முகப்பின் திரு

download

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். என் பெயர் இளங்கோவன். இது உங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம்.

இன்று தங்களுடைய திருமுகப்பில் கதையை மீண்டும் வாசித்தேன். நாகர்கோயிலில் நான் வசித்த இரண்டு வருடங்களில் சிலமுறை ஆதி கேசவரின் கோயிலைக் கடந்து செய்திருக்கிறேன். உள்ளே செல்ல வேண்டுமெனத் தோன்றியதில்லை. மதுரைக்குத் திரும்பிய பிறகு மீண்டும் அங்கு செல்ல வாய்க்கவில்லை.

காளிச்சரன் ஆதி கேசவரின் முன் நிற்கும் தருணத்தை மீண்டும் மீண்டும் வாசித்து விட்டேன்.

அன்று அவர் என்ன கண்டார் என்பதை அவர்வழி கேட்க வழியில்லை. ஓரளவு உணர முடிகிறது. அதன்பின் பத்து வருடங்கள் கழித்து நீங்கள் என்ன கண்டீர்கள்? ஒரு வரியில் சொல்லிச் சென்றுவிட்டீர்கள். அது ஓராயிரம் கேள்விகளை எழுப்புகிறது.

அன்புடன்

இளங்கோவன்.

அன்புள்ள இளங்கோவன்

அதை சொல்லமுடியும் என்றால் கதையிலேயே சொல்லியிருப்பேனே. அதை ஆதிகேசவன் கோயிலில் காணமுடியலாம். அல்லது வேறு எங்கும்

ஜெ

முந்தைய கட்டுரைஎம்.டி.எம்மின் நூறுநாவல் பட்டியல்
அடுத்த கட்டுரை‘பிரயாகை’- வெளியீடு