வெட்டம் மாணியைப்பற்றி

அன்புள்ள ஜெ

வெட்டம் மாணியைப்பற்றி தேடிக்கொண்டிருந்தபோது அவரது புராணக்கலைக்களஞ்சியத்தின் ஆங்கில வடிவத்தின் இணைப்பு கிடைத்தது.  உங்கள் வாசகர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

http://ia350613.us.archive.org/0/items/puranicencyclopa00maniuoft/puranicencyclopa00maniuoft.pdf

அன்புடன்

சிவசுப்ரமணியம்

மலையாள மொழியின் மிகப்பெரிய தனிமனித சாதனைகள் நான்கு என்பார்கள். ஒன்று, ‘ஸ்ரீகண்டேஸ்வரம்’ தொகுத்த மகாநிகண்டு. சம்ஸ்கிருத, மலையாளச் சொற்களுக்கான மாபெரும் அகராதி இது. இரண்டு, கொடுங்கல்லூர் குஞ்சிகுட்டன் தம்புரான் மகாபாரதத்தை முழுமையாக செய்யுளில் மொழியாக்கம்செய்தது. மூன்று வேதங்களை வள்ளத்தோள் நாராயணமேனன் மொழியாக்கம் செய்தது. நான்கு வெட்டம் மாணியின் புராணக் கலைக்களஞ்சியம்.

மேலும் வாசிக்க

மரபின் கடற்கரையில் :வெட்டம் மாணி

முந்தைய கட்டுரைஇரவில்மட்டும் வாழமுடியுமா?
அடுத்த கட்டுரைஅங்காடித்தெரு இன்று