வடகிழக்குப் பயணம்

download (1)

வடகிழக்கு மாகாணங்களில் நாங்கள் இதுவரை விரிவாகப் பயணம் செய்ததில்லை. எங்கள் நண்பர் ராம்குமார் [யூடியுபில் வெளியாகியிருக்கும் என்னுடைய நீண்ட பேட்டியை எடுத்தவர்] அங்கே இப்போது இந்திய ஆட்சிப்பணியில் இருக்கிறார். அவரது உதவியுடன் பயண ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். அவர் அங்கே சென்றதுமே போட்ட திட்டம். இப்போதுதான் நடைமுறைக்கு வருகிறது

நாளை மதியம் விமானத்தில் கிளம்பி நேராக கௌஹாத்தி. அங்கிருந்து மணிப்பூர் மேகாலயா நாகாலாந்து என்று செல்வதாகத் திட்டம். வழக்கம்போல கிருஷ்ணன்தான் திட்டத்தை வகுத்திருக்கிறார். பிப்ரவரி 26 வரை பயணம் இருக்கும்

தினமும் பயணக்குறிப்புகளை எழுதுவதாகத் திட்டம். இம்முறை வசந்தகுமார் இருப்பதனால் நல்ல புகைப்படங்களும் இருக்கக்கூடும். இந்தவருடப்பயணம் இப்படி விரைவிலேயே வந்துவிட்டது. திரும்பி வந்ததுமே கனடா அமெரிக்கா பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும்

வெண்முரசு மார்ச் 2 வரை எழுதப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே பிரச்சினை இல்லை. பயணத்தில் விட்டுவிடுதலையாகி இருக்கலாம்