நேற்று சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். பொங்கல் விடுமுறை என்பதால் வாசகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு கவனித்த சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
அனைத்து முக்கிய அரங்குகளிலும் எழுத்தாளர்கள் மத்தியில் பேசப்பட்டுக் கொண்டிருந்த ஒரு விஷயம், சமீபத்தில் தனது எழுத்து பணியை, சில வட்டார சாதி அரசியல் கட்சிகள் கொடுத்த இடையூறுகளினால் நிறுத்திக் கொண்ட பெருமாள் முருகனைப்பற்றித்தான். சக எழுத்தாளர்களும், வாசகர்களும் தங்களது முழு ஆதரவை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அதே நேரத்தில், எழுத்தாளன் இது போன்ற
இடையூறுகளினால் பின்வாங்கக்கூடாது என்றும் ஆதங்கப்பட்டுக்கொண்டனர்.
அதில் ஒரு பிரபலமான எழுத்தாளர் கூறியதாவது. “எவ்வளவுக்கு எவ்வளவு மதம் மற்றும் சாதி சம்மந்தமான நம்பிக்கைகள் அதிகமாகின்றனவோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதைபற்றிய கேளிக்கைகளும், விமர்சனங்களும் அதிகமாக வேண்டும், அப்பொழுதுதான் அந்த மத அமைப்போ இல்லை சாதிய அமைப்போ பண்படையும் என்றார்”.இதில் உண்மை இருப்பதாக உணர்கிறேன்.
இதில் குறிப்பிடத்தக்க நிகழ்வு என்னவென்றால், பெருமாள்முருகனுடைய புத்தகங்கள் வெகுவாக வாசகர்களால் வாங்கப்பட்டன. இதை மக்கள் தனக்கு கொடுத்த ஆதரவாக எடுத்துக்கொண்டு மீண்டும் அவர் தனது எழுத்து பணியை தொடருவார் என்று நம்புகிறேன். நம்புவோம்.
குறிப்பு: கருத்துச் சுதந்திரத்திற்கு வரையறை வேண்டும் – மனுஷ்யபுத்திரன் கருத்து சற்று வியப்பாக இருக்கிறது.
நன்றி,
மருது
*
Dear Jeyamohan,
This is Gnani’s response to the accusation that he spoke in a different voice in the D’cruz episode.
ஜோ டி குரூஸ் அவருடைய நாவலுக்காக கத்தோலிக்க திருச்சபையாலும் மீனவக் கிராமங்களாலும் ஊர் விலக்கு செய்யப்பட்டார். அவரே அதை மேடைகளில் சொல்லி நீதி கேட்டார். அவர் அநியாயமாக கத்தோலிக்கர்களை விமர்சித்ததனால் தகுதியான தண்டனைதான் அது என்றுதான் இப்போது கருத்துச் சொல்லும் ஞாநி வாதிட்டார். ”
Is this true ஞாநி சங்கரன்?
ஞாநி சங்கரன் முழுப் பொய். அவர் அவ்வாறு ஊர்விலக்கு செய்யப்பட்ட தகவலையே இப்போது இந்த பதிவின் மூலம்தான் நான் அறிகிறேன். அப்படி நடந்திருக்குமானால், அதுவும் நம் கடும் கண்டனத்துக்குரிய செயலேயாகும். அந்த செய்தி என் கவனதுக்கு அப்போது வந்திருந்தால் நிச்சயம் கண்டித்திருப்பேன். இப்போதும் கண்டிக்கிறேன். எந்த மத, எந்த சாதிய, இன, வெறி, தீவிரவாதத்தையும் வன் வன்முறை, மென் வன்முறைகளையும் நான் ஆதரிப்பதில்லை.
Will be happy if you could publish this in your site.
Fondly yours,
p a krishnan
*