எனது இந்தியா:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

நீங்கள் எனது இந்தியா கட்டுரைக்கு எழுதிய விளக்கக் குறிப்பைப் படித்தபோது என்னுடைய பேராசிரியரின் ஒரு வரியை நினைவுகூராமல் இருக்க முடியவில்லை. கூறப்பட்ட தளம் வேறாக இருந்தாலும் இரு வரிகளுக்கு நடுவே உள்ள பொதுத்தன்மையைக் கண்டு நீங்கள் ஆச்சரியமடைவீர்கள் என்று நினைக்கிறேன்.  நான் எப்போதும் ஒரு கருத்து சார்ந்த உள்ளடக்கத்தையே தேடுகிறேன், தகவல் சர்ந்த உள்ளடக்கத்தை அல்ல. அது என் பேராசிரியரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது.  அத்தகைய விஷயங்களை உங்கள் கட்டுரையில் கண்டேன், அது என்னை மிகவும் கவர்ந்தது.

‘There was one complaint voiced by everyone against my paper: that my thesis is not backed up by examples.  My answer is that I am not aiming at a thesis or an idea as such.  I am, on the other hand, recording an experience of mine because it is the result of my thought.  It is easier to dismiss it than to disagree with it.  I am sensible of the mischief of turning it into ‘ideas’ and of arguing, with some persuasive force, against it.  The point of it is certainly self-evident, though it is not obvious if one is not false in one’s application of mind.  I have not written anything which I didn’t feel at first, and contemplate later.  You may not agree with me, but that is not because I am wrong but because you want things to be different from the way I want them to be.’

( http://www.angelfire.com/tv2/proftvs/indian_writing_in_english.htm )

I was reminded of that passage when I read this note of yours:

‘என் கட்டுரையின் இயல்¨ப்பபற்றி முதலில் தெளிவுபடுத்துகிறேன். அது ஆராய்ச்சிக்கட்டுரை அல்ல…அத்தகைய விவாதம் என்பது ஒரு தர்க்கப்பயிற்சி விளையாட்டு மட்டுமே.

என்னுடைய கட்டுரை உணர்வு சார்ந்தது. நான் அடைந்த மன எழுச்சியை மட்டுமே அதில் சொல்ல முயன்றிருக்கிறேன். ஓர் எழுத்தாளனாக, ஓர் இந்தியக்குடிமகனாக. இத்தகைய கட்டுரைகளுக்கு அதை வாசிப்பவர் எழுதியவரின் உணர்ச்சிகளை அடையாளம் கண்டுகொண்டால் மட்டுமே மதிப்பு. இல்லையேல் எந்த மதிப்பும் இல்லை. என் உணர்ச்சிகள் உண்மையானவை, நேர்மையானவை என்று உங்களுக்குத் தோன்றவில்லை என்றால்
அக்கட்டுரையை நிராகரித்துவிட்டு செல்லலாம். அது வாசகனிடம் எதையும் விவாதித்து, ஆதாரம் காட்டி நிறுவ முற்படவில்லை.’

– vishvesh

***

அன்புள்ள ஜெயமோகன்,

எனது இந்தியா கட்டுரையை ஒரு நண்பர் எனக்கு அனுப்பிக்கொடுத்தார். அதன் பின்னர்தான் நான் உங்கள் இணையதளத்தை படித்தேன். அக்கட்டுரை பொதுவான பல்லாயிரம் வாசகர் மத்தியில் சென்றிருக்கிறது. நான் யாரிடமெல்லாம் அதைப்பற்றிபேசினேனோ அவர்கள் அனைவருமே அதைப் படித்திருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு கட்டுரை இந்த அளவுக்கு விரிவாக பேசபப்ட்டதில்லை. என் நண்பர்கள் சிலர் கூடி அதைப்பற்றி ஒரு விவாதம் நடத்தினோம். அரசாங்கத்தை எதிர்ப்பதும் சமூக அமைப்பை எதிர்ப்பதும் நம் நாட்டில் சட்டென்று அத்து மீறிச்சென்று நாட்டை எதிர்ப்பது அதன் மூலம் இந்த சமூகத்தின் எல்லா பிரிவுக்கும் இடையே அவநம்பிக்கையை உருவாக்கி சமூகத்தின் செயல்பாட்டையே குலைப்பது என்ற அளவுக்குச் சென்றிருக்கிறது. இதைப்பற்றிய கவலை எங்களுக்கு எல்லாமே உண்டு. அந்தக்கவலையை உங்கள் கட்டுரை பிரதிபலித்ததாலேயே  அது இத்தனை பிரபலமாயிற்று என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வதுபோல உங்களை முத்திரை குத்த சிற்றிதழ் எழுத்தாளர்கள் முயல்வார்கள். அவமானம்செய்வார்கள். ஆனால் நிலைமை மாறி வருகிறது என்பதை நம் சிற்றிதழ் எழுத்தாளர்களுக்குச் சொல்லக்கூடிய ஒரு முன்னோடி குரலாக உங்கள் கட்டுரை இருக்கிறது என்பதை அவர்கள் காலம் கடந்தாவது உணர்வார்கள்.

சிவசங்கரன்

[தமிழாக்கம்]

***

அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் கட்டுரை எனது இந்தியா இப்போதுதான் எனக்கு படிக்கக் கிடைத்தது. சமீபகாலமாக இத்தனை நேரடியான உணர்ச்சிபூர்வமான ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது இல்லை. நம்மை நாமே எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை காட்டிய கட்டுரை அது. நம்முடைய பத்திரிக்கையாளர்களைப்பற்றி நீங்கள் சொல்வது உண்மை என்றால் அது மிகமிக ஆபத்தான ஒன்றுதான்

சுப்ரமணியம் குமார்

அன்புள்ள நண்பருக்கு,

நம் இதழாளர்கள் குறிப்பாக முற்போக்கு என்று சொல்லிக்கொள்ளும் இதழாளர்களைப்பற்றி என்னால் இப்போது உறுதியாக பல தகவல்களைச் சொல்ல முடியும். அவர்களில் பலர் கீழ்த்தரமான இனவாதிகளாகவும் மதவாதிகளாகவும் மேலைநாடுகளிலேயே முத்திரை குத்தப்பட்ட அமைப்புகளுடனும் மனிதர்களுடனும் நேரடியாக தொடர்பு கொன்டவர்கள்.  அத்தகவல்களை எனக்கு இதழாளர்களே அனுப்பி உதவினார்கள்.அதை விரிவாக எழுதுவேன்.

முந்தைய கட்டுரைசாங்கிய யோகம் (1 – 9) : உலகாற்றும் நெறி
அடுத்த கட்டுரைஎனது இந்தியா ஒரு கடிதம், விளக்கம்