கம்பராமாயண கூட்டு வாசிப்பு பற்றி

அன்புள்ள ஜெ,

நலமா? எங்களது கம்பராமாயண கூட்டு வாசிப்பு பற்றி வலைத்தளத்தில் எழுதியதற்கு மிக்க நன்றி.

// பெங்களூரில் சொக்கன் , ஜடாயு இருவரும் நண்பர்களுடன் கம்பன் வாசிக்கிறார்கள். //
என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த வகுப்புகளில் எங்களது முக்கியமான வழிகாட்டியாகவும், ஆசானாகவும் இருப்பவர் ஹரி கிருஷ்ணன் என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன். கம்பராமாயணத்திலும் பழைய இலக்கியங்களிலும் மரபார்ந்த புலமை கொண்ட தமிழறிஞர். எனக்குத் தெரிந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இணையத்தில் தொடர்ந்து கம்பனைக் குறித்து எழுதி வருபவர். “அனுமன் – வார்ப்பும் வனப்பும்” என்ற நூலின் ஆசிரியர். அவரது வழிகாட்டுதலில் இந்த வகுப்புகள் முறை தவறாமலும் தொடர்ச்சியாகவும் சிறப்புற நடந்து கொண்டிருக்கின்றன.

அன்புடன்,
ஜடாயு

முந்தைய கட்டுரைமூதாதையர் குரல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 29