ஜெயமோகன் அவர்களுக்கு
இவரை போன்று பேசுபவர்கள், அதை உன்மை என்றே சிந்திப்பவர்களை பார்த்தாலும் கேட்டாலும் படித்தாலும் கேட்ட கோபம் வருகிறது.
பொறுமையாக சிந்தித்தால் இப்படி பேசுபவர்கள் மிக நிச்சயமாக, 2000 – 2005 வருடங்கள் வாக்கில், மிக நல்ல வளர்ச்சி அடைந்து, அசைக்க முடியாத இடத்தில் தங்களை நிறுவிக் கொனண்டவர்கள் என்று புரியும். இவர்களால் வேறு தரப்பை சிந்திப்பது கூட முடியாது. அந்த தரப்பையும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள் என்றாலே கொபம் கொள்வார்கள். வாதிட்டு எல்லாம் புரியவைக்க முடியாது. வாதிட ஆரம்பித்தால் இவர்களிடம் ஒரே சொல்தான் எழும், “வேலை நீக்கம் செய்ய பட்டவர்கள் தங்களை வளர்த்துகொள்ள வேண்டும்” அவ்வளவே.
இன்று இந்த இடத்திலிருந்தே தொடங்குகிறேன். வளர்த்துக்கொள்வது என்பது என்ன. கணினித்துறையில் இதற்கு இலக்குகளும் எல்லைகளுக்கும் குறைவே இல்லை. ஒரே ஒரு கணினி தொழில் நுட்பத்தில் உங்கள் வாழ்நாளையே செலவிட்டாலும் உங்களை ஒரு நிபுணர் என உணர்வது கடினம், ஒத்து பார்க்க நிபுணர் என்று கூறிகொள்ளலாம். தவிர ஒரு கூறு மட்டும் எதற்கும் உதவாது அது சம்பந்தப்பட்டவைகளும் தெரிந்து இருக்க வேண்டும். தொழில்நுட்பம் மட்டும் உதவாது புரிந்து கொன்டதை புரியவைக்க தெரிய வேண்டும்.
எல்லோருக்கும் ஒரே சொல் உதவாது. தங்ளுடன் பணி செய்பவருக்கு ஒரு பாஷை, தங்களை போல 10 பேரை மேய்ப்பவருக்கு ஒரு பாஷை, அவரை போல 10 பேரை மேய்ப்பவருக்கு(அவர் 100ல் இருந்து 300 பேரை மேய்ப்பார் ) ஒரு பாஷை. இவருக்கு ஒரு தலை இருப்பார் அவரிடம் இன்னதென்று இவர்களுக்கு எல்லாம் புரியாத ஒன்றை ஒற்றை வரியில் சொல்லி 5 நிமிடத்தில் புரியவைக்க வேண்டும் அவருக்கு. அதற்க்கு யாகவா முனிவரிடம் தனித்து கற்று பின்பு சுகா விடம் பரிக்ஷை எழுதி தேறிய இனான்ய மொழி பழகியிருக்க வேண்டும்.
இவர்களிடம் எல்லாம் பேசும் திறம் இல்லாதவன் செத்தான். நானே நேர்முக தேர்வில் வயதில் குறைந்த, என்னை விட தொழில்நுட்பத்தில் சிறந்த ஒருவரை கண்டு வியந்து, பின், பரிதாபப்பட்டு இருகிகுறேன். என் மேலாளர் சொன்னார் ‘இவனுக்கு இன்னும் இவன் பெறுமானம் தெரியவில்லை. தெரிந்தால் இங்கு இருக்க மாட்டான்’. Rate படிந்து நான் விலகப்போகும் பணியிடத்தை நிரப்பி இன்னும் அங்கு இருக்கிறார் அந்த நல்லவர். அவர் நான் இருக்கும் இந்த நிறுவனத்திற்கு வந்தால் நான் கிளப்பிவிடுவதோ அல்லது அவரிடம் கற்றுக்கிளம்புவதோ நல்லது.
இந்த ‘பிரமிட்’ தவிர கூட ஒன்று உண்டு. அவர்கள் தான் மாண்புமிகு HR எனும் மனிதவளத்துறை மேளாளர்கள். அவர்களிடம் இனான்யமே தோற்கும். தெற்கு என்றால் கிழக்கு என்பார்கள். ஆனால் தொடக்கம் முதல் தொழில்நுட்ப வல்லுனர்கள் யார் யாரிடம் வேலை பார்க்க வேண்டும் என்பதை முடித்து தருபவர்கள். தொழில்நுட்பம் என்றால் என்ன என்றோ, அல்லது அதில் மோதி தோற்று, பின் MBA படித்து, சிறப்பாக தொழிநுட்ப குழுமங்களையும், அதில் இருப்பவர்கள் சம்பளங்களயும் முடிவு செய்பவர்கள்.
‘டேய் இந்த technology/ version வந்தே 2 வருஷம் தான் ஆகுது எனக்கு இதுல 6 வருஷம் அனுபவம் இருந்தா தான் கணக்குல எடுத்துப்பேன். பரிசீலனைக்கு அனுப்புவேன்னு அடம் பிடிக்காதடா’ – னு ஒரு நாள் பூராக சன்டை பிடித்தால் சுலபமாக சொல்லுவான் ‘உங்களை நிறுவனம் இந்த செங்குத்து கூறு (அ) சமன்நிலை கூறு வகையை சேர்ந்தவர் (vertcal/ horizontal) என்று வகுத்து உள்ளது அந்த கூறுக்கு தாவுதல் இயலாது’
அதை சுலபத்தில் சொல்லிவிடவும் மாட்டார் ஒரு மாதம் ஆகும். ரொம்ப நல்லவராக இருந்தால் உங்கள் கைபேசி எண் கொடுங்கள் என்று சொல்லி எங்கும் பதிவிக்காமல் தெரிவிப்பார். ‘முடிந்தால் உங்கள் மேல் அதிகாரியின் கணக்கில் இருந்து விடுவித்து கொன்டு வாருங்கள்’ என்பார். காளை மாட்டின் கொம்பில் பால் கறந்து விடலாம். சேவலை முட்டையிட வைத்து விடலாம். அவர் கணக்கில் இருந்து விடுவித்து கொண்டு வர ‘ஏழு கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன்’-னாக இருத்தல் அவசியம்.
இவ்வளவு வளர்த்து கொள்ள வேண்டிய திறமை இருந்தால் பல முறை வருடம் பூராவும் உங்களுக்கு வேலையே இல்லாமல் போகலாம்.
நாள் ஒன்றுக்கு வேலையே இல்லாமல் 9 மணி நேரம் அலுவலகத்தில் ஒரே ஒரு நாள் இருந்து பார்பது ஒரு ஞான நிலை. சரி அப்படி ஏன் ஒருவனை உட்கார வைக்க வேண்டும்? பல நிறுவனங்களின் வருமானமே இந்த மஹானுபாவர்களை நம்பி இருக்குறது. ஒருவன் பெயரை சொல்லி நமக்கு வேலை தரும் துரைசாரிடம் ஒரு மணிக்கு இத்தனை டாலர் (இதில் எந்த நாடு என்பது அல்ல சூட்சுமம்) என வாங்கி கொன்டு இருப்பார்கள். உங்கள் *வருட* சம்பாத்தியம் சுமாராக உங்கள் பெயர் சொல்லி வாங்கும் ஒன்றரை *மாத* டாலர் கணக்குக்கு ஈடாகும். இப்படி ஒருவன் உங்களிடம் இருந்தால் நீங்கள் செய்வீர்களா, போக விடுவீர்களா.
வருடத்துக்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ மட்டுமே ரகசியத்தில் நடக்கும் இனான்யத்தின் உச்சியில் நடைபெறும் தருணங்கள் உங்கள் மதிப்பை உங்களுக்கு உணர்த்தி செல்லும். வளர்த்து கொள்ள வேண்டிய வகைகளயும் கூறுகளையும் தேளிவு படுத்தி போகும்.
ஏதோ ஒரு திறமை, அல்லது திறமை நிலை, பஜாரில் இப்போது நல்ல விலைக்கும் போகும் திறமை, அம்மா என்றோ கொண்டை கடலை வியாழக்கிழமையில் வேண்டி கொண்டதற்கு வரமாய் அமையப்பெற்று. இனான்யமும் தேர்ந்து. இவர்களின் ‘பிரமிட்’-டும் புரிந்து. வெட்டியாகவே வருடாவருடம் இருக்க சகியாமல் அடுத்த நிறுவனத்திற்கு என்னைப் போல சிலர் வருடம் ஒரு முறை தாவலாம். அவர்கள் ஒன்றும் அவ்வளவு சிலாக்கியம் இல்லை. எல்லோரும், அதாவது “புதிதாக வரும் நிரலாக்க ஊழியர்கள்” உட்பட, ஒன்று பொறாமையுடனோ அல்லது கணக்குகளுடணோ அல்லது வெறுப்புடனோ பார்பார்கள்.
சுற்றி இருக்கும் நண்பர்கள் என்னமோ கட்டின பொண்டாடியை விட்டுவிட்டு வந்தவனைப்போலும் பேசுவார்கள். நேர்முகத்தின் பொது எதற்காக போன வருஷமும் அதற்கு முந்திய வருடம் போல கட்டுனவள விட்டுவிட்டு வந்தாய் என்பார்கள். மற்றவர்களுக்கு எப்படியும் இருக்கலாம். ஒரு முறை கட்டுனவள் உங்களை விட்டுவிட்டால் எப்படி இருக்கும் என்று இருந்து பார்த்தால் புரியும். நிறுவனம் தொடங்கிய நாள் முதல் 6 – 7 வருடம் இருந்தவருடன் ஒரு முறை வெளியே அனுப்பப்பட்டு பார்க்கும் அரிய வாய்ப்பு அமைய பெற்றால்.
மதியம் 1 மணிக்கு செய்தி பெற்று 3 மணிக்கு கொடுத்து செல்ல வேண்டியதை கொடுத்து நல்லிணக்கதுடன் கை குலுக்கி பிரிந்தோம். அதில் இன்றும் துளி வருத்தம் இல்லை. தவிர எங்களை வீட்டுக்கு அனுப்ப அனுப்பியவர், 60 வயது தாண்டிய அமெரிக்க குடிமகன் வீடு சென்று முதல் வேலையாக வேலையில் இருந்து விலகினார். ஆனால் வருத்தம் தருவது ‘பொண்டாட்டிய விட்டு வந்தவன்’-ஆக பார்க்கும் என் சக நிரலாக்க ஊழியர்கள் தான்.
அடுத்து ஊழிய முகம். சிறப்பான படமான வேலையில்லா பட்டதாரி-யில் FB குழுமத்தில் இருப்பவர்கள் கொண்டு கட்டடத்தையே கட்டி முடிக்கும் அதி தீவிர திறன் கொண்ட நம் டமில்நாட்டில், இந்தியாவில் வெளி வரும் ‘இஞ்ஜி’னியர்கள் (அவர்களை பொறியாளர்கள் என்றால் முட்டை பொறியா என்பார்கள், ஜாக்கிரதை) அதி தீவிர திறமைகள் தன் முனைப்பு கொண்டும், நம் தேசத்தின் அமைப்பின் காரணமாகவும் வளர பெற்றவர்கள்.
இவர்கள் தான் 15 நிமிடத்தில் 200 வருடம் தவத்தில் இருக்கும் புத்தரையும் , பாப்பா/ பாபா படமோ, பெருமாள் படமோ, 15 பேருக்கு அனுப்புவதையும், அவர் லார்ட்டு செட் என்றோ, காவியின் கொடூரங்களும் கையின் சீர் சிறப்பும் பரப்புவதும், ஒரு ஷேருக்கு ஒரு டாலர் ஆப்பிரிக்காவுக்கு கொடுப்பதில் தீவிரமாக இயங்குபவர்கள். இன்று வரையிலான உச்ச வரம்பு சாதனை மஹாதேவகீ-யை hit ஆக்கியது தான். அலுவகத்திலிருந்தே செய்யலாம் கையில் ‘மதிநுட்ப’ கைபேசி இயங்கும் வரை.
என் அனுபவத்தில் ஒரு இன்ஜினியரிடம், கல்லூரி முடிந்து 3 மாதம் ஆனவர், இந்த வேலை செய்ய வேண்டும் இந்த தளத்தில் உங்களுக்கு தேவையான உதவி கிடைக்கும். கேள்வி இருந்தால் நடுவே கூப்ப்ட்டும் கேளுங்கள். என்று சொல்லி பதிலுக்கு ஒரு பார்வை கிடைக்க பெற்றேன். ‘என்ன சொன்னாய், வேலையாஆஆஆ, என்னையாஆஆஆ’ – என்பதாக. நிச்சயம் இவர் இன்று 6 பேரை மேய்த்து கொண்டு இருப்பார்.
இப்படி அனியாயம் செய்யும் நிறுவனங்களுடய நடத்தையை கண்டு பொங்கி பேசி பேசி பின் ‘என்னை அறிந்தால்’ கிளம்புவார். வந்து அதை எப்படி treatment சரியாக இருந்து இருக்க வேண்டும் என்று தீர்வு சொல்வார்.
நல்ல எதிர்காலமும் சாமர்த்தியமும் மிக்கவர்களும் இவர்களில் இருப்பர், ஆகையால் ஒருநாள் நிச்சயம் MBA வும் முடித்து, அல்லது MS, MBA வும் முடித்து இனான்யமும் தேர்ந்து நான் சரியாக அந்த வருடம் செயல்பட்டேனா என்று நிர்ணயிப்பார் என்றும் எதிர்பார்க்கலாம். அப்படி இல்லாதவர்கள் settle ஆவார்கள், அப்படி settle ஆகாதவர்களை வெறுப்பார்கள், கண்டிப்பார்கள். இவர்கள் அடுத்த நிலையில் நிறுவனமே வாழ்க்கை ஆக்கிக்கொள்வார்கள். அதற்கு அப்பால் அல்லது எதிராக கனவிலும் சிந்திக்க மாட்டார்கள். வாசலில் இருக்கும் காவலாளி தாண்டி இவர்களிடமும் நீங்கள் ID card காட்டி செல்ல நேரலாம்.
நான் அறிந்த வரை ஒரு சில முயற்சிகள் அரசு துணை இருந்தால் அல்லது ஒரு union மூலம் வற்புறுத்தலாம். ஒருவரை ஒரு *நேர்முக தேர்வில்* இருந்து விலக்கினால் ஏன் என்ற தெளிவான விளக்கம் ஒரு நிறுவனம் அளிக்க வேண்டும். இது இன்று பல நாடுகளில் உள்ளது தான். நடைமுறைப் படுத்த முடியாததும் அல்ல.
இந்த ஒரு விஷயம் ஒருவரை ஏன் எடுத்தோம் என்ற கேள்விக்கும் பதில் உரைக்கும், உரைக்க கட்டாயபடுத்தும். பொறுப்பான செயல்பாட்டை HR ரிடம் எதிர்பார்க்கும். இவர்கள் தொழில்நுட்ப கல்வி கற்றவரை விட அதிகம் மாதம் ஈட்டுபவர், அதில் எங்களுக்கு குறையே இல்லை கொஞ்சம் கொஞ்சம் பொறுப்பான வேலை பார்த்தால் மிக்க நன்றிக்கடன் பட்டவர்களாய் இருப்பர் தொழில்நுட்ப வல்லுனர்கள். இன்ஜினியரிங் கல்லூரிக்கு நிகராக வளர்ந்து இருக்கும் வேலை வாங்கி தரும் consulting கரையான்களை ஒடுக்வும் ஏது வாக இருக்கும்.
Google போன்ற பெரு நிறுவனங்கள் மட்டுமல்ல, நாம் நம் நாட்டின் பெரும் நிறுவனங்களாக சொல்பவையே இன்று consulting கரையான்களை அறுசுவை சோறு இட்டு வளர்ப்பவை. இந்த கணக்கில் வேலை பெறுபவர்களும் வீடு செல்பவர்களும் எந்த படத்திலும் செய்தியிலும் வரமாட்டார்கள். வேலையில்லாப்பட்டதாரிகள் தான் இவர்களின் first murder.
பொறியாளர்களாக படிப்பவர்கள் எந்நிலையிலும் என் வீழ்ச்சிக்கு இவர் காரணம், இந்த நிறுவனம் காரணம், இந்த கல்லூரி காரணம், என் பெற்றோர் காரணம் என்று எண்ணுதல் ஆகாது. அது அவர்கள் முதல் பெறும் வீழ்ச்சி. அதுவே, அந்த மனமே கடைசிவரையிலும் அவர்களை தண்ணீர் தெளித்தவுடன் தலை ஆட்டி ஆட்டி பலி ஆக தயாராக ஆக்கும் சாதனம். பலிகள் தயார் என்றால் பலி கொடுப்பவர்கள் குறைவாக இல்லை என்று அறிந்து கொள்ளுதலும் நல்லது.
அப்படி விழித்து கொன்டவர்களுக்கு இனான்யம் தெரிந்து இருப்பது அவசியம். இன்று அந்த குரு மரபை சேர்தவர்களில் மூத்தவர்கள் யாரும் நல்ல கற்றுக்கொடுக்கும் கடைகளை தொடங்கலாம் : நான் கோபப்படும் ‘பிரமிட்’ பற்றி பேசுபவர்கள் இந்நேரம் ஒரு நல்ல தொழில் தொடங்கவும் எண்ணி இருப்பார்கள். சரி வருமா என்றும் பார்க்கலாம்.
நன்றி
வெ. ராகவ்