«

»


Print this Post

வைரஸ் எச்சரிக்கை – சரிசெய்யப்பட்டது


நிர்வாகி வைரஸ் பிரச்சனையை சரி செய்துள்ளார், தளம் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது .

*******************************************************************************

நண்பர்களே ,

சில நாட்களாக நம் தளம் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது , முதல் பக்கத்துக்கு பின் வைரஸ் தாக்கியுள்ளதாகவும் , அதை நீக்க இதை இன்ஸ்டால் செய்யுங்கள் என்றும் செய்தி வருகிறது .

அப்படி எதையும் நிறுவ வேண்டாம் , அது உங்கள் கணினியை பாதிக்கும் , தளத்தை சுத்தப்படுத்தும் வேலை நடந்துகொண்டுள்ளது , அது முடியும் வரை புதிய பதிவுகள் எதுவும் இருக்காது .

சிரமத்துக்கு மன்னிக்கவும் .

மேற்பார்வையாளர்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7200

14 comments

Skip to comment form

 1. Tharamangalam Mani

  அன்புள்ள ஜெயமோகன்,

  நமது வலை பதிவு நிறுத்தப்படும் எனபது மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. பல நண்பர்கள் பல விதமான வெளிப்பாடுகளை பதிததிருக்கிரார்கள்.எனது நிலைமை இதுவே. இந்த வலை உங்களுடையதிவிட எங்களுடையதாகிவிட்டது. நீங்கள் அதை மனம்கொண்டு, தயவு செய்து ஏன் என்பதற்கு பதில் கூற வேண்டும். அடுத்தது,

  இளையராஜாவின் இசையைப் பற்றி நீங்கள் எழுதிய பதிவுகள். இன்று நீண்ட நாட்க்கள் கழித்து பல பாடல்கலைக் கேட்க்க நேர்ந்தது. பல ஒத்த ரசனையுள்ள நண்பர்களுடன். ஒரு தீர்மானம். மிகவும் அதிர்ஷ்டமில்லாத மியூசிக் டைரக்டர் என்று. சினிமா பாடல் பலரை சென்று அடைவது அல்லது அடைந்தது சினிமா மூலம் தான். அவரது பாடல்கலை விசுவல்ஆக காண்பிக்கத் தேவையான திறமைகொண்ட டைரக்டர்கல் துரதிர்ஷ்டவசமாக தமிழ் சினிமாவில் அந்தநேரத்தில் இல்லாமல் போனது. நீங்கள் பாம்பே ஜெயஸ்ரீ யும் T M KRISHNAAUM சேர்ந்து செய்த FEATURE பிலிம் பார்தீர்களா என்று தெரியாது. “மார்கழி சம்திங்” என்று பெயர். எனக்கு சத்யம் சினிமா சென்னையில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. அன்றிலிருந்து நான் கனவு காண்பது எல்லாம், இன்றைய ஏதாவது நல்ல டைரக்டர்கல் ஒரு 25 பாடல்கலை எடுத்து படம் பண்ணினால், எப்படி இருக்கும்? ஒரு உதாரணம், “பூவே செம்பூவே” பாடல். இதை விட மோசமாக ஒரு பாடலை விசுஅல் ஆக படம் பண்ண முடிமா? என்ன சொல்கிறீர்கள்?

 2. Elango Kallanai

  அன்பான ஜெயமோகன் வாசகர்களே,
  இன்றைய தினம் பிறந்த நாள் காணும் அன்பு அண்ணன், பொறுப்பு எம் ஜி ஆர் , ஜெயமோகன் (கைதட்டுங்கள், விசில் அடியுங்கள்) ஆகையாலே இன்றைய தினம் ஒரு வயதை கடந்த பால் மனம் மாறாத அண்ணன் பொறுப்பு எம் ஜி ஆர் ஜெயமோகன் , (கைதட்டுங்கள், விசில் அடியுங்கள்) மீண்டும் நான் சொல்லிக் கொள்வதெல்லாம் இது தான். என்ன தான் பிறந்த நாளை ரகசியமாக வைத்திருந்தாலும் இன்றைய தினம் பிறந்த நாள் காணும் அண்ணன் எம் ஜி ஆர் , (கைதட்டுங்கள், விசில் அடியுங்கள்) அவர்களை வாழ்த்த எனக்கு ஒரு வயது கூட ஆகவில்லை. ஆகவே அன்னாரின் அறுபதாம் அகவையில் நானும் ஒரு வயது அடைந்த பின்பு வாழ்த்தி கொள்ளலாம் என்று நினைக்கிறன். இன்றைய தினம் நீங்களும் இது போல போர் வாழ்க நின்று பொறுப்பு எம் ஜி ஆர் ,ஜெயமோகன் (கைதட்டுங்கள், விசில் அடியுங்கள்). இன்றைய தினம் திராவிட முகமன் செய்து கொள்வதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன்.

 3. Sweetrascal

  அன்பு ஜெ,
  இரண்டு நாட்களுக்கு முன்பே உங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சொல்லிவிட்டேன்.இருந்தாலும் இன்று தான் உங்களுக்கு பிறந்த நாள் இன்றும் சொல்கிறேன்.பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.என்னுடைய ஆயுளில் 25% எடுத்து கடவுள் உங்களுக்கு கொடுக்க கடவுளிடம் நான்வேண்டிக்கொள்கிறேன்.

 4. Sweetrascal

  அன்பு ஜெ,
  இரண்டு நாட்களுக்கு முன்பே உங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சொல்லிவிட்டேன்.இருந்தாலும் இன்று தான் உங்களுக்கு பிறந்த நாள் இன்றும் சொல்கிறேன்.பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.என்னுடைய ஆயுளில் 25% எடுத்து கடவுள் உங்களுக்கு கொடுக்க கடவுளிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்.

 5. manikandavel

  ஜெயமோகன் சார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அங்காடித்தெரு போல், நான் கடவுள் போல் பல அற்புதமான படைப்புகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறோம்.

 6. சண்முகம்

  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

 7. saran76

  எங்கள் அன்புக்குரிய இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ….

 8. Thanvi

  கும்பமேளா, கங்கா நதி வர்ணனை அற்புதம். அந்த எளிய கிராமத்து மக்களின் உயர்ந்த மனதின் பின்னணி அவர்களின் பக்தி நதி தேவதைக்கு
  அளிக்கும் மரியாதை – எங்களை 360 degrees திரும்பி பார்க்க செய்தமைக்கு நன்றி. Many Happy Returns of the Day.

 9. Sasi

  அன்புள்ள ஜெயமோகன்,
  நான் பஷீர்,தகழி,கமலாதாஸ்,சக்கரியா,எம்.டி.வி,முகுந்தன் மற்றும் மலையாளத்தின் முக்கியமான சிறுகதைகளை மலையாளத்திலேயே படிக்க விரும்புகிறேன்.[எனக்கு ஓரளவு மலையாளம் படிக்க தெரியும்].அதற்கான நல்ல இணையப் பத்திரிகையோ அல்லது ப்ளாகோ இருந்தால் என் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிப்பீர்களா?
  இதோ என் மின்னஞ்சல் முகவரி : [email protected],[email protected]

  அல்லது உங்கள் தளத்தில் வெளியிட்டால் என்னைப் போன்று பலருக்கும் உதவியாக இருக்கும்.

  அன்புடன்,
  சசி

 10. ramji_yahoo

  எவ்வளவோ பெரிய தடைகளை எல்லாம் கடந்த தங்களுக்கு, இது எல்லாம் சிறிய விஷயம்.

 11. ramkathir

  நேற்று புதிதாய் பிறந்த அன்பு குருவிற்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  கதிரேசன், ஒமன்

 12. baski

  ஜெமோ அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்நேரத்தில் ஒரு வாசகர் விருப்பம்: மகாபாரதத்தில் என்னை மிகவும் பாதித்த பகுதி ‘பாஞ்சாலி சபதம்’. இது தொடர்பாக ஏதும் நாடகம் எழுதி இருக்கிறீர்களா? இல்லையெனில் அண்மையில் எழுதும் உத்தேசம் உள்ளதா?

 13. G Balamurugan

  அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,
  மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 14. ஜெயமோகன்

  அன்புள்ள திரு.ஜெயமோகன்,

  பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  தாங்கள் பன்னெடுங்காலம் சீரோடும் சிறப்போடும் நல்ல உடல்நலத்தோடும் வாழ பிரார்த்திக்கிறேன்.

  கும்பமேளா பதிவுகளை படித்த பின்பு 11 வருடங்களுக்கு முன் நான் ஹர்த்வார்-ரிஷிகேஷ் சென்றிருந்த நினைவுகள் மீண்டன. நான் சென்றது கடும் குளிரடிக்கும் மார்கழி மாதத்தில் மொத்தமே இரண்டு நாட்கள்.

  லக்ஷ்மண் ஜூலாவில் நின்று கொண்டு பார்த்த போது மந்தமாக ஓடிய கங்கையின் வெளிர் நீலத்தில் இளங்காலை சூரிய ஒளியில் மிண்ணிய மஞ்சள் நிற மீன்கள், படு சுத்தமாக விளங்கிய திரிவேணி காட், அதன் கூழாங்கற்கள், அங்கு கடும் குளிரில் குளித்தபின் ஏற்பட்ட உடல் நடுக்கம், பத்தடி தள்ளி குளித்த ஒரிய இளம்பெண், (மற்றும் அவள் கணவன், மாமனார்/மாமியார்), ஹர்-கி-பௌரியில் ‘குதிரை இழுத்து’ செல்லும் வேகவதியால் பிய்த்து எறிந்து செல்லப்பட்ட பூணல் (அதோடு பூணல் போடுவது நின்றுபோயிற்று), அன்று முன்னிரவு முழுதும் ரிஷிகேஷில் ஓட்டல் அறையில் இருந்து கேட்ட கங்கையின் ‘கல-கல’ஒசை.வாழ்வின் சில கணங்கள் மட்டும் நீண்டு நினைவில் நிலைபெரும் விதம் ஒரு மாபெரும் விந்தை.

  அன்றிலிருந்து எங்கு நதி வெளிர் நீலத்தில் வளைந்து ஓடினாலும் அது கங்கையே. எந்த இரவில் சிறுஓடை கூழாங்கற்களில் கலகலத்து ஓடும் ஒசை கேட்டாலும் அதுவும் கங்கையே.

  எழுத்தின் வல்லமையைப் பற்றி நீங்கள் பலமுறை கூறியிருக்கிறீர்கள். அது உணர்வுரீதியாக புரிபடும்போது அதுவும் ஒரு பெரும் விந்தை தான்.

  அன்புடன்,
  ஸ்ரீநிவாஸன்

  அன்புள்ள சீனிவாசன் அவர்களுக்கு

  ரிஷிகேஷ் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. கட்டிடங்கள் தடையில்லாமல் கட்டப்படுகின்றன. உங்கள் நினைவில் உள்ள அந்த இடம் இப்போது புறத்தே இருக்காது. கங்கை மட்டும் இருக்கும், எப்போதும்
  ஜெ

Comments have been disabled.