«

»


Print this Post

சென்னைக்கு சிறில்


இந்த இணையதளத்தினை நடத்தும் நண்பர் சிறில் அலெக்ஸ் கிட்டத்தட்ட எட்டுவருடக்காலம் அமெரிக்காவில் கணிப்பொறித்துறையில் வேலைபார்த்துவிட்டு சொந்த மண்ணில் இருக்கவேண்டும் என்ற விருப்புடன் சென்னைக்கு திரும்புகிறார். ஊர்திரும்புவதுகுறித்து நான் அவருக்கு அளித்த பயமுறுத்தல்கள் எதுவும் பலிக்கவில்லை என்று நினைக்கிறேன். வேலையின் உற்சாகம், அழகிய சுத்தமான சூழல், குழந்தைகளுக்கு உத்தரவாதமான எதிர்காலம் ஆகியவற்றை அவர் இழக்கிறார்.

மறுபக்கம் எப்போதும் சூழ்ந்திருக்கும் தனிமையை வெல்கிறார். சமானமான பல மனங்களை கண்டுகொள்ள முடியும். கலை இலக்கியம் போன்ற துறைகளில் ஆர்வமிருப்பின் உற்சாகமும் படைப்பூக்கமும் நிறைந்த ஓரு வட்டத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். பத்துவருடம் அமெரிக்காவில் இருந்தபின் ஊர் திரும்பி மூன்றுவருடங்களாக இங்கிருக்கும் கெ.பி.வினோத் இசையிலும் இலக்கியத்திலும் ஒரு சுற்று வந்துவிட்டார். எட்டுமடங்கு சம்பளம் தருவதாக இருந்தாலும் சென்னை விட்டு போவதாக இல்லை. போவதென்றால் நாகர்கோயிலுக்கு போக தயார் என்கிறார். சிறிலும் அப்படிச் சொல்வார் என எதிர்பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7267

10 comments

Skip to comment form

 1. கோவை அரன்

  வாங்க சிறில் அண்ணா , வரவேற்கிறோம் ,

 2. Bharati Mani

  என்னதான் நம் அரசியலும், சென்னை வெயிலும் நம்மைப்படுத்தினாலும், இங்கே கிடைக்கும் பங்கனப்பள்ளி மாம்பழத்துக்கும், துரைசாமி ரோடு சப்வேயில் கிடைக்கும் பலாச்சுளைக்கும், அவ்வப்போது நடக்கும் இலக்கியக்கூட்டங்களுக்கும் சென்னையைவிட்டால் வேறு வழியில்லை!

  Welcome back Cyril! You won’t regret your decision!

  பாரதி மணி

 3. venkatramanan

  வாங்க சிறில்! வாழ்த்துகள்.
  கலை இலக்கிய வாசல்கள் நிறையவே இருக்கின்றன:
  * கிழக்கு மொட்டைமாடி (பைத்தியக்காரன்(aka சிவராமன்) முன்னின்று நடத்தும் முதல் ஞாயிறு உலகத் திரைப்படங்கள்)
  * ஞாநியின் கேணி (Gnani.net, இரண்டாவது ஞாயிறு இலக்கிய நிகழ்வு)
  * பத்ரி முன்னின்று நடத்தும் தமிழ் பாரம்பரியம் (இரண்டாவது சனிக்கிழமை)
  இது உதாரணம் மட்டுமே இப்படி பல விசயம் நடக்குது நாட்டில்!
  நிச்சயம் சந்திப்போம்.

  அன்புடன்
  வெங்கட்ரமணன்

 4. chidambaram

  சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா…

  வருக. வருக

 5. rangadurai

  இவாஞ்சலிக்க கிறிஸ்தவ அடிப்படைவாதமும் வெள்ளை இனவெறியும் பெருகிவரும் அமெரிக்காவை விட்டுச் சென்னை திரும்பிவிடுவதே புத்திசாலித்தனம். இதை சிறில் போலவே பிறரும் விரைவிலேயே புரிந்துகொள்வர்.

  பா. ரெங்கதுரை

 6. vks

  அங்கே போனால் இது கிடைக்காது அது கிடைக்காது என தேடித் தேடி பெட்டியை நிறைத்துக் கொண்டுவரும் தேச பக்தர்கள் நிச்சயம் கவலைப்பட சாத்தியம் உண்டு.

  அங்கே இருப்பது போதும். அதிலி இருந்தே வாழ்வைத் தொடரலாம் என எண்ணி வருகின்ற தேச பக்தர்கள் நிச்சயமாக மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் தொடருவார்கள்.
  சிறில் எந்த ராகமோ?
  நாம் அறியோம் பரம பிதாவே!

 7. raviratnam

  Welcome Cyril, All the best for a lovely lively life in india

 8. venu

  சிறில் ஊரை விட்டுப் போனது என்னைப் போல இன்னும் இங்கேயே இருக்கும் ஆட்களுக்குத்தான் பெரிய இழப்பு. தொலை பேசுவது எளிதுதான், ஆனால் 11 மணி நேர வித்தியாசத்தை நினைவில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்!

  வேணுகோபால் தயாநிதி.

 9. ramji_yahoo

  வாருங்கள் சிறில், தைரியமாக. வெளிநாட்டு வாழ்வு ஒரு மாயை.
  நம் இந்திய வாழ்வுதான் மனதிற்கு பிடித்த மகிச்சி வாழ்வு.

  நீங்கள் வார்த்த படவே மாட்டீர்கள் உங்கள் முடிவு குறித்து.

 10. venkatramanan

  சிறில்
  ஜூன் 5: தமிழ் பாரம்பரியம் – எஜ்ஜி உமாமஹேஷுடன் சந்திப்பு தங்கள் மேலதிக கவனத்திற்கு!

  அன்புடன்
  வெங்கட்ரமணன்

Comments have been disabled.