வெண்முரசு உதவிக்கு….

venmurasu-poster

ஜெ

வெண்முரசு இப்போதே பிரம்மாண்டமாக இருக்கிறது. இன்று உள்ள அளவிலேயே இதுதான் தமிழிலே பெரியநாவல். நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்கள். எங்கே எதை வாசித்தோம் என்பதே நினைவுகூர கடினமாக இருக்கிறது

http://siddhu.ws/venmurasuweb/#/latest

தற்செயலாக இந்த இணையதளத்தை வாசித்தேன். அத்தியாயத்தை ஒரு கதாபாத்திரத்தை வைத்துத் தேடுவதற்கு மிக மிக உதவிகரமானது இது. ஆனால் நீலம் வரைதான் வந்திருக்கிறது. மேலே இல்லை

இதை பிரயாகைக்கும் அப்டேட் செய்யலாமென்று நினைக்கிறேன்

கார்த்திக்

அன்புள்ள கார்த்திக்,

அது நண்பர் சித்தார்த் தனிப்பட்ட ஆர்வத்தால் செய்தது. தொடர்ந்துசெய்வது கடும் உழைப்பு தேவைப்படக்கூடியது. பலர் கூடித்தான் அதைச்செய்யமுடியும்

வெண்முரசு பற்றி மேலும் இரு தளங்கள் உள்ளன

வெண்முரசு விவாதங்கள் தளம் வெண்முரசு பற்றிய கடிதங்களை பிரசுரிக்கிறது- தினமும்

வெண்முரசு குழுமம் நண்பர்கள் வெண்முரசு பற்றி விவாதிக்கும் இடமாக உள்ளது

ஜெ

முந்தைய கட்டுரைதல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி நூல்கள்
அடுத்த கட்டுரைதிருச்செங்கோடு