நவீன அடிமைமுறை- கடிதம் 2

அன்புள்ள ஜெயமோகனுக்கு ,

தங்களின் நவீன அடிமை பற்றிய கட்டுரை படித்தேன் . நான் சாப்ட்வேர் துறையில் பணியாற்றுகிறவன் என்பதால் சில விஷயங்களை இங்கே முன்வைக்கிறேன். நீங்கள் சொல்லும் நவீன அடிமைகளை , ஜாவா சுந்தரேசன் போன்றோரை கண்டுள்ளேன் .

இந்த பிரச்சனைக்கு பலர் சொல்வது போல் வெறும் கம்பனியை மற்றும் முதலாளி குற்றம் சொல்ல இயலாது . சத்யம் சாப்ட்வேர் நிறுவனம் வீழ்ந்த கதை படித்தால் காரணம் புரியும் . top management , முதலாளிகளை மட்டும் குறை சொல்ல முடியாது . இங்கே பல Middle Level மேனேஜர் மோசமான செயல்பாடே கம்பனி நஷ்டத்தில் தள்ளப்படுவதற்கு காரணம் . சாப்ட்வேர் துறையில் இவர்கள் கம்பனி உள்ளே மற்றும் வெளியேயும் cartel போல செயல்படுவார்கள் . கம்பனி எதாவது புதிய திட்டம் கொண்டு வந்தால் அது இவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமேயானால் அதை கூட்டாக தடுக்கவும் செய்வார்கள் .

நான் பல மிக மோசமான Middle Level மேனேஜர்களை சந்தித்து இருக்கிறேன் . அவர்களால் ப்ராஜெக்ட் குறிப்பிட்ட காலத்தில் முடியாமல் நஷ்டத்தில் போனது உண்டு . பலி ஆடாக யாரையாவது கைகாட்டி விடுவார்கள் . இவர்களுக்குள்ளே ரேங்க் போட்டு , இவர்களுக்கு அடிமையாக இருப்போரை தான் இவர்களின் அடுத்த வாரிசாக தேர்ந்துடுப்பார்கள் . கம்பனி நஷ்டத்தில் போனால் தலை போகப்போவது கம்பனி முதலாளி அதன் top management தான் இவர்களுக்கு கெடையாது . இவர்கள் அடுத்த கம்பனி போய்விடுவார்கள் .

தொழில் நுட்பத்துறை மிகவும் சிக்கலான துறை . 1984 இல் mac பர்சனல் கம்ப்யூட்டர் வெளிவந்தது . இன்றைய personal computing வேறு தளத்திற்கு சென்று விட்டது . புதிய புதிய தொழில்நுட்பம் , programming வந்து கொண்டே இருக்கின்றன 1984 இல் வெளிவந்த காருக்கும் இன்றைய காருக்கும் பெரியதாக தொழில்நுட்பத்தில் மாற்றமில்லை . Clayton Christensen ‘ Innovator ‘ s Dilemma ‘ நூல் தொழில்நுட்பதுறைக்கு பொருந்தும் அதில் Hard Drive industry குறிப்பிட்டு இருப்பார்கள் . பெரிய வித்தியாசம்
இல்லை. என்னுடைய பழைய client இங்கிலாந்துகாரர் , அவர் சொல்லுவார் .. நான் கணிப்பொறியின் பல தொழில்நுட்பம் அறிந்து 50 வயதில் தான் மேனேஜர் ஆகிருக்கேன் ஆனால் நீங்கள் 35 வயதில் மேனேஜர் ஆகி எப்படி சமாளிப்பீர்கள் உங்களுக்கு பக்குவம் வராது போட்டியும் பொறமையுமே மட்டுமே நிகழும் என்பார் . அது உண்மை . management தெரியாமல் வெறும் அடிமைகளை மட்டும் வைத்து வேலைவாங்க நெனைக்கும் மேனேஜர்கள் அதிகம் ..

எனக்கு தொழிலார் சங்கம் வைப்பதில் உடன்பாடு இல்லை ஏனென்றால் இவர்கள் தான் அந்த தொழிலாளர் சங்கத்தையும் பிடிப்பார்கள் . இவர்களின் ஆட்டம் இன்னும் கட்டுக்கடங்காமல் போய்விடும் . இவர்கள் பகல் வேஷதாரிகள் . முகநூலில் தமிழ் ஈழம் , தமிழ் தேசியம் என்று முழங்குவார்கள் , சாப்ட்வேர் வேஸ்ட் என்று சொல்லுவார்கள் , மீடிங்கில் கொஞ்சம் நேரம் கிடைத்தால் கதை அளப்பார்கள் ஆனால் தொழில்நுட்பம் , பிராஜக்ட் வளர்ச்சி பற்றி பேசமாட்டார்கள் செய்யமாட்டார்கள் .

இவர்கள் ஒருகட்டத்தில் வளராமல் தேங்கி அங்கயே பல பிரச்னை பண்ணுவார்கள் . இப்போதும் கூட பணிநீக்கம் செயப்பட்டோர் பாதி பேர் அப்பாவி பலி அடுகள்தான் இவர்கள் இல்லை இவர்கள் தாங்கள் நன்றாக இருந்தால் போதும் .. கம்பனி , முதலாளி , தொழில் தர்மம் எல்லாம் இவர்களுக்கு தேவையில்லை இவர்களால் தான் பல கம்பனிகள் ஒடிந்து போய் நஷ்டதுக்குள்ளாகின்றன. David Brent Syndrome இவர்களுக்கு பொருந்தும் . பெரிய நிர்வாகிகளை கேள்வி கேட்க்கும் பலர் கண்ணுக்கு தெரியாத ஆனால் நஷ்டத்தை ஏற்படுத்தும் இவர்களை கேள்வி கேட்பதில்லை.

நன்றி
பால்

முந்தைய கட்டுரைகோட்ஸே -கடிதம்
அடுத்த கட்டுரைபெருங்கதையாடல்