நூறுநாற்காலிகள்-கடிதம்

அன்பள்ள ஜெ

அங்கதக்கட்டுரைகளின் வழிதான் தாங்கள் அறிமுகம். நானும் திருநெல்வேலி மாவட்டம் தான், தென்காசி, அதனால் வட்டார வழக்கு கொண்ட கதைகள் மேல் ஓர் இனம்புரியாத ஈர்ப்பு. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் உங்கள் எழுத்துக்களை நோக்கி தூண்டியிருக்கலாம்.

சமீபத்தில் அப்படி நான் படித்த கதைகளில் என்னை மிகவும் பாதித்தது “நூறு நாற்காலிகள்” .

தங்களின் எழுத்துக்கள் மட்டுமே இவ்வளவு நுணுக்கமாக விளிம்பு நிலை மனிதர்களை பற்றி காண்கிறேன்.

கதை நெடுகவே மௌனமாக இந்த சமுதாயம் கட்டி வளர்த்த பிரிவினைகளின் கொடூரம் அரற்றிக் கொண்டே இருந்தது. சாதியின் விளைவு பற்றி இன்றைய வாசகர்களுக்கு தெளிவான பதிவு.

மிக்க நன்றி

க.ஆனந்த பாபு
திருச்சி.

அன்புள்ள ஜெ

மிகவும் பிந்தி இப்போதுதான் நூறுநாற்காலிகள் கதையை வாசித்தேன். தனியான நூலாக அதை எழுத்து வெளியிட்டிருந்தது. அற்புதமான சிறுகதை. நம்முடைய சமூக மனசாட்சி கொஞ்சம் கொஞ்சமாக எப்படி விழித்துக்கொள்கிறது என்பதை வாசிக்கமுடிந்தது. கூடவே இப்போதுகூட நாம் உள்ளூர எந்த அளவுக்கு சாதி மத உணர்ச்சிகளுடன் இருந்துகொண்டிருக்கிறோம் என்பதையும் புரிந்துகொள்ளமுடிந்தது

கப்பனின் அம்மா கதாபாத்திரத்தை மறக்கவே முடியவில்லை. அந்த அம்மாவைப்போல ஒரு கதாபாத்திரம் சமீபத்தில் இங்கே வந்ததில்லை

ஜான் பொன்குமார்

முந்தைய கட்டுரைசந்தைமொழி
அடுத்த கட்டுரைசலசலப்புகள்