சார்லி ஹெப்டோ -கடிதம்

ஜெ,

மிக முக்கியமான கட்டுரை. நாம் ஒரு சமூகமாக எதை நோக்கி நகரவேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. நமக்கு மேற்கிலிருந்து நிறுவனங்கள் வழியாக இறக்குமதியான சிந்தனைகள், அறிதல் முறைகளை தவிர்த்த வேறொன்றை குறிப்பிடுகிறார் ஜெ. அராஜகத்தைப்போலவே anarchyயும் கெட்டவார்த்தையாகிவிட்டது

சிறில் அலெக்ஸ்

*

ஜெ

உண்மையான அரசின்மைவாதி என்பவன் அனைத்தையும் விமர்சிப்பவன். அனைத்தையும் என்பதை மும்முறை அடிக்கோடிடவும். அதன் மொழி என்பது எப்போதும் எள்ளல்தான். பிறரை எள்ளிநகையாடுபவன் தன்னையும் எள்ளிநகையாட அனுமதிப்பான். புனிதமான அனைத்தையும் கவிழ்ப்பான். அதிர்ச்சியடையச் செய்வான்.//

பிரிட்டனில் சில வருடங்களுக்கு முன் Little Britain என்ற நகைச்சுவை தொலைக்காட்சி தொடர் பிபிஸியில் பிரபலம்.
அந்த நாட்டுகாரர்களை அவர்களே எல்லைகளே இல்லாமல் கேலி செய்யும் தொடர். (தலைப்பே Great Britain க்கு எதிர்மறையாக Little Britain!) உடல் பெருத்தவர்கள், ஊனமுற்றவர்கள், வயதானவர்கள், மனநலம் குன்றியவர்கள், பிரதமர், மதம், இனம் என்று எல்லாவற்றையும், எல்லாரையும் வரைமுறையே இல்லாமல் கிண்டல் செய்துகொள்வார்கள்.

முக்கால் வாசி சிக் ஜோக் எனப்படும் அருவெறுக்க வைக்க வைக்கும் (அதாவது என்னைப் போன்ற இந்திய மனம் கொண்டவர்களுக்கு!). இருந்தும் எப்படி இப்படியெல்லாம் நிகழ்ச்சி, ப்ரைம் சேனலில் ப்ரைம் நேரத்தில் வைக்கிறார்கள்; அனைவரும் சகித்துகொள்ளுவது மட்டுமல்லால் எப்படி மிக பிரபலம் வேறு என்று வியப்பேன். நமது நாட்டில் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
உதாரணத்திற்கு, கீழ் கண்ட சுட்டியில் ஒரு மனநலம் குன்றியவர் போப்பை சந்திக்கப் போகிறார்.

நண்பர்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்!
https://www.youtube.com/watch?v=z7Xy1nI4Wzw

இது சற்று பரவாயில்லை..! பிரிட்டிஷ்காரர்கள் உலகத்திலேயே மிக rude என்பதற்கு…
https://www.youtube.com/watch?v=ZDxIFQLOiV0

சிவா கிருஷ்ண மூர்த்தி

முந்தைய கட்டுரைவெண்முரசு வெளியீட்டு விழா
அடுத்த கட்டுரைகரிய பட்டில் வைரம்