புத்தகக் கண்காட்சியில் இந்திய நாவல்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

நடைபெற்று கொண்டிருக்கும் சென்னை புத்தக திருவிழாவில்(ஜன. 9-21), கிடைக்கும் முக்கியமான இந்திய நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் பற்றிய விவரங்களை கீழே கொடுத்துள்ளேன்.
உங்களுடைய வலைதளத்தில் உள்ள பக்கங்களை reference ஆக எடுத்துள்ளேன்.
http://www.jeyamohan.in/216
http://www.jeyamohan.in/217
http://www.jeyamohan.in/218

கீழே உள்ள பட்டியலை word documentஆகவும் இணைத்துள்ளேன்.

அன்புடன்
முகமது இப்ராகிம்

சாகித்ய அகாதமி வெளியிட்டு சாகித்ய அகாதமி ஸ்டாலில் கிடைக்கும் முக்கியமான மொழிபெயர்ப்பு நாவல்கள்

செம்மீன் [செம்மீன்]. மலையாளம். தகழிசிவசங்கரப்பிள்ளை. தமிழாக்கம் சுந்தர ராமசாமி

சேரி [மாலப்பள்ளி ]. தெலுங்கு. உன்னாவால் லட்சுமிநாராயணா. தமிழாக்கம் எம்.ஜி ஜகன்னாத ராஜா

தட்டகம் . மலையாளம் . கோவிலன். தமிழாக்கம் நிர்மால்யா.

இரண்டாமிடம் [ரண்டாமூழம்].மலையாளம் எம்.டி.வாசுதேவன் நாயர் .தமிழாக்கம் குறிஞ்சிவேலன்

கொல்லப்படுவதில்லை . [நா ஹன்யதே] வங்காளம். மைத்ரேயி தேவி தமிழாக்கம் சு கிருஷ்ணமூர்த்தி

இனி நான் உறங்கலாமா? [இனி ஞான் உறங்கட்டே? ] மலையாளம்.
பி.கெ.பாலகிருஷ்ணன். தமிழாக்கம் ஆ.மாதவன்

நிழல்கோடுகள் [ ஷேடோ லைன்ஸ் ]. ஆங்கிலம். அமிதவ் கோஷ். தமிழாக்கம் திலகவதி

தேசிய புத்தக நிறுவனம் [ National Book Trust ] வெளியிட்டு National Book Trust ஸ்டாலில் கிடைக்கும் முக்கியமான தமிழ் நாவல்கள்

அக்னி நதி. உருது. கு அதுல் ஐன் ஹைதர் .தமிழாக்கம் சௌரி

இயந்திரம் மலையாளம் .மலையாற்றூர் ராமகிருஷ்ணன் .தமிழாக்கம் கெகெபிநாயர்

ஏணிப்படிகள் . மலையாளம் தகழி சிவசங்கரப்பிள்ளை தமிழாக்கம் சி ஏ பாலன்

கங்கவ்வா கங்காமாதா .கன்னடம். சங்கர் மொகாசி புனேகர் தமிழாக்கம் எம் வி வெங்கட் ராம்

கவிதாலயம் . உருது. ஜிலானி பானு . தமிழாக்கம் முக்தார்

சிப்பியின் வயிற்றில் முத்து . வங்காளி. போதிசத்வ மைத்ரேய தமிழாக்கம்சு.கிருஷ்ணமூர்த்தி

தன்வெளிப்பாடு . வங்காளி. சுனில் கங்கோபாத்யாய .தமிழாக்கம் சு.கிருஷ்ணமூர்த்தி

ராதையுமில்லை ருக்மினியுமில்லை . பஞ்சாபி. அம்ரிதா பிரீதம் தமிழாக்கம் சரஸ்வதி ராம்நாத்

இந்துலேகா மலையாளம் ஓ சந்துமேனன் தமிழாக்கம் இளம்பாரதி

பிற பதிப்பகங்கள் வெளியிட்ட முக்கியமான இந்திய நாவல்கள்

ஆரோக்கிய நிகேதனம் . [ஆரோக்கிய நிகேதனம்] வங்காளி . தாராசங்கர் பானர்ஜி. தமிழாக்கம் த.நா.குமாரசாமி கானல் வெளியீடு (வ.உ.சி. நூலகம்)

சாந்தலா [சாந்தலா] கன்னடம் . கெ.வி அய்யர். தமிழாக்கம் எச் கெ சீதாதேவி. சாமி புக்ஸ் (வ.உ.சி. நூலகம்)

வனவாசி [ஆரண்யக்] வங்காளி .பிபூதிபூஷன் தமிழாக்கம் த நா சேனாபதி விடியல் பதிப்பகம்

சம்ஸ்காரா .கன்னடம் .யு ஆர் அனந்தமூர்த்தி * தி.சு.சதாசிவம் அடையாளம்
யயாதி . மராட்டி. காண்டேகர்.* காஸ்ரீஸ்ரீ. அலையன்ஸ் பதிப்பகம்

பால்ய கால சகி. மலையாளம் .வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் குளச்சல் மு யூசுப். காலச்சுவடு

பாத்திமாவின் ஆடு. மலையாளம் .வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் குளச்சல் மு யூசுப். காலச்சுவடு

எங்கள் உப்பப்பாவிற்கு ஒரு ஆனையிருந்தது. மலையாளம் .வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் குளச்சல் மு யூசுப் காலச்சுவடு

மீசான் கற்கள் . மலையாளம். புனத்தில் குஞ்ஞப்துல்லா. * குளச்சல் மு யூசுப் காலச்சுவடு

கோதானம். ஹிந்தி. பிரேம்சந்த். தமிழாக்கம் சரஸ்வதி ராமநாத். அன்னம்

உங்களது இணைப்பில் இல்லாத பிற நூல்கள்

அவஸ்தை .கன்னடம் .யு ஆர் அனந்தமூர்த்தி * காலச்சுவடு

தோட்டியின் மகன். மலையாளம் .தகழி சிவசங்கரன் பிள்ளை. தமிழாக்கம் சுந்தர ராமசாமி. காலச்சுவடு

மஹ்ஷர் பெருவெளி. மலையாளம். புனத்தில் குஞ்ஞப்துல்லா. * குளச்சல் மு யூசுப் காலச்சுவடு

சப்தங்கள். மலையாளம் வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் குளச்சல் மு யூசுப். காலச்சுவடு

மதில்கள். மலையாளம் வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் சுகுமாரன். காலச்சுவடு

உலக புகழ் பெற்ற மூக்கு(சிறுகதைகள்). வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் குளச்சல் மு யூசுப். காலச்சுவடு

தாகூரின் சிறுகதைகள் (இரண்டு தொகுதி) . (வ.உ.சி. நூலகம்)

உதிரும் இலைகளின் ஓசை (சிறுகதைகள்) .உருது. குர்ரத்துலைன் ஹைதர். தமிழாக்கம்:திலகவதி. சாகித்ய அகாதமி

கீழே உள்ள நூல்கள் சாகித்ய அகாதமி/NBT வெளியீட்டில் சமீப காலம் வரை கிடைத்த நூல்கள் வேறு ஸ்டால்களில்/கடைகளில் ஒன்றிரண்டு பிரதிகள் இருக்கலாம்

பொம்மலாடம் [புதுல் நாச்சார் கி இதிகதா] வங்காளி . மாணிக் பந்தோபாத்யாய தமிழாக்கம் த.நா குமாரசாமி

சிக்க வீரராஜேந்திரன் . கன்னடம். மாஸ்தி வெங்கடேச அய்யங்கார். தமிழாக்கம் ஹேமா ஆனந்த தீர்த்தன்(NBT)

தர்பாரி ராகம். இந்தி. ஸ்ரீலால் சுக்ல. தமிழாக்கம் சரஸ்வதி ராம்நாத்(NBT)

சதுரங்கக் குதிரைகள் [தாய் கர்] இந்தி கிரிராஜ் கிஷோர் தமிழாக்கம் மு ஞானம்

ஒரு கிராமத்தின் கதை .[ஒரு தேசத்தின்றெ கத] மலையாளம்.

எஸ்.கெ.பொற்றேக்காட். தமிழாக்கம் சி.ஏ.பாலன்

மௌன ஓலம் [வைசாக] கன்னடம். சதுரங்கா தமிழாக்கம் டிகெ வெஜ்க்கடாசலம்

மண் பொம்மை [மதிர் மனுஷ்ய] ஒரியா . காளிசரண் பாணிகிராகி தமிழாக்கம் ரா வீழிநாதன்

இரண்டுபடி [ரண்டிடங்கழி] மலையாளம் தகழி சிவசங்கரப்பிள்ளை தமிழாக்கம் டி ராமலிங்கம் பிள்ளை

காலம் [காலம்] மலையாளம் . எம்.டி வாசுதேவன் நாயர் தமிழாக்கம் மணவை முஸ்த·பா

கயிறு [கயர்] தகழி சிவசங்கரப்பிள்ளை. தமிழாக்கம் சி ஏ பாலன்

பருவம் [பர்வ] கன்னடம் . எஸ்.எல்.பைரப்பா தமிழாக்கம் பாவண்ணன்

அரை நாழிகை நேரம். மலையாளம் .பாறப்புறத்து தமிழாக்கம். பெ நாராயணன்(NBT)

அவன் காட்டை வென்றான் தெலுங்கு. ஆர் கேசவ ரெட்டி .தமிழாக்கம் எதிராஜுலு(NBT)

மய்யழிகரையோரம் . மலையாளம். எம் முகுந்தன் தமிழாக்கம் இளம்பாரதி(NBT)

குறிப்பு

இந்தப் பட்டியலை என் நண்பர் இப்ராகீம் அவர்களிடம் சேகரித்துத் தரும்படி சொன்னேன். புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் வாசகர்களுக்கு புதிய நூல்களை வாங்க இது உதவியாக இருக்கலாம்

இவற்றில் அனேகமாக எல்லா நூல்களும் நான் வாசித்தவை. கறாரான விமர்சனங்களை வைக்க விரும்பவில்லை. ஆனால் சில குறிப்புகளை அளிக்க விரும்புகிறேன்

ஞானன் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள நீல நிலா [ சிவ்பிரசாத் சிங்]

இறையடியான் மொழியாக்கத்தில் வந்துள்ள போராட்டம்- [வியாசராய பல்லாள]

ப கிருஷ்ண சாமி மொழியாக்கத்தில் வந்துள்ள சிதம்பர ரகசியம் [பூர்ண சந்திர தேஜஸ்வி]

போன்ற நூல்களை தவிர்த்துவிடுங்கள். தாங்கவே முடியாத மொழியாக்கச் சிக்கல்கள் கொண்டவை

ஜெ

முந்தைய கட்டுரைஇந்துத்துவம் காந்தி -கடிதம்
அடுத்த கட்டுரைபெருமாள் முருகன் கடிதங்கள் 3