ஒரு சிறுகதை

அன்புள்ள ஆபிதீன்,

சென்ற இதழில்  ‘அங்கன ஒண்ணு இங்கன ஒண்ணு’  [  http://www.thinnai.com/?module=displaystory&story_id=11005024&format=html ] சிறப்பான கதை.கதையின் ஓட்டம் மென்மையாக மறைத்துச்செல்லும் வாழ்க்கையின் சிடுக்குகள் மூலம் முக்கியமான கதையாக ஆகிறது இது.

பலவகையான நகைச்சுவைத்துணுக்குகளின் தொகைதான். ஆனால் அவற்றை இணைத்திருந்த விதமும் அதில் இருந்த சரளமும் ஆழமான படைப்பூக்கத்தைக் காட்டின. வாழ்த்துக்கள்

ஜெயமோகன்

அன்பின் ஜெயமோகன்,

பாராட்டுக்கு நன்றி.

என் நண்பர்களில் சிலர் உங்கள் மேல் கோபமாக இருப்பதை அறிந்து நீங்களும்
என்னைத் தவறாக நினைப்பீர்களோ என்று சங்கடப்பட்டுக்கொண்டிருந்தேன். இன்று
அது நீங்கியதில் மகிழ்ச்சி.

ஒரு உதவி. மகனார் அஜீதனும் நீங்களும் – தோளில் கைபோட்டு – நடந்துபோகிற
ஒரு புகைப்படத்தை உங்களின் தளத்திலிருந்து முன்பு எடுத்து
வைத்திருந்தேன். எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் அது. அது பெரிய
sizeல் இருந்தால் எனக்கு அனுப்ப இயலுமா?

குடும்பத்தினர் அனைவருக்கும் என் ஸலாம்.

அன்புடன்,

ஆபிதீன்
http://abedheen.wordpress.com/

அன்புள்ள ஆபிதீன்,

உங்கள் நண்பர்கள் என் மேல் கோபமாக இருக்க பல காரணங்கள் இருக்கலாம். என் தரப்பிலும். அதற்கும் உங்கள் எழுத்து மீது நான் கொண்டிருக்கும் பிரியத்துக்கும் என்ன தொடர்பு?

ஒரு சோதனை செய்தேன். உங்கள் கதையை அப்படியே வாய்மொழியாக சாப்பிடும் நேரத்தில் என் மகளுக்குச் சொன்னேன். சிரிப்பு வந்து சோறு தெறித்து விட்டது.

நல்ல கதையை ஏதோ ஒருவகையில் சொல்லவும் முடிய வேண்டும் என்பது என் அளவுகோல்களில் ஒன்று
ஜெ
புகைப்படத்தை அனுப்பி வைக்கிறேன்

முந்தைய கட்டுரைஉலோகம் நாவல் தொகுப்பு
அடுத்த கட்டுரைகண்ணதாசன்