நவீன அடிமை முறை- கடிதம் 4

அன்புள்ள ஜெ.,

“அடிமைமுறை” என்பதே ஒரு இழிசொல்லாகக் கருதுகிறேன்… சமூகப் பொதுமனநிலை அன்றி உண்மையில்லை…

நிரந்தர வேலை என்பது ஒரு Utopian Dream தான்… இது ஒரு சோஷலிச மாயை அன்றி வேறல்ல… வேலையே இல்லை என்ற 1994ஐ விட நிரந்தர வேலை இல்லை என்ற 2014 பரவாயில்லை… இது ஒரு முன்னேற்றமே; இதை சாதித்தது தனியார்மயமும் பெருநிறுவனங்களுமே…

வினவு, பிரசன்னா போன்ற “நல்லா வேணும்” வகையறாக்களுக்கு ஒரு சில வார்த்த்தைகள்:

1) சீரான பொருளாதார முன்னேற்றம் எங்கும் என்றும் சாத்தியமல்ல… 70, 80, 90கள் அரசூழியர்களின் பொற்காலம்; சென்ற 15 ஆண்டு என்போன்ற மென்பொருள் ஊழியர்களின் பொற்காலம்; இனி வருவது தொழில் முனைவோரின் பொற்காலம் என்று கருதுகிறேன்

2) என்னைவிட மூன்று மடங்கு அதிகம் சம்பாதிக்கின்றனர் தொழில்முனைவோர் நண்பர்கள் சிலர்… அவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள முனைவேன்; இல்லையேல் வாய்மூடி இருப்பேன்; கண்டிப்பாக வயிறெரிய மாட்டேன்

3) 5 வருடங்களில் கோடீஸ்வரனாகும் கவுன்சிலரிடம் பம்மிவிட்டு, ஒருபைசா விடாமல் வரிகட்டி உழைத்து உயிர்வாழும் என்போன்றோர் மீது பிரசன்னா (மற்றும் பலர்) புழுதி வாருவது சிறுமையே.. இவர்களைவிட நாராயணமூர்த்தியும் அஜிம் பிரேம்ஜியும் அதிக அறம் கொண்டவர்களே… தயவு செய்து உங்கள் அறிவுரை தேவையேயில்லை..
சட்டரீதியாகவோ முடிந்தால் சங்க ரீதியாகவோ நாங்களே பார்த்துக்கொள்கிறோம்…

4) இறுதியாக, கண்டிப்பாக மென்பொருள் தொழிலாளர் சட்டம் முறையாக வரையறுக்கப்படவேண்டும்.. அமெரிக்காவின் சட்டங்களைவிட ஐரோப்பிய சட்டங்களை இதில் பின்பற்றலாம்… ஆனால் இது தொழிலாளர் நலன், தொழில் முனைவோர் நலன் இரண்டும் அறிந்து நிதானமாக எடுக்கப்பட வேண்டிய விஷயம்.. வினவு தள விவகாரமல்ல…

நன்றி
ரத்தன்

முந்தைய கட்டுரைகாந்தி கோட்ஸே- ஐயங்கள்
அடுத்த கட்டுரைஇந்துத்துவம் ,காந்தி