இரு நிகழ்ச்சிகள்

இன்று, 19-10-2008 அன்று இரு நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்கள் கிடைத்தன. ஒன்று நாஞ்சில்நாடன் திருச்சியில் சாகித்ய அக்காதமி சார்பில் நடத்தப்படும் ‘எழுத்தாளரைச் சந்தியுங்கள்’ நிகழ்ச்சியில் பேசவிருப்பது. திருச்சியில் ரவி மினி ஹால், 24.கரூர் பைபாஸ் சாலை[ கலைஞர் அறிவாலயம் அருகே ] நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை ஆறுமணிக்கு. அறிமுக உரைக்கு பின் நாஞ்சில் பேசுகிறார். வாசகர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டு உரையாடலாம். தொடர்புக்கு 044 24354815

மேடையில் நாஞ்சில்நாடன் அளவுக்கு வாசகர்களைக் கவரக்கூடிய எழுத்தாளர்கள் குறைவு. மிகமிக நேரடியாகவும் உணர்ச்சிகரமாகவும் பேசக்கூடியவர். அவரது ஆளுமையில் பாசாங்குக்கே இடமில்லை. நேரடியாக கருத்துக்களை ஓங்கிச் சொல்ல தயங்குவார், எவரையும் புண்படுத்தலாகாது என்பதற்காக. அதே சமயம் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லவும் செய்வார்.பாவரது இயல்பான நகைச்சுவையும் நம்மை கவரக்கூடியது. தனிப்பட்ட பழக்கத்துக்கு மிகமிக எளியவர்.

நெய்தல் அமைப்பின் சார்பாக சுந்தர ராமசாமி இலக்கிய விருது வழங்கும் விழா நாகர்கோயில் ரோட்டரி கம்யூனிட்டி ஹாலில் காலை பத்து மணிக்கு நிகழ்கிறது. [மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே] இவ்வருட விருது கன்னி நாவலின் ஆசிரியர் ஜெ.·ப்ரான்ஸிஸ் கிருபாவுக்கு வழங்கப்படுகிறது. தலைமை நெய்தல் கிருஷ்ணன். சுகுமாரன் , பாவண்ணன், தமிழவன், க.மோகனரங்கன், அரவிந்தன், ராஜமார்த்தாண்டன் ஆகியோர் பேசுகிறார்கள். தொடர்புக்கு 9443153314

முந்தைய கட்டுரைகொட்டம்சுக்காதி
அடுத்த கட்டுரைகடிதங்கள்