«

»


Print this Post

எண்ணெய்க் கசிவு பற்றி ஏன் தமிழ்ப் பத்திரிக்கைகள் எதிலும் ஒரு செய்தியும் இல்லை?


அன்பின் ஜெமோ,
மிகப்பெரும் சுற்றுச்சூழல் நாசச் செயலான ‘பிரிட்டிஷ் பெட்ரோலியம்’ எண்ணெய்க் கசிவு பற்றி ஏன் தமிழ்ப் பத்திரிக்கைகள் எதிலும் ஒரு செய்தியும் இல்லை? இந்தியாவில் அதுபோல் நிகழ வாய்ப்பில்லையாமா? காடுகளின் காதலனாகிய நீங்களோ, அல்லது சுற்றுச் சூழல் ஆர்வலரான தியடோர் பாஸ்கரனோ இது பற்றி அங்குள்ளவர்களுக்காக எழுதலாமே. நாளொன்றுக்கு ஐந்தாறு பேர் வந்து முப்பது வினாடிகள் இருந்து போகும் என் போன்றவர்கள் செய்யும் பதிவுகள் எந்தத் விழிப்புணர்வையும் ஏற்படுத்தப் போவதில்லை.

http://baski-lounge.blogspot.com/2010/05/blog-post_16.html,
http://baski-lounge.blogspot.com/2010/06/blog-post_14.html
http://www.huffingtonpost.com/news/bp-oil-spill

நன்றி – பாஸ்கரன்

அன்புள்ள பாஸ்கர்

நான் அத்துறையில் ஒரு வாசகன் மட்டுமே. தியடோர் பாஸ்கரன் எழுதிவார் என நினைக்கிறேன்.

இந்தவகையான கருத்துச்செயல்பாடுகளில் எந்த முயற்சியும் பயனுள்ளதே. தமிழகத்தில் சூழியல் சார்ந்த கருத்துக்களை ஈரோடு ஜீவானன்ந்தம் அவர்கள் முன்னெடுத்தபோது அதிகபட்சம் 250 பேர் தான் தொடர்பில் இருந்தார்கள். இன்று தமிழகத்தின் முக்கியமான கருத்துச்செயல்பாடுகளில் ஒன்று அது

ஊடகங்களை நாம் அறிவோம். தமிழ் ஊடகங்கள் எப்போதுமே பல விஷயங்களை முழுக்க மறைத்து வருவனவாக உள்ளன. தமிழ் ஊடகங்களில் எப்போதாவது ஆப்ரிக்க நாடுகளில் அராபிய இனவெறி உருவாக்கிவரும் பேரழிவு குறித்து ஒரு சொல்லேனும் வாசித்திருக்கிறீர்களா? இதுவும் அதே போன்றதே. இப்போது நம் ஊடகங்கள் அனைத்டும் – சிற்றிதழ்கள் உட்பட- அரசாங்கத்தின் பிடிக்குள் ஆழ்ந்து கிடக்கின்றன. அன்றாடம் துதிபாடுவதே செய்தியாக ஆகிவிட்டிருக்கிறது.

இங்கே எல்லா முக்கியமான செயல்பாடுகளும் மாற்றூச்செயல்பாடுகளாகவே இருக்கமுடியும்
ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7276/

6 comments

Skip to comment form

 1. uthamanarayanan

  Tamil media thriving on only cinema and related things, most of the magazines either monthlies or weeklies are no exception in this regard.Bhopal is even now talked about not because of the concern of these media but owing to the public fury and empathy created due to the lackadaisical way the case was treated by the CBI [ CBI now says they need more lawyers to represent in the courts ] and the lack of societal concern shown by the Judiciary as they are bound by their oath of office taken by them in the name of the Constitution.Everyone in this country started to act as if what they do is a last cadre job of government from 10 to 5 including the Ministers. Now Prime Minister says Bhopal will happen and the country has to progress.There can be nothing more disgusting and deplorable. Only an Indian Prime Minister can make such a statement and get away. Imagine if the US President Obama had ever said this, even in the context of the recent oil spill in the Gulf of Mexico, the people of the US would have castigated him by now. Prime Minister asked a group of Ministers to come out with a report in a few days, which is completely impossible task owing to the sheer volume of files by CBI, judiciary,NGO’s, and other public -concerned individuals.All these being done for buying time and another 10 or 15 years gone and the Government by then will try to find fault with those dead and gone .Democracy……….. this is ………Is it? Poor are the disposable commodities in this country. If any accidents happen , announce the compensation, there ends the matter.Don’t ever correct the cause and root out the problem.God save this country.Total irresponsibility and non-accountability are the thumb rules of the so called leaders.

 2. samyuappa

  சுற்றுசூழல் நலன் காத்தல் என்பது நம்மை நாமே சுத்தம் செய்துகொள்வது போன்றது. குளிப்பது, பல் துலக்குவது போன்று… இயற்கைக்கு கேடு விளைவிப்பவர்கள் துளி கூட மனிதாபிமானமற்றவர்கள். எல்லாம் சுயநலம் தான் காரணம். நான் நட்டு வைத்த புங்கமரம் முற்றாக வெட்டுண்டதை பார்த்த என் இதயம் ஒரு வினாடியில் வெளியேறி துடித்து அடங்கியது. என்னவோ… அவரவர்களுக்கு தெரிந்ததை அவரவர்கள் செய்கிறார்கள். ஒரு பத்திரிகைக்கு வழக்கமாக கமெண்ட் எழுதுவேன். பிரசுரிப்பார்கள். ஒருநாள் பத்திரிகையாளர்களை பற்றி -அவர்கள் செய்திகளை கோர்க்கும் லட்சணம் பற்றி – துல்லியமாக, ஆதாரத்துடன் எழுதினேன். அவ்வளவ்தான் …அம்பேல்….. என் மேல் பயங்கர காண்டில் இருக்கிறார்கள். எதையும் அப்போதிலிருந்து பிரசுரிப்பதில்லை. நான் நினைத்துக்கொள்வேன் “பாமர மக்கள் ஆகிய நாம் யாரோ எழுதுவதை நம்பி நம் அறிவை அழித்துக்கொள்கிறோம்” என்று. எனவே..இப்போதெல்லாம் செய்தித்தாள் – தொலைகாட்சி பார்ப்பதை அறவே விட்டுவிட்டேன். சுயமாக ஏதாவது யோசித்தால் சுதந்திரமாக இருக்கிறது.

 3. vks

  அலட்சியம் என்பதைக்காட்டிலும் ஒரு வகை சம்பிரதாய தொழில் உணர்வு தான் காரணமாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது. எதோ ஒரு புரோகிதர் போன்று சம்பிரதாய சடங்குகளை நிறைவேற்றும் இடமாக பத்திரிகைத் தொழில் தொடர்கின்றது.
  செய்தித் தொழில் விழிப்புணர்ச்சி என்ற துறையை நமது செய்தியாளர்கள் கையில் எடுப்பதில்லை. அமைச்சரின் உரை, சில கிசு கிசுக்கள் என மாமுலான விடயங்களில் பக்கங்களை நிரப்புகின்றார்கள்.
  ஜெயகாந்தனின் வார்த்தைகளில் கூறுவதானால் “செய்திப் பொறுக்கிகள்” அவ்வளவுதான்.
  அரசின் பிடிக்குள் பத்திரிக்கை உலகம் இருக்கின்றது என பொதுப்படக் கூறுவதில் உடன்பட முடியவில்லை. பல விடங்களில் அரசுக்காக் மனச்சாட்சியைத் தொலைத்துவிட்டு விருதுகளையும் லஞ்சங்களையும் எதிபார்க்கும் செய்தியாளர்களும் மலிந்துவிட்டார்கள் என்பது உண்மை.

 4. sarwothaman

  சூழல் சரியில்லைதான்.ஆனால் முற்றிலுமில்லை.தினமணியின் இன்றைய தலையங்கம் இதைப்பற்றிதான்.ஜே.சி.குமரப்பாவின் ஐம்பதாவது நினைவு நாள் பற்றி எந்த தீவிர இதழும் கட்டுரை வெளியிடாத போது தினமணி தனி இதழே கொண்டுவந்தது. அதன் ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்களுக்கு காந்தியம் மீது அதீத நம்பிக்கை உள்ளது என்பது அவரது செயல்களில் தெரிகிறது.தினமணியை தொடர்ந்து எல்லோருக்கும் வாசிக்க நான் நிச்சயம் சிபாரிசு செய்வேன்.கடைசி பக்கத்தை அல்ல!

  சர்வோத்தமன்.

 5. ஜெயமோகன்

  “When I met Theodore Baskaran in the last week in his book release (The sprint of Black Buck) tried to discuss with him and would like to share his thoughts. But unfortunately due to his busy schedule we couldnt make it. But One of my other friend who is enthusiast in nature and conservation has wrote something about it. I would like to share this with you. Even i am not sure why the indian Media totally and purposely avoided this news. However Thanks for bringing it to your readers view. Keep the faith in nature as your point. Thanks.”

  http://thekkikattan.blogspot.com/2010/06/blog-post_14.html

 6. rajeshrangan

  இந்த சொல்வனம் இதழில் ‘எண்ணெய்க் கசிவு’ பற்றி இரண்டு கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன:

  எண்ணெய்ச் சிதறல் பற்றி : சில எண்ணச் சிதறல்கள் – ராமன் ராஜா

  எண்ணெய்ச் சிதறல் – என்ன நடக்கிறது? – ரஞ்சன்

Comments have been disabled.