தரமான இணையதளங்கள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

கீழ்கண்ட அறிவிப்பை தங்களுடைய வலைதளத்தில் வெளியிட முடியுமா என்பதை தயவு செய்து பரிசீலியுங்கள். இது எங்கள் நிறுவனம் சார்ந்த அறிவிப்பு என்றாலும் பொதுநலன் சார்ந்த அறிவிப்பு தான். மற்றபடி உங்களுடைய முடிவிற்கு தலை வணங்குகிறோம்.

அன்புடன்
யோகராஜ்
பர்பிள் ரெயின் மீடியா சொல்யூஸன்ஸ்

நண்பர்களே,

தமிழில் தரமான இணையதளங்கள் உருவாக்கும் முயற்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிறுவனம் எங்களுடைய பர்பிள் ரெயின் மீடியா சொல்யூஸன்ஸ் நிறுவனமாகும்.

www.writerravikumar.com
www.prapanchan.in
www.sramakrishnan.com
www.vadakkuvaasal.com

ஆகிய தமிழ் இணையதளங்கள் எங்கள் நிறுவனத்தில் உருவானவையே. தற்சமயம் நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கான ஒரு பெரிய இணையதளம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

எங்களுடைய நிறுவனத்தின் ஒரு பகுதி சேவையாக பொதுநலனில் அக்கறை கொண்டு செயல்படும் நண்பர்களுக்கு, அமைப்புகளுக்கு எங்களுடைய பங்களிப்பாக பணமில்லாமல் இணையதளங்கள் உருவாக்கித் தர விரும்புகிறோம். இணைய தளத்திற்கான தேவை இருந்தும் அதற்கான நிதி ஆதாரம் இல்லாத பொதுநலன் சார்ந்த அமைப்புகளுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.Content Management System என்று சொல்லப் படும் உள்ளடக்கங்களை நீங்களே மாற்றிக்கொள்ளும் வசதி கொண்ட தேர்ந்த இணையதளங்களாக அவைகள் இருக்கும்.

விருப்பமுள்ள நண்பர்கள் எங்களுடைய இமெயிலுக்குத் தொடர்பு கொள்ளலாம்[email protected]

மிக்க அன்புடன்
யோகராஜ்
Purple Rain Media Solutions

முந்தைய கட்டுரை”இன்றைய காந்தி” புத்தக விமர்சன நிகழ்ச்சி
அடுத்த கட்டுரைவடக்கு் முகம்-மீள்வாசிப்பு