் இப்படி ஒரு தோழன்பூசாரி ஆக இருக்கலாம். ஒரு முதிர்ந்த, கனிந்த, மண்ணில் ஆழமாய் வேரூன்றிய பாட்டன் கொள்ளுப்பேரன் உறவு இது. இந்த ஒரே ஒரு கதைக்காகவே ஜெ சாரை இன்றைய தமிழ் எழுத்துலகின் ஒரு உன்னத படைப்பாளி என ஒத்துக் கொள்ளலாம். அப்புறம் கதையில் வரும் மற்ற பக்த கோடிகள், சிலுவைக்காரர்கள், அய்யர்மார்கள், அதிகாரிகளின் ஆர்ப்பாட்டங்களெல்லாம் இனிப்பான இலவச இணைப்புகள். வாழ்த்துக்கள், ஜெ சார்.
ரகுநாதன்