உங்கள் படம்

book fair JM photo

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் வாசகி ஜெயா என்பவர் சென்னை புத்தகக் கண்காட்சியில் உங்கள் படம் வைக்கப்படவில்லை என்று சொல்லி இருந்தார்.

கிழக்கு பதிப்பகத்தில் உங்கள் படம் வைக்கப்பட்டிருந்தது. புகைப்படத்தை இணைத்திருக்கிறேன்.

இதற்கு முன்பு நிறைய புத்தகக் கண்காட்சிகளில் தமிழினி மற்றும் உயிர்மை அரங்குகளில் உங்கள் படம் இடம்பெற்றிருந்ததையும் நான் பார்த்திருக்கிறேன். கிழக்கு அரங்கிலும் இடம்பெற்றிருந்திருக்கிறது.

நன்றி,
ஹரன்பிரசன்னா

முந்தைய கட்டுரைமங்கோலியாவின் பவதத்தர்
அடுத்த கட்டுரைவடகிழக்குப் பயணக்குறிப்புகள்