இந்தியா:கடிதங்கள்

<![CDATA[அப்பாலும்…
அன்புதகு ஜெ,

உடம்பின் பாற்பட்டு எழுதுபவன் நான். அப்படி இதுவரை உணர்த்தவில்லை என்றால் அறிவித்துக் கொள்கிறேன். இதை வேண்டுமென்றே செய்துவருவதாகவும் நம்புகிறேன். ஒரு சமன்பாட்டுக்காக இப்படி என்றும் கற்பித்துக் கொள்கிறேன்.

இந்த இயல்பு காரணம் உங்கள் ‘வலி’ எனக்கு நெருக்கமாக இருந்தது. கோமல் சுவாமிநாதனைப் பற்றி எழுதியதில் உள்ள நேர்த்தி அல்போன்ஸம்மாவைப் பற்றி எழுதியதில் கூடி வரவில்லை, ஆனால் அல்போன்ஸம்மாவைப் பற்றி எழுதியதே பயன்மேன்மை மிக்கதாக எனக்குப் பட்டது. நான் செயல்பட எடுத்திருக்கிறதாக நம்பும் நிலைபாடுக்கு இது அப்பாற் பட்டது.

கோமல் பட்டு உங்களில் விட்டுச் சென்ற பாடு, இனி வர இருக்கும் வலியை எல்லாம் ‘வ்பூ’வி விடலாம் என இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளும் சூத்திரத்தை அளிக்கிறது. ஆனால் அல்போன்ஸம்மாவின் வலி, ‘ஆன்மீகம்’ என்கிற சொல்லாடத் தயங்குவேனால், உடம்புக்கு அப்பால் எழுகிறது. மறக்கப்பட்ட அவர், குழந்தைகள் வழி எழுந்ததும் அல்லது எழுப்பித்த உங்கள் எழுத்தும் அதற்கு இசைகிறது.

அன்னை தெரேஸாவைப் புனிதராக்கக் கோரிய வரலாறும் அறிவேன். அவர்கள் அல்போன்ஸம்மாவைப் புனிதராகியதே பொருத்தம் என்கிற அறிவுத் தளத்துக்குப் போகிற திறமையும் எனக்கில்லை. இதுகளில் எல்லாம் அரசியல் கூட இருக்கலாம். ஆனால் ‘வறுமை எக்காலமும் உங்களோடு இருக்கும்; நான் இருக்கப் போவதில்லை’ என்றவர் என்பு தோல் போர்த்திய உடம்பில் இயேசு.

ஹிட்லர்-பஜ்ரங்தள் கட்டுரைத் தீ யணைப்புக் கட்டுரைதான் ‘எனது இந்தியா’ என்று தோன்றியது, ஆனால் பெங்களூர் நண்பருக்கு உங்கள் மறுபடி அப்படி இல்லை என்றாக்குகிறது. ஒரு தனித்த படைப்புக்குள் உங்கள் சமனிலை தோன்றாது; மொத்தமும் படிக்கவேண்டும் போலும். ‘ஒரு எழுத்தாளருக்கு எல்லாம் தெரியும்’ என்றொரு முற்று மதிப்பை அவர்மீது சுமத்துவதால் வரும் கோளாறுதானே இது? அவரும், ஆடும் துலாப் போல், எழுதி எழுதிச் சமநிலைக்கு வர முயல்பவர்தான் அல்லவா? என்ன, அல்போன்ஸம்மாபோல் அப்பாலும் எழும் தருணங்கள் அவருக்கு உண்டு.

அன்போடு
ராஜசுந்தரரஜன்

பி.கு. பதிப்பிக்க விரும்பினால் வேண்டாததை வெட்டிக்கொள்ள உரிமை தருகிறேன்.

**

எனது இந்தியா என்கிற உங்கள் கட்டுரைக்கு எதிர்வினையாக அல்லது உடன்வினையாக கடிதங்கள் அனுப்பிய வாசகர்களுக்கு நீங்கள் அளித்த பதில்களையும் உங்கள் கட்டுரையின் விடுபட்ட பகுதிகளாகவே சேர்த்து வாசித்தேன். இந்தக் கட்டுரை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை அல்ல என நீங்கள் ஒப்புக் கொண்டிருப்பதுடன் ஆதாரங்களை சேகரித்து எழுத உங்களுக்கு அவகாசமோ மனமோ இல்லையென்றும், நீங்கள் அந்த மாதிரி கட்டுரைகளை நம்புவதும் இல்லையென்று சிறில் என்பவருக்கு அளித்த பதிலில் அறிவித்துள்ளீர்கள். உணர்வுப்பூர்வமாகவே நானும் இக்கட்டுரை குறித்து எழுத விழைகிறேன்.

இந்திய எதிர்ப்பு என்பதிலிருந்து நான் துவங்குகிறேன்.  “இதன் போலீஸ், நீதிமன்றம், அரசாங்கம், மதங்கள், பண்பாட்டு அமைப்புகள் அனைத்துமே அநீதியை மட்டுமே செய்துகொண்டிருப்பவை என இவை நேரடியாகவும், மறைமுகமாகவும் வாதிடுகின்றன. சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர் போன்றவர்கள் இந்த தேசத்துக்கு எதிராக கிளர்ந்தெழவேண்டுமென இவை அறைகூவுகின்றன. இந்த தேசத்தின் இறையாண்மை என்பது தான் இந்த நாட்டுமக்களின் உண்மையான முதல் எதிரி என இவை பிரச்சாரம் செய்கின்றன”. நீங்கள் குறிப்பிடுகிற பத்திரிகைகள் குறைந்த அளவு ஜனங்களாலேயே வாசிக்கப்படக் கூடியவை. பெரும்பான்மையான மக்கள் மேற்படி அமைப்புகளை நன்றாகவே புரிந்தும் அவைகளுக்கு அடிபணிந்துமே தங்கள் சிந்தனையில் மாறாது தொடர்கிறார்கள். சிற்றிதழ் வாசகன் என்பவன் மைய இதழ்கள் அல்லது பத்திரிகைகள் கிடைக்காமல் சிற்றிதழ்களின் பக்கம் வருகின்றவன் அல்ல. மாறாக வெகுஜன ஊடகங்களைத் தாண்டியும் இன்னும் ஆழமாக அல்லது மாற்றுச்சிந்தனைகளைத் தெரிந்து கொள்ளவே அவன் இப்பக்கம் வருகிறான். இறையாண்மை குறித்த இந்தச் சிந்தனை அருந்ததி ராய் எழுதிய காஷ்மீர் பிரச்சினை குறித்த கட்டுரையிலிருந்து உங்களுக்கு எழுந்திருக்கலாம் என நம்புகிறேன். காஷ்மீர் பிரச்சனைதான் இந்தியாவில் வாழ்கிற ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் பிரச்சனை என்பதாக உங்கள் கட்டுரையிலிருந்து ஒருவர் புரிந்து கொள்ள இடமிருக்கிறது. இந்திய இறையாண்மையிலிருந்து விலகிச் செல்வதற்கான போராட்டத்தை நடத்திக்கொண்டிருப்பவர்கள் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். காஷ்மீர்ப் பிரச்சனையில் ஆரம்பத்திலிருந்தே மூன்று குரல்கள் உரக்கக் கேட்கின்றன. ஒன்று காஷ்மீரைப் இந்திய இணைப்பிலிருந்து பிரித்து பாகிஸ்தானத்தோடு சேர்ப்பது. இரண்டு காஷ்மீரத்தை இந்திய ஒன்றியத்தோடே தொடர்வது. மூன்று பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சேராமல் தனிப் பிரதேசமாகஅறிவித்துக் கொள்வது. இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு சில காலம் வரை காஷ்மீர பிரச்சனையின் முக்கிய நோக்கம் தனி நாடாக அறிவித்துக் கொள்வதாகத்தான் இருந்தது. அதற்கான அரசியல் நியாயங்களும் அக்காலகட்டத்தில் அம்மக்களுக்கு இருந்ததாகவே நம்பத் தோன்றுகிறது. இந்த மூன்று குரல்களில் பாகிஸ்தானோடு இணைவது என்கிற குரலுக்குத்தான் இந்தியாவும் பாகிஸ்தானும் எதிர்த்தும் ஆதரித்தும் முன்னுரிமை கொடுத்தன. அதையே ஊடகங்களும் வளர்த்தெடுத்தன. காஷ்மீரத்தில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கதே. ஆனால் அதற்குப் பின்தான் போராட்டம் தொடங்கியது என நீங்கள் எழுதியிருப்பது வரலாற்றை பூசி மெழுகுதல். அம்மண்ணின் மைந்தர்கள் பண்டிட்டுகள் என்றால் இஸ்லாமியர்கள் வந்தேறிகாளா? தனிக் காஷ்மீர் என்கிற குரலை ஒடுக்கியதில் இந்திய பாகிஸ்தானிய அரசுகளின் தேசியவாதங்களின் பங்கை நீங்கள் மறுக்கிறீர்களா?. இஸ்லாமியர்கள் ஒரு அரசை உருவாக்க முனைந்தாலே அது தாலிபான் அரசாகத்தான் இருக்கும் என்பதை எப்படி நம்புகிறீர்கள். எனில் ஏனைய இஸ்லாமிய நாடுகள் அனைத்துமே தாலிபான் நாடுகளா? தாலிபான்கள் ஆயுதபலத்தினாலே முறையான அரசமைப்பற்ற ஆப்கானிஸ்தானில் ஒரு பைத்தியக்கார இஸ்லாமிய அரசை உருவாக்கினர். இஸ்லாம் மட்டுமல்ல இந்து, பெளத்த, கிருத்துவ மதங்களின் அடிப்படையில் எந்த அரசுகள் அமைந்தாலும் அவையும் தாலிபான் அரசுகளே. காஷ்மீரத்தில் ஆயுதப் போராட்டம் எண்பதுகளுக்கு பின்பு எழுந்ததே. அதற்கு முன்புவரை அந்த மண்ணில் ஆயுதங்களை வைத்து போராடிக் கொண்டிருந்தது இந்திய பாகிஸ்தானிய அரசுகளே. இந்திய ராணுவத்தாலே காணமல் போகின்றவர்கள், கொலை செய்யப் படுபவர்கள், வன்பு]
]>

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைவலியின் தேவதை:கடிதங்கள்