டியர் ஜெ.மோ ,
தல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி இவர்களின் நூல்களின் நல்ல தமிழ் மொழிபெயர்ப்பு எந்த பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இவர்களின் நூல்களை வாசிக்கத் துவங்குபவர்கள் எங்கிருந்து தொடங்க வேண்டும். எந்தெந்த நூல்களை வாசிக்க வேண்டும். கொஞ்சம் வழிகாட்ட முடியுமா?ஏற்கனவே நீங்கள் இது பற்றி குறிப்பிட்டிருந்தால், அந்த லிங்கை கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.
இப்படிக்கு,
கார்த்திக்.
அன்புள்ள கார்த்திக்
தாஸ்தயேவ்ஸ்கி
குற்றமும் தண்டனையும் – எம் ஏ சுசீலா மொழியாக்கம்- பாரதி புத்தக நிலையம்,மதுரை
அசடன் – எம் ஏ சுசீலா மொழியாக்கம்- பாரதி புத்தக நிலையம்,மதுரை
கரமசோவ் சகோதரர்கள்- புவியரசு மொழியாக்கம்,நியூ செஞ்சுரி புத்தகநிலையம்
தல்ஸ்தோய்
அன்னா கரீனினா – நா.தர்மராஜன் மொழியாக்கம் தல்ஸ்தோய்,பாரதி புத்தக நிலையம்,மதுரை
புத்துயிர்ப்பு- ரா கிருஷ்ணையா. நியூ செஞ்சுரி புத்தகநிலையம்
போரும் அமைதியும் – டி எஸ் சொக்கலிங்கம் மொழியாக்கம் சீதை பதிப்பகம்
பழைய கட்டுரைகள்
இரும்புதெய்வத்திற்கு ஒரு பலி
கனவுபூமியும் கால்தளையும்
அறம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா?