கருத்துச்சுதந்திரம்!

Some copies of The Hindu dated January 18, 2015, carried an image of people holding copies of the French magazine Charlie Hebdo , the cover of which might have given offence to a section of readers. The image was removed mid-way through the print-run. The Hindu regrets and apologises for the inadvertent and accidental use of the image.

– Editor-in-Chief

தி இண்டு இதழில் இருந்து….

தமிழாக்கம்

வாசகர்களுக்கு

ஜனவரி 18 2015 தேதியிட்ட தி இந்து நாளிதழின் சிலபிரதிகள் மற்றும் பிரதிகளின் ஜெராக்ஸ்பிரதிகளில் யாரோ சிலர் எங்கோ சார்லி ஹெப்டோ என்ற பிரெஞ்சுப் பத்திரிகையையோ அல்லது அதன் சாயல் கொண்ட வேறு பத்திரிகையோ அல்லது அது என்று சந்தேகிக்க உசிதமான ஏதோ ஒரு பத்திரிகையையோ கையில் வைத்திருக்கிறார்களோ இல்லையோ என்ற ஐயமேற்படும்படியாக நின்றுகொண்டிருப்பதாக சிலருக்குத் தோன்றியது அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகச் செய்தி வந்திருப்பதனால் நாங்கள் கடும் மன உளைச்சலும் வேதனையும் அடைந்திருக்கிறோம். அந்த படம் கொண்ட இதழ்கள் கடைகளில் இருந்து கெஞ்சி திரும்பப்பெறப்பட்டு தீவைத்துக்கொளுத்தப்பட்டு அந்தச்சாம்பல் உரியமுறையில் கூவத்தில் கலக்கப்பட்டு கூவமும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அத்துமீறி அந்தப்படம் எங்கள் படத்திலிருக்கும் ஒருவரின் கையிலிருக்கும் பத்திரிகையின் படத்திலிருக்கும் படத்தில் இடம்பெற்றமைக்கு ஆழ்ந்த வருத்தமும் தெரிவித்துக்கொள்கிறோம்

ஆசிரியர் சீப்புக்குள்

முந்தைய கட்டுரைதிருச்செங்கோடு
அடுத்த கட்டுரைபெருமாள் முருகன் -விடாமல் ஒரு கடிதம்!