«

»


Print this Post

கம்பன் கண்ட மயில்


நெடுங்காலமாகவே கம்பராமாயணம் நம் சூழலில் அறிஞர் மத்தியில் பேசப்பட்டுள்ளது. அதன் பல நுட்பங்கள் பேசிப்பேசிக் கண்டடையப்பட்டவை என்றால் அது மிகையல்ல. ஒருகட்டத்தில் கமபாராமயணம் ரசனையற்ற அரசியல் தாக்குதலுக்கு ஆளானபோது அந்த இலக்கிய உரையாடலை காரைக்குடி சா.கணேசன் கம்பன் கழகம் மூலம் மீண்டும் உருவாக்கினார். அது ஒரு மிகப்பெரிய அலையை உருவாக்கி இன்று செயலற்று அபத்தமான பட்டிமன்றங்களில் சிக்கிக் கிடக்கிறது.

இணையம் போன்ற இன்றைய ஊடகத்தில் கம்பராமாயணம் மறு கண்டுபிடிப்பு செய்யப்பட வேண்டும். கம்ப ராமாயணம் அளவுக்கு முடிவிலாது மூழ்க இடமளிக்கும் தமிழ் இலக்கியம் வேறொன்று இல்லை. இந்திய அளவில் வியாச மகாபாரதத்தை மட்டுமே ஈடு கூற முடியும். காளிதாசன் கூட ஒருபடிகீழே தான். உலக இலக்கியங்களிலேயெ அதற்கிணையாகச் சிலவே உள்ளன என்று நித்ய சைதன்ய யதி கூறுவதுண்டு.

காவியகர்த்தனுக்கு தெரியாதது இல்லை என்பது நம் மொழியின் நம்பிக்கை. காளிதாசன் கம்பன் குறித்து அத்தகைய பல கதைகள் உண்டு. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை கம்பனில் ஒரு நுட்பத்தைக் கண்டடைந்த கதையை டோண்டு ராகவன் அவரது இணையப்பக்கத்தில் சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்

http://dondu.blogspot.com/2010/03/blog-post_3615.html

காமமும் கம்பனும்- ஒரு காலைநேரம்

கம்பனும் காமமும், இரண்டு

கம்பனும் காமமும் :ஒருகடிதம்

கம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது

கம்பனும் காமமும்:அணிகளின் அணிநடை

குருதிச்சின்னங்கள்[கம்பனும் காமமும்.5]

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6969/

5 comments

Skip to comment form

 1. RV

  ராமாயணம் பெரும் காவியம்தான். இந்திரஜித்தும், ஹனுமனும், லக்ஷ்மணனும், கும்பகர்ணனும், ராவணனும் மாபெரும் ஆளுமைகள்தான். ஆனால் மகாபாரதத்துக்கு அதை சமமாக சொல்ல முடியாது. உண்மையில் பாரதத்துக்கு ஈடான இலக்கியம் இது வரையில் வரவில்லை. யாரோ சொன்னது (நீங்கள்தானா?) நினைவுக்கு வருகிறது – இன்று வரை வந்த ஒவ்வொரு கதைக்கும் வேர் மகாபாரதத்தில்தான் இருக்கிறது!

 2. Dondu1946

  எனது பதிவின் சுட்டியை தந்ததற்கு மிக்க நன்றி.

  சமீபத்தில் 1961-ல் முதன் முதலாக வே. ராமலிங்கம் பிள்ளையின் இக்கதையை படித்தேன். மனிதர் தனது இந்த நீண்ட கால தேடலை சுவைபட கூறியிருந்தார்.

  நானும் ஒரு சிறிய அளவில் அவர் நிலையில்தான் இருந்தேன். அதனால்தான் அப்பதிவை இட்டேன். அவருக்காவது பல ஆண்டுகள் ஆகியிருந்தன, முழு விடை கிடைக்க. ஆனால் எனக்கோ பதிவு போட்ட நான்கு மணி நேரத்துக்குள் விடை கிடைத்துவிட்டது.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 3. ramji_yahoo

  ராமாயணம் ரஜினி காந்த் படம் போல, மகாபாரதம் கமல் ஹாசன் படம் போல.
  அவ்வளவுதான்.

 4. M.A.Susila

  அன்பு ஜெ.எம்.,
  கம்பனின் இலக்கிய ஆளுமை மகத்தானது. கம்பனின் காவிய நயம் சமயச் சிமிழுக்குள் வரம்புகட்டிச் சிறுமைப் படுத்தப்பட்டபோது காரைக்குடி கம்பன் கழகமும் கம்பன் அடிப்பொடி என்றே தன்னை அழைத்துக்கொண்ட திரு சா.கணேசனும்தான் அதை மீட்டெடுத்தார்கள் என்ற தங்கள் கருத்து,
  /(/அந்த இலக்கிய உரையாடலை காரைக்குடி சா.கணேசன் கம்பன் கழகம் மூலம் மீண்டும் உருவாக்கினார். அது ஒரு மிகப்பெரிய அலையை உருவாக்கி இன்று செயலற்று அபத்தமான பட்டிமன்றங்களில் சிக்கிக் கிடக்கிறது.//)
  மிகவும் உண்மையானது.
  என் பதின் பருவத்தில் காரைக்குடி கம்பன் விழா மேடைகள்தான் மெய்யான தமிழ் இலக்கிய ஆர்வத்தையும்,கவியுள்ளத்துக்குள் ஆழ்ந்து போகும் தேடலையும் என்னுள் கல்வெட்டாய்ப் பதித்து தமிழிலக்கியக் கல்வியை நோக்கி என் பாதையை மடை மாற்றின.
  ஆனால் அந்த மேடைகளில் நிகழ்ந்த பட்டிமன்றங்கள் (ஆரம்பகாலத்தில்)
  வெட்டிப் பொழுது போக்கும் கேளிக்கை அரங்குகளாக இல்லாமல் உண்மையிலேயே தரமான இலக்கிய விவாத அரங்குகளாகத்தான் இருந்தன

  தொ.மு.பாஸ்கரத் தொண்டமான்,தொ.மு.சி.ரகுநாதன்,ப.ஜீவானந்தம்,எஸ்.ஆர்.கே (கம்பனும் மில்டனும் எழுதிய இடது சாரிப் பேராசிரியர்),திருச்சி ராதாகிருஷ்ணன்,மு.மு.இஸ்மாயில் எனப் பலதளங்களில் உள்ள அறிஞர்களும் தங்கள் ஆராய்ச்சிக் கருத்துக்களைப் பகிரும் அற்புதக் களமாகத்தான் அந்த மேடை இருந்தது.
  குறிப்பிட்ட காலகட்டம் வரை அதன் தரம் தாழ அனுமதிக்கப்பட்டதே இல்லை.(1957 முதல் தொடர்ந்து 10,12 ஆண்டுகள் அதை நேரடி சாட்சியாகக் கண்ட அனுபத்தால் என்னால் இதை உறுதியாகச் சொல்ல முடியும்)

  கடுமையான தரக் கட்டுப்பாட்டைப் பேணிய ஒரு அமைப்பினால் புத்துயிரூட்டப்பட்ட இலக்கியப் பட்டிமன்றங்கள் இன்று நகைச்சுவைக் கிளுகிளுப்பூட்டும் கேலிக் கூத்துக்களாகத் தரம் தாழ்ந்து – தாங்கள் குறிப்பிட்டது போல அபத்தமாக மாறிப் போயிருப்பதை உண்மையிலேயே காலத்தின் முரண்நகை என்றுதான் சொல்ல வேண்டும்.

 5. ஜெயமோகன்

  http://masusila.blogspot.com/2010/03/blog-post_29.html
  சூர்ப்பனகையின் வஞ்சத்தை எடுத்துக் காட்ட உதவிய அதே எதுகை , இங்கே குகனின் வன்மையை …இராமன் மீது அவன் கொண்ட பாசப் பெருக்கைப் படம் பிடித்துக் காட்ட அற்புதமாக உதவுகிறது.

Comments have been disabled.