உத்திஷ்ட ஜெயமோகனா !!

உத்திஷ்ட ஜெயமோகனா !!

சினிமாவில் புகழ்பெற்றாலும்
சேனல் தோறும் தோன்றினாலும்
தன்னறம் ஏழுத்தன்றோ..?

கர்ம யோகத்துடன் கீதைஉரையை நிறுத்துவது
வாசர்கள் பிற உரைகளைத் தேடி சென்று
தத்துவம் நீர்த்த
பக்தி மார்கத்தில் உழல நேர்ந்து
ஞானக்குழப்பத்தை அடைய நேரும்

ஸ்தூலத்தில் ஒரணுவும் இதுவரை
புதிதாய் ஆக்கப்படவில்லை
அழிக்கப்படவுமில்லை
காலந்தோறும் புதிதாக ஆக்கப்படும் ஒன்று
இலக்கியம் மட்டுமன்றோ
எழுத்தாள ஜனகனே

மேலோன் கடைபிடிப்பதை உலகம் கடைபிடிக்கும்
இதனால் தமிழில் வலைப்பதிவுகள் குறையும்
இலக்கிய வம்புகள், அரசியல்கள் இல்லாமல் போகும்
தமிழ் கடும் பதிவுப் பஞ்சம் எதிர்கொள்ள நேரும்

கன்னியாகுமரி வட்டார வழக்கை,
அதன் நகைச்சுவையைக் படிக்காமல்
வாசகஜனம் வெகுகாலம் இன்புற்றிருக்க இயலாது
தென்திருவாங்கூர் படநாயர் குலத்தில் உதித்தவனே
தயைகூர்ந்து உணர்க

ஆத்மாவை விரும்பி
ஆத்மாவில் நிறைவுகொண்டு
ஆத்மாவில் மகிழ்திருக்கும்
காலம் உண்டு. இப்போதல்ல

தொப்பி, திலகம், கனிமொழி வணக்கம்
என
பிரதிபலன் கருதாமல் இந்நாள் வரை
அற்றிய பணி தடைபடாமல் தொடர்க

பிரம்மா எழுத்திலிருந்து உருவானவர்
ஆதலால்

அனுசோஜன மறுகஸி.

பகடி நிற்கட்டும். உயர் தத்துவத் தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும், வாசிப்பில் தீவிர வீச்சுடைய எழுத்தாளர், விமர்கசர் என்ற உங்கள் ஒரு நிலைக்கு. அதன் சுவடே தெரியாத மிக இனிய ஒரு ஆளுமை என்ற அளவில் உங்களை வைத்தே உங்கள் நட்பு வட்டாரத்தின் பெரும்பான்மை இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது நான் எண்ணம். வாசகர்களாக அறிமுகம் ஆகி தற்போது உங்களது நெருக்கிய நண்பர்களாக, அதற்கு மேலாக ஆனவர்கள் இதை மறுக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். உங்களை அணுக
உங்கள் அறிவு சார்ந்த செயல்பாடுகள் ஒரு பொழுதும் யாருக்கும் ஒரு திரையாக இருந்ததில்லை. ஒரு குழுவில் அவர்களில் ஒருவராக உற்சாகம் குன்றாது தீராமல் உரையாடிக்கொண்டிருக்கும் தோழனாகவே எப்போதும் இருந்துள்ளீர்கள். தங்கள் அருகாமையை விரும்புவதற்கு முதற்காரணமும் அதுவே. தகுதிக்கு மீறிய சுதந்திரம் எடுத்துக்கொள்வதை எப்போதும் உணர்வதுண்டு. இந்த கட்டுயையில் நீங்கள் சந்தித்திராக உங்கள் வாசகர்கள் அனைவரையும் ஒரு குழுவாக கண்டு தற்போதைய மனநிலையை எங்கள் அனைவருடனும் தோழமையுடன் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். ஒரு பயணத்தின் நடுவே இளைப்பாறும் பொழுதில்போல..

வெண்நுரையும் சுழியுமாக ஆர்பரித்த நதியின் பேரோசையும் சாரலும் சற்றே நின்றிருக்கிறது. ஆனால் குளிர் அவ்வாறே எஞ்சி நிற்கிறது.

அன்புடன்,
வினோத்

[email protected]

முந்தைய கட்டுரைகமல்
அடுத்த கட்டுரைமாடன் மோட்சம் – ஒரு பார்வை