ஞாநியின் இரு நாடகங்கள்

ஞாநியின் இரு நாடகங்கள்

மே 2,

ஞாயிறு நிகழ்ச்சிகள்:

பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு ஞாநி மொழி மாற்றம் செய்திருக்கும் இரு நாடகங்கள் மே 2 ஞாயிறு அன்று நுங்கம்பாக்கம் அலையன்ஸ் பிரான்சே அரங்கில் நிகழ உள்ளன.

மதியம் 4 மணிக்கு ஞானபாநு விஷுவல் மீடியா ஞாநியின் இயக்கத்தில் நிகழ்த்தவிருக்கும் நாடகம் – ‘ஒரு விசாரணை’. இது ஆங்கில நாடகாசிரியர் ஜே.பி.பிரீஸ்ட்லீயின் ’ ஆன் இன்ஸ்பெக்டர் கால்ஸ்’ நாடகத்தின் தமிழ் வடிவம். நாம் யாரும் தனித்து வாழமுடியாது; நாம் ஒவ்வொருவரும் பிற மனிதர்களின் வாழ்க்கைக்குப் பொறுப்பானவர்கள் என்பதை அழுத்தமாக சொல்லும் நாடகம் இது. இதில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும் நடிகருமான பாத்திமா பாபு முதல்முறையாக ஞாநியின் இயக்கத்தில் மாற்று நாடகமுயற்சியில் பங்கேற்கிறார். இதர நடிகர்கள் பரீக்‌ஷாவைச் சேர்ந்த நீல்சன், ராம்ஜி,தனசேகர்,சுபாஷ்,ஐஸ்வர்யா.

மாலை 7 மணிக்கு சென்னையின் மூத்த மாற்று நாடகக் குழுவான பரீக்‌ஷா நிகழ்த்தும் ‘ வட்டம்’ ஜெர்மன் நாடகாசிரியர் பெர்டோல்ட் பிரெக்டின் ‘தி காகேசியன் சாக் சர்க்கிள்’ ஞாநியின் தமிழ் வடிவில் உருமாற்றம் அடைந்துள்ளது. இதை இயக்குபவர் ஜெயசந்திரன். பெண் சிசுக் கொலை, பெண்கள் அதிகாரம் பெறுதல், ஒரு சொத்தின் நியாயமான உரிமை யாருடையது என்பது போன்ற பல அம்சங்கள் இந்த நாடகத்தில் இடம் பெறுகின்றன.

ஒவ்வொரு நாடகத்துக்கும் நன்கொடைச் சீட்டு ரூ 50. அரங்கில் கிடைக்கும். தொடர்புக்கு: 9444024947.

—————–

முந்தைய கட்டுரைமத்தகம் நாவல் தொகுப்பு
அடுத்த கட்டுரைபூமி சூக்தம்