«

»


Print this Post

இந்தியா:கடிதங்கள்


அன்புள்ள ஜெயமோகன்

எனது இந்தியா என்ற உங்கள் கட்டுரையின் உணர்ச்சி வேகம் எனக்கு புரிகிறது. ஒரு தேசம் என்ற அளவில் நாம் நம்மை உணர்வதை மெல்லமெல்ல இழந்து வருகிறோம். நம்மை இனமாக மொழியாக மதமாக மட்டுமே பார்க்க பழகி வருகிறோம். இந்த நாட்டின் பொறுப்பில்லாத ஜனநாயகமே அதற்கு நம்மை முதலில் பழக்கியது. பொறுப்பில்லாத அறிவுவாதிகள் இப்போது அடுத்த அத்தியாயத்தை எழுதுகிறார்கள்.

 ஒரு தேசமாக நாம் ஏன் இருக்கவேண்டும் என்றால் நாம் ஏற்கனவே ஒரு தேசமாக இந்த மண்ணில் பரவி விட்டிருக்கிறோம் என்பதனால்தான். தமிழன் இல்லாத இடமே இல்லை இந்தியாவில். மலையாளி இல்லாத இடமே இல்லை. நம்முடைய விதிஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளது. நாம் ஒன்றுபட்டு கைகோர்த்து நடந்தால் ம்ட்டுமே முன்னேற முடியும். வழ முடியும். பிரிந்தால் ஒருவரை ஒருவர் வீழ்த்துவோம். ஒருவரை ஒருவர் அழிப்போம்.

இந்தியாவை பிரிக்கும் எந்த ஒரு கோஷமும் பெரும் மக்கள்பெயர்ச்சிக்கும் பேரழிவுக்கும் மட்டும்தான் வழிகோலுகிறது. இருபத்தைந்து ஆண்டுக்காலம் முன்பு ஈழத்தில் ஒரு அறிவுஜீவிக்குழு தனிநாடு என்ற பிரிவினையை எழுப்பியது. ஒருநாடாகப்பிரியுமளவுக்கு அங்கே தமிழர்கள் உள்ளனரா, நிலப்பகுதி உண்டா, மக்கள் சேர்ந்து வாழ்கிறார்களா என்ற எந்த கணக்கும் பேசபப்டவில்லை. அந்த மக்கள் பெற்ரதென்ன? பேசிய அறிவுஜீவிகள் எவரும் அம்மண்ணில் இன்று இல்லை. அவர்கள் வெளிநாடுகளில் போய் வாழ்க்கையை அமைத்துக்கொன்டுவிட்டார்கள். அங்கே எளியமக்கள் ரத்தம் சிந்துகிறார்கள்.

அந்த நிலை இந்தியாபோன்ற ஒருநாட்டுக்கு வந்தால் அதுவே உலக வரலாற்றின் ஆகப்பெரிய மானுட அழிவாக இருக்கும். ஒன்று மட்டும் உறுதி, நம் விதிகள் சேர்ந்து கட்டப்பட்டுள்ளன. இந்து முஸ்லீம் கிறித்தவர்களின் விதிகள். தமிழர் தெலுங்கர் கன்னடர் வடைந்தியரின் விதிகள். நாம் சேர்ந்து சென்றால் வெல்லலாம். பொறுப்பற்ற அரைவேக்காட்டு அறிவுஜீவிகளை நம்பினால் கூண்டோடு அழிவோம். அவர்கள் இந்நாட்டின் ஆத்மாவில் செலுத்தபப்ட்ட விஷம் போன்றவர்கள். அவர்கள் இந்நாட்டை அழிக்கும் ஐந்தாம்படையினர். இந்த விழிப்பையே எளியமக்களான நாம் இன்றுஅ டைய வேண்டியிருக்கிறது

மாணிக்கம்
சென்னை [தமிழாக்கம்]

***

ஜெயமோகன்,

காஷ்மீரை பற்றி பேசுபவர்கள், லடாக், ஜம்மு, வடக்குப் பகுதிகள் (Gilgit) பற்றி பேசுவதில்லை. ஏனென்றால் லடாக் மற்றும் ஜம்முவில் இந்திய அரசுக்கு எதிராக கோஷம் போடுவதில்லை. பாகிஸ்தான் வசம் இருக்கும் வடக்குப்பகுதி மக்கள் கண்டுகொள்ளபடுவதேல்லை. நாங்கள் எந்த முறையில் ஆட்சி செய்யப்படுகிறோம் எனக்கேட்டு அவர்கள் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இவர்கள், சீனாவின் திபேத், துருக்கி & ஈராக்கின் குர்து, ஆப்கானிஸ்தானின் ஹஸாரா, மலேசியாவின் சீன&தமிழர் என எதைப்பறறியும் பேசுவதில்லை. ஏன்? அதற்கு கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டும்.

நம்முடைய நாட்டை விமரிசிப்பவர்களிடம் நான் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க ஆசைப்படுகின்றேன்.

இதற்கு தீர்வாக அவர்கள் எந்த ஆட்சிமுறையை/எதனை சொல்லுகிறீர்கள்?

வெறுப்பு உமிழும் கொளுகை பிரச்சாரம் எல்லாம் அட்டைகத்தி சமாசாரம் தான். யாரையாவது எதாவது வேலை செய்ய சொன்னால் தெரியும் அவர்கள் கொளுகை.

நல்லவைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கோவையில் சிறுதுளி, பழநியில் மலை பாதுகாப்பு இயக்கம்.. என ஒவ்வொரு மாவட்டதிலும், மாநிலத்திலும்  யாராவது இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நல்லவைகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். பஞ்சாப்பில் ஒருத்தர் ஒரு நதியையே உயிர்பித்து இருக்கிறார். பக்கமாக வந்த தகவல் அறியும் சட்டத்தை கொண்டும் இயக்க முடியாத அரசு இயந்திரத்தை மக்களுக்காக இயக்குகிறார்கள். இவர்கள் வெறுப்பு உமிழும் அதே நேரத்தில் தான், மகாராஸ்டிராவில் கிராம மக்கள் சேர்ந்து அம்பானி குழுமத்தை ஓட்டுப்போட்டு  வெளியே அனுப்புகிறார்கள்.

மேலே சொன்னவையெல்லாம் ஒரு சிறு துளி மட்டுமே. இந்தியா அழிந்து போகும் என எத்தனையோ பேர் எவ்வளவோ முறை ஆருடம் கூறிவிட்டார்கள். ஆனாலும் இந்தியா வாழ்ந்தது, வாழ்கிறது, வாழும், எந்த வரையறைக்குள்ளும் சிக்காமல்.

ராஜசங்கர்.

இதைப்பற்றி தேடிய பொழுது கிடைத்த சுட்டிகள்.

http://www.rediff.com/news/2007/apr/19bsp.htm
http://www.fourhourworkweek.com/blog/2007/12/11/how-to-negotiate-like-an-indian-7-rules/
http://timesofindia.indiatimes.com/Columnists/S_Tharoor_Indias_linguistic_diversity/articleshow/3346890.cms


***

அய்யா,
உங்கள் சமிபத்திய “எனது இந்தியா” எனும் கட்டுரையை வாசித்தேன் அப்படியே எனது மன நிலையை படம் பிடித்தது போல உள்ளது

நான் அரபு நாட்டில் பணி புரிந்து வருகிறேன் என்னுடன் கிட்ட தட்ட ஆசிய நாடுகளை சேர்ந்த அனைவரும் பணி புரிகின்றனர் மதியம் உணவு கூடத்தில் உணவு அருந்தும் வேளையில் தமிழன் தமிழனோடும் சீனன் சீனனோடும் பிலிபினோ பிளிபிநோவோடும் அமர்ந்து  உணவு அருந்துவார்கள் இது மொழியால் ஏற்பட்ட இணைவு (same country /same vernacular) ஆனால் இஸ்லாமியர்கள் மட்டும் இந்தியா ஸ்ரீலங்கா பாகிஸ்தான் பங்களாதேஷ் இந்தோனோசிய மொழி நாடு பேதம் இன்றி  அமர்ந்து உணவு அருந்துவார்கள் (religious unity)குறிப்பாக இவர்கள் அனைவருக்கும் இந்து மதம் பற்றி ஒரு ஏளன பார்வையும் இந்தியா துவேசமும் நிறைய உண்டு என்பதை கண்கூடாக கண்டிருக்கிறேன் நான் அடிக்கடி பங்களாதேஷ் நண்பர்களிடம் சொல்லுவதுண்டு உன் நாட்டை உருவாக்க இந்தியர்கள் தம் இன்னுயிரை தந்தனர் ஆனால் உனக்கு கொஞ்சம் கூட இந்தியாவின் மேல் விசுவாசம் கிடையாது 

 இந்தியாவிலே கூட தினசரி  பல்வேறு போராட்டங்கள் பல்வேறு பொது பிரச்சினைகளை மைய படுத்தி தினம் தோறும் நடந்து வருகிறது ஆனால் எங்காவது ஒரு இஸ்லாமியர் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி நடத்தப்படும் போராட்டங்களை கலந்து கொண்டோ அல்லது ஆதரித்தோ இருப்பார்களா ?

thangaraj nagendran 

**

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் கட்டுரை உணர்ச்சி வேகத்தால் சமநிலையை இழந்ததாக உள்ளது. இந்திய அறிவுஜீவிகள் தங்களை புரட்சியாலர்களாக காட்டிக்கொள்வதில்லை. லிபரலாக காட்டிக் கொள்கிறார்கள். அவர்களைப்பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சியின் மதவெறி அஜெண்டா என்பது இந்நாட்டைஅ ழிவுக்குக் கொண்டுசெல்லக் கூடியது. அதை எந்தவகையிலேனும் தடுத்து நிறுத்த வேண்டும். ஆகவே அதற்கு எதிரான நிலைபாட்டை அவர்கள் எடுக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் மத அரசியலை தோலுரிக்கிறார்கள். அதற்கான சான்றாதாரங்களை சேகரித்து வெளிப்படுத்துகிறார்கள். பாப்ரி மஸ்ஜித் இடிப்பு , குஜராத் கலவரம் ஆகியவற்றைப்பற்றிய உண்மைத்தகவல்களை வெளிக்கொண்டுவந்தது அவர்களே. அவர்களின் பணி இந்தியச் சூழலில் போற்றத்தக்கதே. அவர்கள் இல்லாவிட்டால் இங்கே மதவெறி கட்டுக்கு மீறி சென்றுவிட்டிருக்கும். இதை நீங்கள் உணரவேண்டும்.

கணேஷ்குமார்
மதுரை
***

அன்புள்ள ஜெ

உங்கள் கட்டுரையைப் படித்துக் கொன்டிருந்தேன். அருந்ததியின் கட்டுரைக்கு உடனடியாக நம்மூர் நகல்கள் உருவாகும் என்று எண்ணினேன். முடிக்கவில்லை. அதற்குள் இந்த மெயில் வந்தது. அதேதான் பாருங்கள்
கண்ணன்

காசுமீரத்தை நசுக்கும் இந்துத்துவமும் இந்தியமும் – சில குறிப்புகள்: தியாகு

http://thamizhthesam.keetru.com/

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/691

2 pings

  1. jeyamohan.in » Blog Archive » வடகிழக்கு:கடிதங்கள்

    […] இந்தியா:கடிதங்கள் […]

  2. இஸ்லாம்: மிரட்டல்கள், அவதூறுகள்

    […] இந்தியா:கடிதங்கள் […]

Comments have been disabled.