கலாப்பிரியா படைப்புக் களம் – நிகழ்வு கோவையில்

நண்பர்களே ,

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சென்ற ஜனவரி 2010ல் ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு நடத்தியது.

இரண்டாவது நிகழ்வாக கவிஞர் காலாப்பிரியா படைப்புக்களம் என்ற நிகழ்வை நடத்த இருக்கிறது ,வரும் மே 09 (09/05/10) ஞாயிறு காலை 10 மணியளவில் சன்மார்க்க சங்க வளாகத்தில் (பூமார்க்கட் அர்ச்சனா தர்ச்சனா திரையரங்கு சாலை) நிகழ்ச்சி தொடங்கும் .

படைப்பாளிகள் ஜெயமோகன், சுகுமாரன், மரபின் மைந்தன், வெண்ணிலா, வா.மணிகண்டன் ஆகியோர் கலந்துடையாடுகின்றனர். நாஞ்சில் நாடன் அவர்கள் தலைமை ஏற்கிறார்.

வண்ணதாசன்,  வண்ணநிலவன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

கலாப்பிரியா அவர்கள் தன் படைப்பனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

வரவேற்பவர் செல்வி.கனகலட்சுமி. தொகுத்துரைப்பவர் நண்பர் செல்வேந்திரன்.

சனிக்கிழமை காலையிலிருந்தே ஜெயமோகன் அவர்கள் நம்மோடு கோவையில் இருப்பார் .

அனைவரையும் மிக்க அன்போடு எதிர்பார்க்கிறோம் .

தொடர்புக்கு . அரங்கசாமி 9344433123 , அருண் 97509 85863

முந்தைய கட்டுரைகிளி சொன்ன கதை – குறுநாவல் தொகுப்பு
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம்