«

»


Print this Post

மனிதனாகி வந்த பரம்பொருள் 2


வாசகர்கள் என்னை தயவுசெய்து மன்னிக்கவேண்டும் . இணையத்தில் உலவியபோது இந்த படத்தை கீழ்க்கண்ட இணைய தளத்தில் பார்த்தேன். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். ஏப்ரல் ஒன்றாம் தேதி இந்தமாதிரி உணர்ச்சி மீதூர நேர்கிறது. ஏனென்றே தெரியவில்லை. நான் எழுதிய இந்தக்கட்டுரை பொய் என்றும் அதற்கு முன்னால் எழுதிய எல்லா கட்டுரைகளும் உண்மை என்றும் சொல்லவிரும்புகிறேன். நான் சொன்னதை ஏற்று அக்கட்டுரைகளை மறந்து போன வாசகர்கள் திரும்ப நினைவுகூரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

http://www.povertyisland.com/Indiapics/images/page_2.htm

அதாவது சாமியார்கள் மாயமந்திரங்கள் செய்கிறார்கள் என்பதெல்லாம் பொய். அவர்களுக்கு அற்புத சக்திகள் என ஒன்றுமே இல்லை. மனசின் ஆற்றலைத்தான் நாம் அற்புத சக்தியாகக் கொண்டாடுகிறோம். இதுவே நான் ஏற்கனவே எழுதியது என்பதை மீண்டும் வாசித்து உறுதிப்படுத்திக்கொள்ள வாசகர்களிடம் கோருகிறேன்.

ஆனால் அது முழுக்க உண்மையா என்றும் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால் நான் கீழே படத்தில் தெரியும் குலாப் தஸ்தகீர் ஜாமூன் பாபா என்ற சூ·பி ஞானியை நேற்று சந்தித்தேன். இவர் மாலைவேளைகளில் தன்னுடைய கோட்டை விரித்து பெரிய காக்கா போல பறந்து செல்வதை என் கண்ணால் பார்த்தேன்…

அவரது கண்களில் தெரியும் ஒளியை ஐந்து நிமிடம் உற்று பாருங்கள். அப்படிப் பார்க்கும்போது அனல் ஹக் என்று ஐம்பது முறை சொல்லிக்கொண்டால் கம்ப்யூட்டர் திரை மெல்ல அதிர்வதை காண்பீர்கள். அனேகமாக உங்களை யாரோ செல்போனில் கூப்பிடுகிறார்கள். செல்போனை அப்படி திரை பக்கத்திலே வைக்கக்கூடாது….தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6960

24 comments

Skip to comment form

 1. Vijay S

  “குலாம் தஸ்தகீர் ஜாமூன்(!) பாபா”! “அனல் ஹக்”! அதுக்கேத்த மாதிரி ஒரு .போட்டோ! :)

  எங்கேருந்து தான் இப்டிலாம் புடிக்கிறீங்களோ! ரெண்டு நாளா ரொம்பவும் குஷி மூடுல இருக்கீங்க போல தெரியுது! :)

 2. kanpal

  மதிப்பிற்குரிய ஜெயமோஹன்,

  ஏப்ரல் முதல் நாள் மயக்கத்தில் இருந்தே இன்னும் முழுதாக மீளவில்லை. சாமியார் மயக்கம் என்பது என்ன ஒரு நாள் அல்லது ஓரிரவில் :) தீர்ந்துவிடும் மயக்கமா என்ன?

  ஏப்ரல் ஒன்று மட்டும் என்றில்லாமல் எல்லா நாளும் முட்டாளாகியே தீருவேன் என்போருக்குத் தொடர்ந்து முறிமருந்தும், முதுகடியும் கொடுத்தால்
  மயக்கம் தீரலாம்.

  அன்புடன்,
  பழ. கந்தசாமி

 3. naveenkumarn

  குலாப் (தஸ்தகீர்) ஜாமூன் பாபா – நல்ல இடுகை.

  தங்களது முந்தய பதிவு (‘மனிதனாகி வந்த பரம்பொருள்’ ) ஒரு விசித்திர அதிர்ச்சி. காலை அலுவலகம் சென்றதும் முதலில் அதை தான் படித்தேன். அதிர்ச்சியில் மூழ்கும் வினாடியில் கம்ப்யூட்டர் திரையில் தேதியைப் பார்த்தேன்.

  நான் முட்டாள் ஆனதில் சிறிது இன்பன் காண்பது இதுவே முதல் முறை ஜேமோ :)

  – நவீன் குமார்

 4. naveenkumarn

  குலாப் (தஸ்தகீர்) ஜாமூன் பாபா – நல்ல இடுகை.

  தங்களது முந்தய பதிவு (‘மனிதனாகி வந்த பரம்பொருள்’ ) ஒரு விசித்திர அதிர்ச்சி. காலை அலுவலகம் சென்றதும் முதலில் அதை தான் படித்தேன். அதிர்ச்சியில் மூழ்கும் வினாடியில் கம்ப்யூட்டர் திரையில் தேதியைப் பார்த்தேன்.

  நான் முட்டாள் ஆனதில் சிறிது இன்பன் காண்பது இதுவே முதல் முறை ஜெ மோ :)

  – நவீன் குமார்

 5. Gopal

  Dear Jey
  I am a new relatively reader of your website and slowly getting used to your writings.

  I had a doubt yesterday that it might a prank…any way I agree with you that human mind power can be used to archive the impossible.

  If you have time have a look at the videos of Darren Brown in youtube.com He will provide clues of how our mind can be tricked to believe illusions as real and how you be remote controlled by him for a short duration using various tricks. It is really fascinating to know how with proper training and skill a human mind can be used to dupe another human mind. There a lot of videos of him in the youtube.com the following link is one of them.

  http://www.youtube.com/watch?v=kJ02I6QyagM

  I think if people have a look at the video they will definitely understand the tricks done by the so call godmen. And understand the fake healing done by them to attract the innocent people and used them for their own selfish motto be it making money or convert them to their sect. Ultimately they cheat

  Sorry I do not know how to type in tamil that is the reason for me typing in English.
  Regards
  Gopal

 6. rjgpal

  நல்லா வைக்கிறீங்க பேரு! ஜாமூன் பாபா, ஜாங்கிரி பாபான்னு ! கொஞ்சம் திகிலாதான் இருக்கு! இந்த பேர்கள்ல யாராவது இனிமே கெளம்பிட்டா? …

 7. Nallathanthi

  //அவரது கண்களில் தெரியும் ஒளியை ஐந்து நிமிடம் உற்று பாருங்கள். அப்படிப் பார்க்கும்போது அனல் ஹக் என்று ஐம்பது முறை சொல்லிக்கொண்டால் கம்ப்யூட்டர் திரை மெல்ல அதிர்வதை காண்பீர்கள். அனேகமாக உங்களை யாரோ செல்போனில் கூப்பிடுகிறார்கள். செல்போனை அப்படி திரை பக்கத்திலே வைக்கக்கூடாது….//

  கடைசி வரிக்கு சிரித்து மாளலை!. இந்த மாதிரி கூரிய நகைச்சுவைக்கு உங்களை விட்டால் வேறு ஆளே இல்லை! :)

 8. gomathi sankar

  இக்கட்டுரையில் பகடியின் கீழ் தெரிகிற அற்புதங்கள் என்பவை எப்போதும் நிகழ்வதில்லை என்ற நிலைப்பாட்டைப் பற்றி விவாதிக்கலாம் என்று தோன்றுகிறது அற்புதங்கள் இல்லாது ஏசுவை தனித்து பார்க்கமுடியுமா என தெரியவில்லை பைபிளில் ஏசு திரும்ப திரும்ப அற்புதங்களை செய்கிறார் குணப் படுத்துகிறார் குணப்படுத்தும் போதே உனக்கு நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்கிறார் ஆனால் வித்தை போல் அதை செய்வதில்லை பார்சிகள் கேட்கும்போது மறுத்துவிடுகிறார் இதேபோல் அற்புதங்கள் நிகழ்த்திய நமது சித்தர்கள் பற்றி ஏராள குறிப்புகள் உள்ளன தான் கூடுவிட்டு கூடு பாய்ந்ததாக சொன்னபிறகு தான் திருமூலர் திருமந்திரம் சொல்ல ஆரம்பிக்கிறார் யோகியின் சுயசரிதம் போன்ற நூல்கள் இத்தகைய அற்புதங்களைப் பற்றி நிறைய சொல்லப் படுகின்றன ஒருவகையில் இந்த சாமியார்களின் ரகசிய ஸ்கிரிப்ட் என்று இந்த புத்தகத்தையே சொல்லலாம் ஆனால் பரமஹம்ச யோகானந்தா ஒரு பிராடு என்று தோன்றவில்லை பாரதியார் புதுச்சேரியில் இறந்த தன தந்தையை ஒரு சாமியார் காண்பித்தார் என எழுதி இருக்கிறார் யுங் தனது சுயசரிதையில் இதேபோல் சம்பவங்களைப் பற்றி நிறையவே குறிப்பிட்டிருக்கிறார் ரஸ்புடின் செய்த குணப் படுத்தல்கள் பற்றி நிறையவே ஆவணங்கள் உள்ளன இவை பிரபஞ்ச விதிகளை மீறி செய்யப் படுவதாக கருதவேண்டாம் எப்படி புவிவிசையை மீறி ராக்கட் அனுப்பமுடிகிறதோ அதுபோல் ஒரு ஆற்றல் நீட்சியாகவே கருதப் படவேண்டும் போலிகள் எங்கும் உண்டு உண்மையை அவர்களை வைத்து மதிப்பிடக்கூடாது இந்துமதம் முழுக்க முழுக்க தருக்கத்தால் ஆனது என்று நிருபிக்க செய்யும் முயற்சியில் நாம் அதன் செழுமையான ஒருபகுதியை மறுக்கிறோம் இது ஒருவகையில் இந்து வஹாபிசம் போலவே தோன்றுகிறது

 9. kamal_govi

  >>ஜாமூன் பாபா என்ற சூ·பி ஞானியை

  இவரு அந்த திருவண்ணாமலை பாபா வோட Cousin ஆ

  ஹா ஹா

  சார் சரி form ல இருக்கீங்க போல ….

 10. வெண்பூ

  ஜெமோ… ஏப்ரல் ஒண்ணுக்காக எத்தனை நாளா காத்திருந்தீங்க…. பயங்கரமா சிரிச்சி ஒரு நேரத்துக்கு மேல சிரிக்கவே முடியலை.. அடுத்த ஏப்ரல் ஒண்ணுக்காக இப்போதிலிருந்தே காத்திருக்க ஆரம்பிச்சிட்டேன்.. :) :) :)

 11. aravindan neelakandan

  அன்புள்ள ஜெயமோகன் உங்கள் தேடல்களை கண்டு அதன் விரக்தியாக விளைந்ததாக இவற்றை எடுத்துக்கொண்டு இரண்டு நண்பர்கள் உங்கள் மீட்சிக்கான வழியை எனக்கு மின்னஞ்சல் செய்து உங்களுக்கு அனுப்ப சொன்னார்கள். சில காரணங்களுக்காக அவர்கள் பெயரை மட்டும் வெளியிட முடியவில்லை மன்னித்துக் கொள்ளுங்கள்.

  ஜெயமோகன்

  பேரறிவாளனும் எல்லையற்ற கருணையாளனுமான அந்த இறைவனின் பெயரால் ஆரம்பிக்கிறேன். உங்கள் பிரச்சனை எனக்கு புரிகிறது. நானும் உங்களைப் போல வழி கெடுக்கப்பட்டவனாக அலைந்து கொண்டிருந்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒரு உண்மை மார்க்க அறிஞரை சந்தித்தேன். அதன் பிறகு அவர் இறைநூலை அதன் தூய வடிவத்தில் அறிந்து கொள்ள செய்தார். அறிவியல் கண்டுபிடித்த உண்மைகள் அனைத்தும் எல்லா நூல்களின் அன்னையான அந்த நூலில் இருப்பதை அறிந்தேன். இனி கண்டுபிடிக்கப் படவிருக்கும் அறிவியல் உண்மைகளும் கண்டுபிடிக்கப்பட்ட பின் அந்த நூலில் கண்டுபிடிக்கப்படும் என்கிற அற்புதத்தையும் அறிந்தேன். அதன் பிறகே வழிகேடான பரிணாமக் கொள்கை போன்றவையெல்லாம் ஷைத்தானிய யூத அமெரிக்க ஆதிக்க சாதி சதி என்பதை புரிந்து கொண்டேன். சூஃபி ஞானிகள் வேதாந்திகள் அனல் கக் அஹம் பிரம்மாஸ்மி என்றெல்லாம் சொல்லும் கும்பல்கள் இவர்களெல்லாரும் வழி கெடுப்பவர்களே. கோவில்களை உடைத்து சிலைகளை தார் ரோடுகளுக்கு நல்ல ஜல்லிகளாகவும், தர்காக்களை உடைத்து அங்கே உண்மைமார்க்க பள்ளிகளையும் கட்டினால்தான் எல்லா மனிதர்களுக்கும் உண்மை அறிவு பிறக்கும். அது வரை உங்களைப் போல நிலையான உண்மையில் உறுதியாக இல்லாமல் தானும் கெட்டு அடுத்தவர்களையும் வழி கெடுத்துக் கொண்டு திரிவார்கள். எனவே உண்மையான ஏக இறைவனையும் அவன் சுவனத்திலிருந்து டவுண்லோடு செய்த எல்லா நூல்களின் அன்னை நூலையும் ஏற்று மனந்திரும்புங்கள் இல்லையேல் மனந்திரும்ப வைக்கப்படுவீர்கள். மறுமையில் தோலை நெருப்பு எரித்து மீளாவலியில் துடிக்கும் போது மீண்டும் தோல் உருவாகி மீண்டும் நெருப்பில் எரிந்து மீண்டும் தோல்…என்னும் படியான நரகத்தை நம்பிக்கையில்லாதவர்களெக்கென்றே பரம கருணையாளனும் எல்லையற்ற அன்பாளனுமான ஏக இறைவன் உருவாக்கி வைத்திருக்கிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதுவே உண்மையான ஞானத்தின் தொடக்கம்.

  ….

  ஸ்ரீ.ஜெயமோஹன்,

  நீங்கள் வேத சம்ரக்ஷணம் செய்யும் பாரம்பரியமில்லாத குலத்தில் ஜனித்த பின்னரும் மிகுந்த விசாலமான ஹிருதயமும் வித்யா ஞானமும் கொண்டவராக பிறந்திருக்கிறீர்கள். இது ஒரு பகவத் சங்கல்பமே. ஆனால் ‘வித்யா விநய சம்பன்ன’ என்று சொல்லியிருப்பதை மனதில் கொள்ளாமல் உங்களுக்கு வித்யா கர்வம் ஏற்பட்டிருக்கிறது. இது நீங்கள் வெள்ளைத் தோல் கொண்ட கிறிஸ்தவ மேல் நாட்டு விஷயங்களை படித்ததால் ஏற்படுகிற தோஷம். இந்த தோஷம் தீர நீங்கள் மற்றொரு ஜன்மா எடுத்து அதில் வேதம் படித்து உண்மையான ஞானம் அடையவேண்டும். அதுவரை உங்களுக்கு லபித்திருப்பது ஞானமல்ல ஞானம் போன்ற ஒரு தோற்றமே. கயிற்றரவு என்று அதையும்தான் ஆச்சார்யாள் சொல்லியிருக்கிறார்கள். உங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் மோக்ஷமானது பகவந் நாமாவை பஜனை செய்வதாலும், விப்ர சேவையாலும்தான் அடுத்தடுத்த ஜன்மாக்களில் நல்ல குலங்களில் ஜனித்து அதன் மூலம் சித்தியாகும் என ஈஸ்வரவாணியில் சொல்லியிருக்கிறார்கள். அதுவரை ஞானத்தைக் குறித்து அதிகாரத்துவமில்லாமல் உங்களுக்குத் தோன்றியதை பேசிக்கொண்டிராமல் பகவத் கைங்கரியம் செய்து வாருங்கள். அதுவே உங்களைப் போன்றவர்களுக்கு ஞானத்துக்கு சமமானதுதான்.நமது புண்ணிய பூமியான பாரதத்தில் எத்தனையோ தவ சிரேஷ்டர்கள் ஆச்சார்யராகவும் அவதூதராகவும் வலம் வருகிறார்கள். நீங்கள் ஹாஸ்ய ரஸம் என்கிற பெயரில் அவர்களையெல்லாம் பரிஹாஸம் செய்கிறீகள். எந்த விதமான பாரம்பரியமும் குரு பரம்பரையும் வேத அதிகாரத்துவமும் இல்லாத சமுத்திரம் கடந்து போய் சாஸ்திர விரோதமாக நடந்து கொண்ட ஒருவரை குரு என்று நீங்கள் கொண்டாடுகிறீர்கள். இதற்கெல்லாம் காரணம் உங்களுக்கு வேத விக்ஞானம் தெரியாததே. எனவே அடுத்த ஜன்மாவிலாவது வேத அத்யனனம் செய்யும் ஒரு குடும்பத்தில் பிறந்து உங்களுக்கு ஞானம் லபிக்கும் படியான கர்மாக்களை இந்த ஜன்மத்தில் நீங்கள் செய்ய உங்களை நான் ஆசிர்வதிக்கிறேன். தயவு விப்ரர்களையும் த்விஜர்களையும் பரிஹாஸம் செய்யாதீர்கள். அது உங்களை ‘அசூர்ய நாம தே லோகா” என சொல்லப்படும் நரகங்களில் ஆழ்த்தி, கீழான பிறப்புகள் எடுக்கச் செய்துவிடும்.

 12. parthi6000

  அன்புள்ள ஜெ

  நான் திருவண்ணாமலை உஸ்மான் பாய்யை நேரில் சந்தித்திருக்கிறேன். அவர் தன் வயிற்றுப் பிழைப்புக்காக ஏமாற்றுகிறார் என்பதை எளிதில் உணர்ந்தேன். மனதில் சிரித்துக் கொண்டேன். உங்கள் பகடியின் நியாயம் புரிகிறது. ஆனால் நம் நாட்டில் ஏதோ ஒரு மூலையில் நாய் போல் தின்று, பேய் போல் அழைந்து வாழும் அந்த உயர்ந்த ஆத்மாக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

  அட்வகேட் பார்த்திபன்
  திருப்பூர்

 13. Arangasamy.K.V

  அரவிந்தன் சார் ,

  உண்மை ஒளியான அந்த மூன்றாவது கடிதம் வெளியிடப்படாததன் நோக்கம் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா ? :)

 14. aravindan neelakandan

  ஏனென்றால் என்னதான் அவனை யூதர்களின் ஒரே ராஜா என்றாலும் தாவீதின் ரத்தத்தில் உதித்தவன் என்றாலும் சமாரியர் பட்டணங்களுக்குள்ளே போய் தீட்டாகிவிடாதீர்கள் என தன் சீடர்களிடம் சொன்னவன் என்றாலும் “என் அரசாங்கத்தை ஏற்காதவர்களின் தலையை கொய்து என் காலில் போடு” என்று பட்டும் படாமலும் அன்பை போதித்தவன் என்றாலும் நித்திய நிரந்தர நரக நெருப்பை கண்டுபிடித்தவன் என்றாலும் டால்ஸ்டாய் அவனைக் குறித்து இதயம் நனைய எழுதியிருக்கிறாரே அதனால் அந்த நாசரேத் தச்சன் மீது ஒரு கரிசனை …குழந்தைகளை தன்னிடம் வரச் சொன்னான் அவன் என்பதால்தானே ‘அவுட்-ஆஃப்-கோர்ட் செட்டில்மெண்ட்’ செய்வோர் பேறு பெற்றோர் என்று அருட்தந்தைகள் சொல்கின்றனர். அப்படியிருக்க அந்த கடிதத்தை வெளியிடுவது சரியா?

 15. ramji_yahoo

  அனல் ஹக் என்று அறுபடு முறை சொல்லி பார்த்தேன் . கம்புடர் அசை வில்லை.

  அங்காடி தெரு தரும் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கிறீர்கள் போல , வாழ்த்துக்கள் ஜே மோ.

 16. pichaikaaran

  வெந்த புண்ல , வேலை பாய்ச்சாதீங்க

 17. K.R அதியமான்

  அன்புள்ள ஜெ,

  கிண்டல் எல்லாம் இருக்கட்டும். உங்களை அசத்துற மாதிரியான ஜோதிடம் அல்லது ‘அருள் வாக்கு’ சொல்பவரை இதுவரை கண்டதில்லை போலும். போலிகளுக்கு நடுவில் வெகு சிலர் அப்படி உள்ளனர் என்பதே என் அறிதல். அதை பற்றி பிறகு.

  திரு.கோமதி சங்கர்,

  உங்களை சந்திக்க விரும்புகிறேன். அல்லது தனிமடலில் பேச விழைகிறேன். எமது அய்.டி : [email protected] உங்கள் பின்னூட்டங்களை தொடர்ந்து படிக்கிறேன். மிக ஆழமான, விசிய ஞானம் உடையவர் என்று அறிகிறேன். Keep going.

 18. Prakash

  அன்புள்ள ஜெமோ, நீங்க நாடி ஜோசியம் பார்த்ருகீங்களா ? அம்மா பேரு க,ச,த,த,ப,ர வல்லினத்தில் ஆரம்பிக்குமா , மலர் பெயர் பெண் கடவுள் என்று வரிசையாக கேள்வி கேட்டு கண்டுபிடிப்பார். இந்த மாதிரி நானும் நிறைய பேரிடம் வெரும் தர்கத்த வச்சே கண்டுபிடிசிருகேன் ( கொஞ்சம் நிறைய கேள்வி கேட்பேன் ). ஆனால் ஒரு இடத்தில் என் பிறந்த தேதியை என்னை கேட்காமலேயே சொல்லி, என் ஜாதக கட்டத்தையும் ஒருவர் வரைந்தார். அதன் தர்க்கம் தான் புரிய மாட்டேன் என்கிறது. இதன் தர்க்கம் என்ன . உங்களுக்கு தெரிந்த தர்க்கத்தை மீரிய செயல் ஏதாவது நடந்து இருகின்றதா ?

 19. jrc

  நீங்கள் இந்த ப்ளாக்-இ மிகவும் நீர்த்து போக செய்வதாக எனக்கு படுகிறது. பகடி என்ற பெயரில் நீங்கள் அடிக்கும் கூத்து அதற்கு வுங்கள் தொண்டரடிப்பொடிகள் அடிக்கும் ஜால்ரா, “சார், நீங்கள் எங்கேயோ போயிட்டீங்க” என்று சொல்ல வைக்கிறீர்கள்.

 20. parthi6000

  அன்புள்ள ஜெ

  உங்கள் நியதிப்படி பௌதீக விதிகளுக்கு எதிராக ஒருவன் செயல்பட முடியாது என்கிறீர்கள். சுமார் 200 வருடங்களுக்கு முன்பு காங்கேயம் பகுதியில் மோடி மஸ்தான் ஒருவன் அந்தரத்தில் பொதுமக்கள் முன்பு பறந்துகாட்டினான் என்பதற்காக அந்த பகுதி மக்கள் அந்த மஸ்தானுக்கு நிலத்தை வழங்கி உள்ளார்கள். அது பற்றிய கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ததாக நான் தினமலர் செய்தி ஒன்றில் படித்திருக்கிறேன். உங்கள் எழுத்துக்களை எங்கோ இருந்து படிக்கிறோம். அது சில விளைவுகளை எங்கள் மனதில் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் என்னைப் பொறுத்த வரையில் நீங்களும் ஒரு சித்தர்தான் அல்லது சுபி தான்.

  அட்வகேட் பார்த்திபன்
  திருப்பூர்

 21. Arangasamy.K.V

  ”குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
  குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்,
  குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
  குருடும் குருடும் குழிவிழுமாறே”

  ஞானம் வழங்கு சிறந்த குருவினை சென்று சேராது , வெறும் வேடமணிந்தவர்களையே குருவாய் கொள்வார்கள் ,

  பார்வையற்ற இரண்டுபேர் சேர்ந்து விளையாடி , இரண்டுபேருமே சேர்ந்து பாழுங்குழியில் விழுவது போல , போலி குருவும் சீடனும் சேர்ந்து வீழ்வார்கள் .

  இதை சொன்னதும் திருமூலரேதான் .

 22. gomathi sankar

  தருக்கத்தை மீறிய செயல் எதுவும் இருக்கமுடியாது என்ற ஜெமோவின் கருத்துடன் உடன்பாடு உண்டு ஆனால் தருக்கத்தின் எல்லையை நாம் கண்டுவிட்டோமா என்ன? இன்றைய அறிவியல் வந்திருக்கிற இடம்தான் கடைசி நிறுத்தம் என்று சொல்லமுடியுமா?கீதை ஆன்மா அழிவற்றது என்றும் சட்டை மாற்றிக் கொள்வதுபோல் உடல்களை மாற்றிக் கொள்கிறது என்றும் கூறுகிறது இன்றைய பௌதிக விதிகளின் படி இது அபத்தம் இறந்தபிறகு வேறு உடல்களை நாம் அணியமுடியும் என்பதைவிட உயிருடன் இருக்கும் ஒருவர் மேற்கண்ட சித்துவேலைகளை செய்வது எளிதாகவே இருக்க கூடும் இல்லையா இந்த சித்துக்களின் பின்னால் உள்ள தருக்கத்தை நாம் கண்டடையும்வரை அவை இல்லை என்ற நிலைப்பாட்டை எடுப்பதே பாதுகாப்பானது என்று நினைத்தால் சரியானதே ஆனால் இல்லை இன்று மனதை மூடிவிட்டால் அடுத்த வாசல் இல்லவே இல்லை அல்லவா திரு அதியமான், நான் விஷய ஞானம் உள்ளவனாக என்னை கருதவில்லை ஜெமோவின் தளத்தில் வந்து அவ்வாறு சொல்வது நகைப்புக்கு உரியதாக இருக்கும் உங்கள் எண்ணங்களுடன் ஒத்துப் போவதால் அவ்வாறு சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் எனினும் நன்றி உங்களை தொடர்புகொள்கிறேன்

 23. Vijay S

  ஓஹோ! “குலாப் ஜாமூன்” பாபாவா! பாருங்க, நான் “குலாம்” அப்படின்னே படிச்சிருக்கேன்! “குலாம்” என்பது வழங்கப்படும் ஒரு இஸ்லாமியப் பெயரா இருக்கவும், நடுவுல ஒரு தஸ்தகீர் வேற வந்துட்டதாலேயும், சூ.பி ஞானி என்பதும் சேர்ந்து, குலாப் ஜாமூன் கண்ணுக்குத் தெரியாமலே போயிடுச்சு! :D

  மனம் நம்புவதையே புலன்கள் காண்பிக்கும் என்பது எவ்வளவு சரியா இருக்கு!

 24. dravidan1981

  தசாவதாரம் கட்டுரையில் இருந்து

  மத்திய ஆசியாவில் இஸ்லாமின் தோற்றம் முதல் இன்றுவரைக்கும் கூட மதவெறிக்காலம் முடிவுக்குவரவில்லை. ரத்தம் உலரவேயில்லை.

  அல்லும்பகலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை எண்ணி எண்ணி அவர்கள் இஸ்லாமியப்பாணி மதவெறிக்கு மானசீகமாக மாறிவிட்டிருக்கிறார்கள்.

  இணையத்தில் எழுதும் இந்துத்துவர்களை படிக்கிறேன்.
  மிகக்குறுகலான ஒரு தரப்பை வைத்துக் கொண்டு உலகெல்லாம் எதிரிகளைக் கண்டுபிடிக்க அலைகிறார்கள்.

  கடைசி இரண்டு வரிகளை படித்தால், நீங்கள் உங்களையே குறித்து கொள்வது போலே இருக்கிறது நண்பரே. காரணம் அடிகோடிட்ட வாக்கியங்களை கவனித்தாலே தெரிகிறது நீ ஒரு மத வெறி பிடித்தவன் என்று.

  நீங்கள் ஊருக்கு உபதேசம் செய்யும் முன்பு உங்களில் இருக்கும் (மத வெறி என்னும் ) மிருகத்தை அழிக்க வழி செய்யுங்கள் நண்பரே. உங்கள் கடவுள் உங்களை ஆஷிர்வதிப்பதாக!!!!!!!!

Comments have been disabled.