பெருமாள் முருகன் -கடிதம்

எந்த ஒரு எழுத்தாளருக்கும் இது போல நிகழ்வது வருத்தத்துக்குரிய ஒரே விஷயமே. தன்னை தானே விமர்சித்துக் கொள்ளாத சமுகம் தேங்கி அழிந்து போகும். தமிழகம் அதன் பயணத்தை தொடங்கி வெகுநாட்களாகி விட்டன.

வந்தியத்தேவன் என்ற ஒருவன் வாழ்ந்தான் அவன் வீர சாகசங்கள் புரிந்து சோழ நாட்டை காப்பாற்றினான் என்று நம்பும் சமூகம் இது (so called வரலாற்றாய்வாளர்கள் உட்பட). இவர்களிடம் நீங்கள் இது கதை இதை கற்பனையாக பார்க்க வேண்டும் என்றால் எடுபடாது.

கும்பல் அரசியலை யாராலும் தடுக்க முடியாது.

கம்பராமாயணத்தை கொளுத்தியவர்கள் ஏன் இதை தடுக்க வரவில்லை என்று கேட்பது கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

அன்புடன்

ராஜேஷ் கோவிந்தராஜன்

முந்தைய கட்டுரைபெருமாள் முருகனுக்கு ஆதரவாக
அடுத்த கட்டுரைபெருமாள் முருகன் கடிதம்-2