«

»


Print this Post

பெங்களூரில்…


என் மகன் அஜிதனை பெங்களூரில் சூழியல் பட்டப் படிப்புக்காகச் சேர்த்திருக்கிறேன். அவனை கொண்டு வந்து விடுவதற்காக பெங்களூர் வருகிறேன். June 19,20,21 தேதிகளில் பெங்களூரில் இருப்பேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்புகொள்ளலாம்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7278

15 comments

Skip to comment form

 1. kuppaashok

  முடித்ததும் உடனே காசு வரும் படிப்பில் சேர்க்காமல், மகன் விரும்பும் படிப்பை படிக்கவைப்பதற்க்கு உங்களை பாராட்டலாம். சொல் ஒன்று செயல் ஒன்றாக இல்லாமல் வாழ்வை அமைத்துக்கொள்வதும் பெரிய விசயம் தானே.

  அஜிதனுக்கு என் வாழ்த்துக்கள்.

  கே.ஜே.அசோக்குமார்.

 2. samyuappa

  நான்கு மாதம் முன்பு வரை பெங்களூர் இல் (Biocon) பணி புரிந்ததால் ஹோசூரில் இருந்தோம். தற்போது டெல்லி ல் (Dabur) இருப்பதால் வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன். டெல்லிக்கு வரும்போது தெரியபடுத்துங்கள். நிச்சயம் சந்திக்கிறேன். அன்புடன்…. காமராஜ்.ம

 3. Srini

  என்னது? சூழியல் படிப்பா? டாக்டர், இஞ்சினியர் படிப்புகளைத் தவிர மற்றவை எல்லாம் கேவலமான படிப்பென்பது தமிழ்நாட்டில் பன்னெடுங்காலம் வாழ்ந்து, தமிழருக்கு ஓயாது இலக்கியப் பணி ஆற்றிவரும் தங்களுக்கு எவ்வாறு தெரியாமல் போனது? வெட்கம், வெட்கம்.

 4. ஜெயமோகன்

  நான் சேர்த்தது அல்ல. அவன் ஒன்பதாவ்து வகுப்பு படித்த காலத்திலேயே அவனே முடிவெடுத்த விஷயம். அத்துறையில் ஏற்கனவே அவன் ஒரு குட்டி நிபுணன். அவன் அளவுக்கு அந்த துறையில் அசலாக வாசிப்புள்ள சிலரையே கண்டிருக்கிறேன். வரும்காலத்தில் பேசப்படப்போகும் ஆளுமை அவன்

  பொறியியலுக்கு பிள்ளைகளை அனுப்புபவர்கள் மேல் குறை சொல்வதற்கு ஏதுமில்லை. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய ஒரு குளிர் எலும்பை ஊடுருவது எந்த இந்திய தகப்பனுக்கும் உரியதே

  அவனது கனவுகளுக்கு தடையாக என் நடுத்த்ரக்குடும்ப மனநிலை நிற்கலாகாது என்பதற்காகவே சினிமாவை தேர்ந்தெடுத்தேன்.

  ஜெ

 5. samyuappa

  சூழியல் என்றால் “சுற்றுசூழல்” (“Environmental Science”) அறிவியல் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன் நான். தயவுசெய்து ஆங்கிலத்தில் “சூழியல்” என்றால் என்ன என்று தெரியபடுத்தவும்.

 6. ஜெயமோகன்

  environmental science என்பதைத்தான் சுற்றுச்சூழலியல் என்று மொழியாக்கம் செய்துகோன்டிருந்தார்கள். தியடோர் பாஸ்கரன் அவர்கள் சூழியல் என எழுதினார். காரணம் அதில் இருந்து மேலும் பல சொற்களை உருவாக்க வேண்டியிருக்கும்போது சொல் இன்னும் சுருக்கமாக இருப்பது நல்லது. சூழியலாளர் சூழியலழிவு போல

  ஜெ

 7. Dhiravia Muthu

  தங்களை எப்படி தொடர்பு கொள்வது?

 8. rajmohanbabu

  அஜிதனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  அன்புடன்,
  ராஜ்மோகன்

 9. sankarg.siva

  ajithanukku Vaazthukkal.
  “அவனது கனவுகளுக்கு தடையாக என் நடுத்த்ரக்குடும்ப மனநிலை நிற்கலாகாது என்பதற்காகவே சினிமாவை தேர்ந்தெடுத்தேன்.” Puriyala sir. you mean fulfilling financial needs?

 10. umashankar

  அய்யா, பெங்களூரு வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. எப்படி மீட் செய்வது? தெரிய படுத்தவும்.

  உங்கள் வாசகன்
  உமாசங்கர்

 11. kamaljamo

  எப்படி மீட் செய்வது? அவசியம் தெரிய படுத்தவும்

  சந்திக்க ஆவலாக இருக்கும் வாசகன்

  கமல்

 12. Karthik

  எப்படி தொடர்பு கொள்வது என தெரிவிக்கவும்.

 13. kthillairaj

  என் ஈமெயில் க்கு முகவரி தெரியபடுத்தவும் பெங்களூரில் எந்த கல்லூரியில் மகன் படிக்கிறான் என்று தெரியபடுத்தவும், நேரம் உள்ள பொது சென்று பார்கிறேன்

 14. sivasakthi

  அன்புள்ள ஜே எம்
  நான் சிவா சக்திவேல், ரொம்ப நாளைக்கு அப்புறம் எழுதுகிறேன்.
  எதில் மனம் ஊன்றி அதை நாடி ஒரு வெறியோடு செயல் படுகிறதோ அதில் தான் மனிதன் ஜெயிக்கிறான். பொறி இயல், மருத்துவம் பணம் கொடுக்கும், அனால் அதில் எதனை பேர் சந்தோசம் அடைகிறார்கள்.
  உங்கள் மகன் ஜெயிப்பான், அவனுடைய ஜெயம் பணத்தால் மதிப்பிட முடியாதது ஆகும்.

  “பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய ஒரு குளிர் எலும்பை ஊடுருவது எந்த இந்திய தகப்பனுக்கும் உரியதே”. இதுதான் உங்கள் கற்பனை அறிவுக்கு தடை போடுகிறதா?
  நீங்கள் சாதாரண இந்திய தகப்பன் இல்லையே?

  siva

 15. sivasakthi

  ஐயா

  முகப்பில் மைக்கை பிடித்து கொண்டு ஏன்? உங்கள் ஆற்றல் பேனாவில் அல்லவா? இல்லை இல்லை, கணினி தட்டச்சு அல்லவா?
  ஒரு நண்பர் சொல்வது போல் மத போதகர் போல்தான் தெரிகிறீர்கள்.
  siva

Comments have been disabled.