«

»


Print this Post

ஹலோ! ஹலோ!


”நேயர்களுக்கு அன்பான வெனெக்கம். இப்ப நம்ம கூட பிரபல னீரிழிவு மருத்துவர் டாக்டர் எம்.ஸ்ஸெக்ரபாநி எம்டி அவர்கள் வந்திருக்காங்க. திரு ஸ்ஸெக்ரபாநி அவர்கள் இன்னிக்கு நீரிழிவு மருத்துவத்திலே னம்பர் ஒன் டாக்டரா இருக்காங்க. அவங்க இப்ப இங்க வந்து னம்ம நேயர்கள் கேக்கிற கேல்விகளுக்கு பதில் ஸொல்றதிலே எங்களுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. னேயர்கள் உங்க கேல்விகல னேரடியாகவே திரு ஸ்ஸெக்ரபாநி அவர்கள் கிட்ட கேட்கலாம். வெனெக்கம் திரு ஸ்ஸெக்ரபாநி”

”வணக்கம்” ”டாக்டர், இப்ப இந்த னீரிழிவுங்கிற னோயிலே நீங்க ஸிறப்பா ரிஸேர்ச் ஸெய்துட்டு வரீங்க இல்ல? னீரிழிவுன்னா என்ன? அதோட ஆரிகூரிகள் என்னென்ன?”. ” ”ரொம்ப நல்ல கேள்வி. இப்ப நீரிழிவுன்னா ஆக்சுவலி நெறையபேரு சுகர்னு சொல்றாங்கன்னாலும் சீரியஸ்லி ஸ்பீக்கிங் நீரிழிவுன்னாக்க அது ஒரு நோய்னு சொல்ற அதே நேரத்திலே எக்ஸாட்டா சொல்லணுமானா வி ஹேவ் டு மேக் ஸெர்ட்டெய்ன் கிளாரி·பிகிகேஷன்ஸ் இன் த பாயிண்ட் பட்…ஆக்சுவலி இந்த நீரிழிவுங்கறது–.”

”ரொம்ப ஸரியா ஸொன்னீங்க டாக்டர். அதுக்குள்ள இப்ப ஒரு னேயர் லைன்ல இருக்கார். கேக்கலாமா?” ”ஓக்கே” ”ஹலோ ஹலோ ஹலோ…ஹலோ யார் பேசறது?” ”ம்ங்கஸனமங்கர்ஸி” ”ஹலோ யார் பேசறது? ஹலோ? ஹலோ ,டாக்டரிடம் கேலுங்கள் நிகல்ஸ்ஸியிலே இருந்து ஸின்பாப்பா பேஸறேன். ஹலோ” ”ம்ம்… மங்கயர்கரசி” ”யாரு மங்கயர்க்கரசியா?” ”ம்ம்ம் மங்கயர்க்கரசி அயனாவரத்திலே இருந்து பேசறேன்” ”சொல்லுங்க, அயனாவரம் மங்கயர்க்கரசி…னீங்க என்ன கேக்கணும்?” ”ம்ம்ம்…டாக்டர்கிட்ட பேசணும்”

”சொல்லுங்க மங்கயர்க்கரசி” ”ம்ம்ம்…நான் இப்ப ஹலோ…ஹலோ” ”சொல்லுங்க” ”ம்ம்ம்ம்….எங்க மாமனாருக்கு காது கேக்கல்லை. அவருக்கு சுகர் உண்டான்னுட்டு கேக்கலாம்னுட்டு…” ”மங்கயர்க்கரசி உங்க மாமனாருக்கு என்ன வயசு?” ”அது இருக்கும் ஒரு எம்பது எம்பத்தஞ்சு” ”எண்பத்தைந்து வயதானா காது  கொஞ்சம் கேக்காம போறது நேச்சுரல்தான். இதுக்கு நீங்க ஒரு இஎன்டி நிபுணரை கலந்தாலோசிக்கலாம். அதுக்கு முன்னாடி அவருக்கு சுகர் இருக்கான்னு செக் பண்ணிக்கலாம்” ”ம்ம்ம்…சரிங்க” ”ஓக்கே மங்கயர்க்கரசி. கூப்பிட்டதுக்கு ரொம்பவே தாங்க்ஸ்.. அப்றம் டாக்டர் னீங்க னீரிழிவைப்பத்தி சொல்லிட்டிருந்தீங்கள்ல?.”

”யா… ஆக்சுவலி இந்த நீரிழிவுன்னா…டெ·பனிட்லி இட் இஸ் எ பிக் பிராப்ளம் இன் அவர் கண்ட்ரி வி ஹேவ் டு அண்டர்ஸ்டேண்ட் எ லாட் இன் திஸ் ஏரியா…பட்” ”நீங்க நீரிழிவுன்னு எதைச் ஸொல்வீங்க டாக்டர்?” ”குட் கொஸ்டின். ஆக்சுவலா வி ஸே இட் ஆஸ் சுகர் கம்ப்ளெயிண்ட்… மெடிக்கல்லி இட் ஹேஸ் எ லாட் ஆ·ப்– ” ”ரொம்பவே தெலிவா விளக்கினீங்க டாக்டர். அதுக்குள்ள இன்னொரு னேயர் லைன்ல இருக்கார்…பாப்பமா?” ”ஷ்யூர்”

”ஹலோ ஹலோ ஹலோ…யார் பேசறது?” ”ர்ர்ர்ர்ர்ர்ர்…குமாரசாமி…திருநெல்வேலி” ”சொல்லுங்க குமார்ஸாமி…” ”டாக்டரவுஹ இருக்காஹளா?” ”ஹலோ நான் டாக்டர் சக்கரபாணி பேசறேன்” ”ஹலோ! ஹலோ” ”ஹலோ.. ஹலோ” ”ஹலோ ஹலோ… சொல்லுங்க” ”ஹலோ?” ”ஹலோ!” ”ர்ர்ர்ர்” ”ஸாரி கட்டாயிடிச்சு. ஸொல்லுங்க டாக்டர்..இப்ப னீரிழிவுன்னா னாம எதைப்பத்திச் சொல்றோம்’?” ”வெரி இன்ட்ரெஸ்டிங் கொஸ்டின். ஆக்சுவலி எ லாட் ஆ·ப் பீப்பிள் ஹேவ் த ஸேம் கொஸ்டின்….பட் பலபேர் இப்டி கேக்கிறதில்லை” ”ஸரியாச் ஸொன்னீங்க டாக்டர். இப்ப பலபேர் டாக்டர்கிட்ட டவுட்ஸ் கேட்டு க்லியேர் பன்னிக்கிறதில்லை. ஸோ தே ஹேவ் எ லாட் ஆ·ப் பிராப்லம்ஸ். ஆக்சுவலி…..அதுக்கு முன்னாடி ஒரு காலர்..” ”ஓக்கே”

”ஹலோ ஹலோ?” ”ஹலோ”  ”ஹலோ , சொல்லுங்க …” ”ஹலோ?” ”ஹலோ, சொல்லுங்க…இது டாக்டரிடம் கேளுங்கள் நிகல்ஸி . னான் ஸின்பாப்பா பேசறேன்” ”சின்னப்பாப்பாவா?” ”ஆமங்க” ”நல்லா இருக்கீங்களா மேடம்?” ”னான் னல்லாவே இருக்கேன். னீங்க எப்டி இருக்கீங்க?” ”நல்லா இருக்கேன்…வீட்ல எல்லாரும் சௌக்கியங்களா?” ”ஸௌக்யமா இருக்காங்க…ஸொல்ங்க என்ன கேக்கணும்?” ”டாக்டர்கிட்ட கேக்கணும்” ”கேளுங்க , உங்கபேரு?” ”நான் அம்பத்தூர் குணசேகர் மேடம். தினம் ஒரு பிரச்சினை நிகழ்ச்சியிலே நான் உங்ககிட்ட கூப்டு பேசியிருக்கேன். அப்றம் தேன்விழுது நிகழ்ச்சியிலேகூட ஒரு பாட்டு டெடிகேட் பண்ணினேன்” ”ஓ, அவரா னீங்க? வேரி னைஸ்! ஸொல்ங்க கூணஸேகர்…” ”டாக்டர்கிட்ட கேள்விங்க” ”கேளுங்க குணசேகர்”

”இல்லீங்க டாக்டர், இப்ப இந்த நீரிழிவு எல்லாருக்கும் வருமா?” ”நல்லா கேட்டீங்க குணசேகர். நீரிழிவுன்னா ஆக்சுவலா எவ்ரி ஒன் ஹேஸ் த ரிஸ்க் ஆ·ப் ஹேவிங் இட். ஜெனரல்லி த ரிஸ்க் ·பேக்டர் இஸ் செவெண்டி பெர்ஸெண்ட் இன் இண்டியா. பிகாஸ் வி ஹேவ் எ லாட் ஆ·ப் ஸப்போர்ட்டிங் ·பேக்டர்ஸ் ஹியர். அவர் டிரெடிஷன் காண்ட்ரிபியூட்ஸ் எ லாட். ஆண்ட் அவர் ·புட் ஹேபிட்ஸ்.. ஆண்ட் டெ·பனிட்லி அவர் ஜெனெடிக் ஸ்டரக்சர்..இட்ஸ் ரியலி காம்லிகேட்டட்..” ”சரிங்க” ”என்ன பண்றீங்க குணசேகர்?” ”ஓட்டல் ஸார்” ”ஓட்டல் வச்சிருக்கீங்களா?” ”இல்ல சார் நைட் புரோட்டா கடை” ”ஸோ னைஸ்… குணசேகர். உங்க கிட்ட பேஸ்னதுக்கு ரொம்பவே மகில்ஸி. மறுபடியும் ஸந்திப்போம்…ஸொல்ங்க டாக்டர், இப்ப னீரிழிவுன்னா என்னான்னு பேஸ்ட்டிருந்தோம் இல்லியா?”

”யா.. நீரிழிவுன்னா அது நம்ம கிராமத்திலே டிரெடிஷனலா சொல்லிட்டு வர்ரது. ஆக்சுவலி அது சித்த வைத்தியம்… அதாவது இந்த நாட்டு வைத்தியம்.. நீரிழிவுன்னா அது ஆக்சுவலி ஒரு நோய்னாக்கூட… எதுக்குச் சொல்றேன்னா வி ஹேவ் டு நோ எ லாட் ஆ·ப் திங்ஸ் இன் திஸ் ஏரியா. இன்னும் அது பத்தின விழிப்புணர்ச்சி நம்ம ஜனங்களுக்குள்ள ஏற்படலை…” ”ஸரியாச்சொன்னீங்க டாக்டர்.. அந்த விலிப்புனர்ஸ்ஸியை உருவாக்கறதுக்காஹத்தான் னாம இந்தமாதிரி புராக்ராம்லாம் னடத்தறோம். இப்ப ஒரு னேயர் லைன்ல காத்திட்டிருக்கார். பேசலாமா? ”டெ·பனிட்லி”

”ஹலோ?” ”ஹலோ மேடம்” ”ஹலோ, ஸொல்ங்க” ”ஹலோ மேடம்” ”ஹலோ” ”ஹலோ மேடம்” ”ஹலோ ஸொல்ங்க” ”ஹலோ நான் ஈஸ்வரன். திருச்சியிலே இருந்து பேசறேன்.” ”ஹலோ ஸொல்ங்க டிர்ஸ்ஸி ஈஸ்வரன்…”  ”ஹலோ” ”ஸொல்ங்க” ”வணக்கம் டாக்டர்” ”வணக்கம் சொல்லுங்க” ”ஹலோ?” ”சொல்லுங்க ஈஸ்வரன்” ”சார்!” ”சொல்லுங்க ஈஸ்வரன்” ”ஸார் இந்த சுகர் இருந்தா குழந்தை பிறக்குமா?” ”அருமையா கேட்டீங்க ஈஸ்வரன். தாய்க்கு டயபடிஸ் இருந்தா குழந்தைக்கும் டயபடிஸ் இருக்க வாய்ப்பிருக்கு. டயபடீஸ் இருக்கிற குழந்தை தாராளமா பிறக்கும்”

”இல்லசார்…அத கேக்கல்லை… குழந்தைக்கு சுகர் இருக்கறத சொல்லலை” ”சொல்லுங்க ஈஸ்வரன்” ”ஹலோ?” ”ஹலோ” ”ஹலோ?” ”சொல்லுங்க” ”சார் குழந்தைய சொல்லலை” ”தாய்க்கு சுகர் இருந்தாலும் குழந்தை பிறக்கும்” ”அப்டீங்களா? ஹலோ” ”ஹலோ, சொல்லுங்க” ”தாய்க்கு இல்ல சார்.. ·பாதருக்கு சுகர் இருந்தா?” ”·பாதருக்கு சுகர் இருந்தாலும் குழந்தை பிறக்கும்” ”டைம் ரொம்ப லேட் ஆயிடுது சார்” ”யா…தாய்க்கு சுகர் இருந்தா குழந்தை கொஞ்சம் லார்ஜ் சைஸ்லே இருக்கிறதனாலே ஆக்சுவலி இட் டேக்ஸ் ஸம் டைம் டு கம் அவுட்.. ஜெனரலி.. ” ”அதில்லை சார்… இப்ப டைம் லேட் ஆறதனாலே என்னாகுதுன்னாக்க…”

”ஓக்கே டாக்டர், அந்தக் கால் கட்டாயிடிச்சு. னாம பேஸிட்டிருந்ததை பாக்கலாமா?” ”ஷ்யூர்..” ”னீரிழிவுன்னா என்னான்னு அருமையா வெலக்கிக் காட்டிட்டிருந்தீங்க” ”ஆமா..நீரிழிவுன்னா வி ஹேவ் டு லுக் இன் டு இட் வெரி கிளியர்லி. டயபடிஸ் இஸ் கால்ட் ஆஸ் நீரிழிவு. அதை நம்ம ஜனங்க இழிவா நினைச்சிட்டிருக்காங்க. இட் இஸ் ராங். நீரிழிவுன்னா ஆக்சுவலா இட் இஸ் நாட் எ டிஸீஸ்..” ”ரொம்பவே தெலிவாச் ஸொன்னீங்க டாக்டர், இப்ப ஒரு காலர் லைன்ல இருக்கார். பேஸ்லாமா?” ”ஓக்கே”

”ஹலோ ஹலோ ஹலோ” “” ஹலோஹலோ” “ஹலோஹலோ” ”ஸொல்ங்க நாங்க டாக்டரிடம் கேல்ங்க நிகல்ஸ்ஸியிலே இருந்து பேஸ்ரோம்” ”ஹலோ” “ஹலோ”. ”நான் சந்திரமோகன் சேலம்.” ஸொல்ங்க ஸென்ரமோஹென்…” ”நான் நீரிழிவ பத்தி ஒரு கவிதை எழுதியிருக்கேன். அதைச் சொல்லலாம்னு நினைக்கிறேன்.” ”ஓ வாவ்…சொல்லுங்க” ”நானிழிவில்லை அவரிழிவில்லை நீரிழிவு என்றால் நீர் இழிவாக நினைப்பதில்லை” ”ஓ! நைஸ்”’ ”நீரிழிவல்ல நிலமிழிவல்ல. வானிழிவல்ல வரப்பு இழிவல்ல. நீரிழிவை நீக்குதல் நன்று” ”ஓ, வெரி குட்” ”அவ்ளவுதாங்க கவிதை” ”வேரி குட்…சந்திரமோகன் கூப்பிட்டதுக்கு ரொம்பவே னன்றி’. அப்றம் டாக்டர் னாம இப்ப னீரிழிவைப்பத்தி பேஸ்ட்டிருந்தோம் இல்லியா?”  ”எஸ்…டெ·பனிட்லி” ”ஸோ ,னீரிழிவுன்னா என்ன?”

”வேரி குட் கொஸ்டின். நீரிழிவுன்னா இட் இஸ் எ ஸ்டிரேஞ்ச் ·பிஸிகல் ·பினாமினன் ” ”எக்ஸலண்ட் டாக்டர்…அதுக்குள்ள ஒரு காலர் லைன்ல இருக்கா…ஹலோ ” ”ஹலோ” “ஹலோ” “”ஹலோஹலோ” “ஹலோஹலோ” “ஹலோ,நான் பிரபாகரன் பேசறேன்…கோவில்பட்டி…கோவில்பட்டி” ”ஸொல்ங்க கோவில்பட்டி பிரபாகரன்” ”ஸார் இப்ப இந்த காசினிகீரய மூணுவேளை மசிச்சு சாப்பிட்டா சுகர் எறங்குமா சார்?” ”கண்டிப்பா… காஸினிகீரை இஸ் குட் பார் லூஸ் மோஷன். தினம் ஏழெட்டுவேளை மோஷன் போனா கண்டிப்பா சுகர் குறையும்…பிகாஸ்…” ”தேங்க்ஸ் சார்” ”வச்சிட்டார்…ஸொல்ங்க சார் னீரிழிவுன்னா என்ன?”

”அதான் நான் இப்ப சொல்லிட்டிருக்கேன். நீரிழிவுன்னா இட்ஸ் எ ·பினாமினன். எ கைண்ட் ஆ·ப்..யூ நோ…ஆக்சுவலி நீரிழிவுன்னா டயபாடீஸ்…” ”மிகஸ்ஸிரப்பா உங்க கருத்துக்கலை எல்லாருக்கும் புரியறாப்ல தெலீவா எடுத்துச் ஸொன்னீங்க. உங்க கருத்துக்கலாலே ஏராளமான னேயர்கலுக்கு பயன் கிடைஸ்ஸிருக்கும்னு னம்பறோம். னிறையவே இதைப்பத்தி பேஸ்லாம். ஆனாலும் டைம் இல்லாதததனாலே இப்ப இந்த நிகல்ஸ்ஸிய னிரைவு ஸெய்ரோம். எங்க னிகல்ஸ்ஸியிலே வந்து பார்டிஸிபேட் பன்னி அரிய கருத்துக்கலை ஸொன்னதுக்கு ரொம்பவே நன்றி. வெனக்கம்.” ”வணக்கம்”

”வெனக்கம் னேயர்கலே னிகல்ஸ்ஸியை ரஸிச்சிருப்பீங்க…அடுத்த வாரம் இதே னிகல்ஸ்ஸியிலே குடல்வால் அறுவை னிபுணர் டாக்டர் அகர்வால் னம்ம கிட்ட பேஸ்றதுக்கு வரதா இருக்கார். நேயர்கள் அவர்கிட்ட எல்லா கேல்விகலையும் கேட்டு தெலிவு பெறலாம். வெனக்கம்”

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/7104

10 comments

Skip to comment form

 1. KanSee

  பின்னிடிங்க போங்க. உண்மையான நிலைமையை நகைச்சுவையாக ரசிக்கும்படி எழுதி கலகிட்டிங்க. வாழ்த்துக்கள்.

 2. sureshkannan

  “ஒங்க டிவி வால்யூம கொஞ்சம் கம்மி பண்ணுங்க”.

  – விட்டுப் போனவைகளில் ஒன்று. :)

 3. baski

  ரொம்ம்மம்ம்ப எக்சலன்ட்டா டமில் ஸ்பிக் பண்றீங்க. தேர் இஸ் எ வேக்கன்சி இன் அவர் டீ.வீ ஸ்டேஷன். வுட் யு மைன்ட் சென்டிங் யுவர் அப்ப்ளிகேஷன்? சீக்ரத்ல உங்குள்க்க் களமாமணி அவார்ட் கெட்க்கும்.
  (தமிழின் வல்லினம், இடையினம் ஆகியவற்றை ஒழித்துக் கட்டிய மெல்லினம் வாழ்க).
  http://baski-reviews.blogspot.com/

 4. Prasanna

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
  இனிய காலை வணக்கம். சமீபமாக உங்கள எழுத்துகளில் நகைசுவை சற்று தூக்கலாக இருக்கிறதே… உங்களின் இந்த கட்டுரையை யாராவது வாசிக்க சொல்லி விட்டு கண்ணை மூடி கொண்டு கேட்டால் அப்படியே ஒரு பண்பலை ஒலிபரப்பை நேரடியாக கேட்டது போலவே இருக்கும்.
  தகவல் தொழிநுட்பம் வளர்ந்து விட்ட இன்றைய சூழ்நிலையில் பண்பலைகளின் பங்களிப்பை இன்று நாம் ஒதுக்கி விட முடியாது. பல சிறிய நிறுவனங்களின் விளம்பரங்களால் பலன் அளித்தும் பலன் அடைந்தும் கொண்டு இருக்கும் இது போன்ற பண்பலைகள் பல மாவட்டங்களில் வேருன்றி போய் இருக்கின்றன.
  ஒரு நல்ல விளம்பரதாரர் எனவும் , ஒரு மிக சிறந்த பொழுது போக்கு அம்சமாகவும் இவர்களின் பணி பாராட்டுக்கு உரியது தான். ஆனால் அந்த மாவட்ட வட்டார வழக்கில் பேசுகிறேன் என இவர்கள் தமிழை படுத்தும் பாடு சொல்லி மாளாது.
  ஒரு பாடலை விளம்பரங்களுக்கு இடையில் இவர்கள் போடுவதில் இருக்கும் ஆர்வம் அந்த பாடல் பற்றிய சரியான் தகவல்களை நேயர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் சிறிதும் இல்லை.
  மதுரை பண்பலை ஒன்றில் நேற்று காலையில் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்கிறேன் என ஒரு தொகுப்பாளினி தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என சொல்கிறார். பொங்கல் அன்று என்ன வாழ்த்துகள் கூறுவார் என தெரியவில்லை.
  பாரதியார் பிறந்த நாள் அன்று ஒருவர் பாரதியாருக்கே வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்.
  தமிழ் பற்றியும் தமிழ் பேச்சுக்கள் பற்றியும் சரியான விழிப்புணர்வு இல்லாத இவர்களின் குரல்களை கேட்டு தான் தமிழனின் பொன் காலை பொழுது விடிகிறது ….
  என்ன செய்வது தமிழுக்கும் தமிழனுக்கும் வந்த நவீன சோதனை…..
  மேற்சொன்ன அனைத்தையுமே உங்களின் இந்த கட்டுரை புட்டு புட்டு வைக்கிறது.

  அன்புடன்
  பிரசன்னா

 5. kanpal

  அன்புள்ள ஜெயமோஹன்,

  == நானிழிவில்லை அவரிழிவில்லை நீரிழிவு என்றால் நீர் இழிவாக நினைப்பதில்லை” ”ஓ! நைஸ்”’ ”நீரிழிவல்ல நிலமிழிவல்ல. வானிழிவல்ல வரப்பு இழிவல்ல. நீரிழிவை நீக்குதல் நன்று ==

  கவித்துவமான கிண்டல். ஆனால், தமிழ் இவர்களிடம் படும் பாடு பெரும்வேதனை அளிக்கிறது.

  இதுபோன்ற நிகழ்ச்சிகளின் வெற்றுப்பேச்சு நிகழ்ச்சியில் பேச்சற்ற இடைவெளி வந்துவிடக்கூடாதே என்பதற்காகவே தத்துப்பித்தென்ற உளறலே.

  பழ.கந்தசாமி

 6. kthillairaj

  டைரக்டர் பாலா கூட சேர்ந்து காமெடி படம் பண்ணினா இந்த மாதிரி பின்னி ஏடுக்கலாம் . பாலா முடிவு செய்ய வேண்டும்

 7. K.S.Sundaram

  Your angatham about the T.V commercial show is over the top. I read such subtle comments in the novels of Indira Parthasarathy. I am glad to note that a serious writer like jeyamohan is quite good in angatham also-sundaram

 8. வன்பாக்கம் விஜயராகவன்

  அன்புள்ள ஜெயமோகன்

  இந்த சிறுகதை படிக்க ஹாஸ்யமாக இருந்தாலும், ஒரு உண்மையை உரைக்கிரது.

  தற்கால தமிழில் ந ன இரண்டிரற்க்கும் உச்சரிப்பில் வித்தியாசம் இல்லை . முதலில் வரும் ச , ஸ என்றே உச்சரிக்கப்படுகிரது. பொதுவாக ர ற இரண்டின் உச்சரிப்பும் ஒன்றாகி விட்டன.

  தொல்காப்பிய முறைப்படி முதலில் வரும் ச வல்லினம், ஆனால் பெரும்பாலானொர் ஸக்ரவர்த்தி, ஸெல்வம் என்றுதான் உச்சரிக்கின்ரனர்.

  இது கண்டிக்கப்படவேண்டியது இல்லை ; மொழி மாறிவிட்டது அவ்வளவுதான்.

  வன்பாக்கம் விஜயராகவன்

 9. கோபாலன்

  வன்பாக்கம் விஜயராகவன் கூறுவது மிகச் சரியே. இன்னொன்று: ‘ள’ அழிந்தே போய்விட்டது. தமிழாசிரியர்களின் கொடுமைக்குப் பயந்து மக்கள் ‘ழ’ வைச் சரியாகச் சொல்லிவிடுகிறார்கள். ஆனால், இந்த ‘ள’ அனாதையாகி விட்டது. தொலைக்காட்சிகளில் இன்று ‘ள’வைப் பிழையின்றிப் பேசுபவர்களுக்குக் கையில் ஒரு கோடி தந்தாலும் தவறில்லை. மெல்லத் தமிழினிச் சாவது வன்கொடுமையாயிருக்கிறது. தமிழே தெரியாமல், அரைகுறை ஆங்கிலம், அதுவும் ஆங்கிலேயர் கேட்டால் தற்கொலையே செய்துகொள்வர், அப்படிப்பட்ட உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலம், மட்டுமே தெரிந்துகொண்டு, இவ்விரு மொழிகளிலும் உள்ள பெரும் நூல்கள் ஏதும் படிக்காமல் திரியும் ஒரு தலைமுறையையே வளர்த்துவிட்டோம். இந்நிலை தமிழகத்தில் மட்டுமல்ல, பாரத தேசமெங்குமே இப்படித்தான். வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு.

 10. Srinivasan

  டயபடீஸ் இருக்கற குழந்தை தாராளமா பிறக்கும் ….. முடியல

Comments have been disabled.