நம்பிக்கை மனுஷிகள்-கடிதம்

222

ஜெ

நம்பிக்கை மனுஷிகள் வாசித்தேன்.நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து அவர்கள் வழியில் அந்த நோய் கொண்டவர்களை மேம்படுத்த வழிமுறைகள் தெரிந்து,அற்புத மனம் மற்றும் ஆற்றல் கொண்டு இயங்கும் இந்த இரு சகோதரிகளுக்கும் என் அன்பு வணக்கங்கள். நன்றிகள். சந்திக்க வேண்டும் விரைவில்.

இத்தனை இருந்தும் ஏன் அவர்கள் corporate fund வேண்டாம் என்று கூறுகிறார்கள். விஷ்ணுபுரம் விழா அமைப்பு பற்றிய உங்களின் பதிவுகளில் கூட இவ்வகை கருத்து படித்ததாக நினைவு…. இது குறுக்கி கொள்வது ஆகாதா? இருக்கும் அத்தனை வகைப்பட்ட நிறுவனங்குளும், தொழில் செய்யும் அனைவரும் தீண்ட வேண்டாத அளவுக்கு சுய லாபம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள சுரண்டும் வகை மட்டும் தானா? இவர்களின் “தானம்” என்பது பாவம் கழுவ மட்டும் தான் என்ற பார்வையா அல்லது வேறு காரணமா?

கலை இலக்கிய உலகில் இத்தகைய நோக்கு புரிகிறது. ஆனால் பயன்பெறுவர் என தெரிந்தும் இவர்களை போன்ற வாழ்வு மேம்பாட்டாளர்கள் மெதுவாக செல்வது சற்று கஷ்டப்படுத்துகிறது.

அவர்களின் ஆசைகள் சீக்கிரம் நிறைவேற வேண்டும்

அன்புடன், லிங்கராஜ்

அன்புள்ள லிங்கராஜ்

அவர்கள் கார்ப்பரேட் ஃபண்ட் வேண்டாமென்று சொல்கிறார்களா என்ன? நிதியளிக்கும் நிறுவனத்தின் மூலத்தைப்பற்றி அறிந்திருக்கவேண்டும் என்கிறார்கள் அவ்வளவுதான்

ஜெ

முந்தைய கட்டுரைகுகை ஓவியங்கள் -கடிதம்
அடுத்த கட்டுரைகசாக்கின் இதிகாசம்- சொற்கள்