மனிதனாகி வந்த பரம்பொருள் 2

வாசகர்கள் என்னை தயவுசெய்து மன்னிக்கவேண்டும் . இணையத்தில் உலவியபோது இந்த படத்தை கீழ்க்கண்ட இணைய தளத்தில் பார்த்தேன். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். ஏப்ரல் ஒன்றாம் தேதி இந்தமாதிரி உணர்ச்சி மீதூர நேர்கிறது. ஏனென்றே தெரியவில்லை. நான் எழுதிய இந்தக்கட்டுரை பொய் என்றும் அதற்கு முன்னால் எழுதிய எல்லா கட்டுரைகளும் உண்மை என்றும் சொல்லவிரும்புகிறேன். நான் சொன்னதை ஏற்று அக்கட்டுரைகளை மறந்து போன வாசகர்கள் திரும்ப நினைவுகூரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

http://www.povertyisland.com/Indiapics/images/page_2.htm

அதாவது சாமியார்கள் மாயமந்திரங்கள் செய்கிறார்கள் என்பதெல்லாம் பொய். அவர்களுக்கு அற்புத சக்திகள் என ஒன்றுமே இல்லை. மனசின் ஆற்றலைத்தான் நாம் அற்புத சக்தியாகக் கொண்டாடுகிறோம். இதுவே நான் ஏற்கனவே எழுதியது என்பதை மீண்டும் வாசித்து உறுதிப்படுத்திக்கொள்ள வாசகர்களிடம் கோருகிறேன்.

ஆனால் அது முழுக்க உண்மையா என்றும் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால் நான் கீழே படத்தில் தெரியும் குலாப் தஸ்தகீர் ஜாமூன் பாபா என்ற சூ·பி ஞானியை நேற்று சந்தித்தேன். இவர் மாலைவேளைகளில் தன்னுடைய கோட்டை விரித்து பெரிய காக்கா போல பறந்து செல்வதை என் கண்ணால் பார்த்தேன்…

அவரது கண்களில் தெரியும் ஒளியை ஐந்து நிமிடம் உற்று பாருங்கள். அப்படிப் பார்க்கும்போது அனல் ஹக் என்று ஐம்பது முறை சொல்லிக்கொண்டால் கம்ப்யூட்டர் திரை மெல்ல அதிர்வதை காண்பீர்கள். அனேகமாக உங்களை யாரோ செல்போனில் கூப்பிடுகிறார்கள். செல்போனை அப்படி திரை பக்கத்திலே வைக்கக்கூடாது….முந்தைய கட்டுரைமனிதராகி வந்த பரம்பொருள்!!
அடுத்த கட்டுரைமலை ஆசியா – 7