வெண்முரசு- ஒலிநூல்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு.

உலகின் மகத்தான நாவல் வரிசைகளுள் ஒன்றான வெண்முரசினை எழுதிக்கொண்டிருக்கும் தங்களிடம் அது தொடர்பான ஒரு பகிர்வு. வெண்முரசினைப் போன்ற உலக நாவல்கள் பெரும்பாலும் ஆடியோ புத்தகங்களாக வெளிவந்து மக்களுக்குப் பயனளிக்கின்றன. (ஆனால் எழுதப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையில் இவை ஆடியோ வடிவம் பெற்றுள்ளன.)

தாங்கள் இப்பெரும் பணியைச் செய்கையில் அதன் போக்கிலேயே தினமும் ஒரு அத்தியாயத்தினை ஒரு தெளிவான இனிமையான குரலின் மூலம் ஆடியோ புத்தகமாக வெளியிட முடியும்தானே. ஏனென்றால் அத்தகைய முயற்சி விழி அயற்சி போன்ற சிக்கல்களையும் எந்த நேரமும் கேட்க முடியும் என்ற பயனையும் தரலாமல்லவா.

ஏற்கனவே இளையோர் ஊடகமான இணையதளத்தில் நேரடியாக தாங்கள் எழுதி வருவது எம்மைப் போன்ற இளைஞர்களுக்கு எளிதில் வந்து சேர்வதாலும், அச்சு ஊடகங்களில் பின்னர் அது பதிப்பிக்கப் பட்டாலும் அதிக பிரதிகள் விற்பனை ஆகும் வாய்ப்பும் இருப்பதாலும் இந்த கேள்வியைக் கேட்கிறேன்.மேலும் கல்கி அவர்களது சில நாவல்கள் தமிழில் ஆடியோ புத்தகமாகக் கிடைக்கின்றது.

மேலும் ` செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்` என்ற பொன்மொழியின் படி இன்னொரு புலனின் மூலமும் தங்கள் முயற்சியை இன்னும் சிலருக்குக் கொண்டு சேர்க்கலாமே. நிச்சயம் ஆடியோ புத்தகங்களை ஸ்டூடியோவில் ரெக்கார்ட் செய்து தர தயாராக ஆட்கள் இருப்பார்கள் இருக்கவேண்டும் என்றே எண்ணுகிறேன்.

நன்றி.
தங்கள் அன்புள்ள
கோ.கமலக்கண்ணன்.

அன்புள்ள கமலக்கண்ணன்

செய்யலாம்

ஆனால் தொடர்ச்சியாக பல நண்பர்கள் சேர்ந்துதான் செய்யமுடியும். ஆனால் அவ்வாறு செய்யும் நண்பர்கள் அனேகமாக இல்லை.

வசந்தகுமார் என்ற நண்பர் செய்வதாகச் சொன்னார், பார்ப்போம்

ஜெ

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ -13
அடுத்த கட்டுரைபிரயாகை முன்பதிவு- கிழக்கு அறிவிப்பு