இன்று விஷ்ணுபுரம் விழா சந்திப்புகள். . .

இன்றுமுதல் விஷ்ணுபுரம் விருது விழா கோவையில் தொடங்குகிறது. காலை நான் அருண்மொழி மற்றும் சைதன்யா கோவை வந்து சேர்வோம். டி.பி.ராஜீவன் நேற்றே கோவை வந்துவிட்டார். வெளிநாடுகளில் இருந்தெல்லாம்கூட நண்பர்கள் வந்துள்ளனர்.

சு.வேணுகோபால் (1)

[சு வேணுகோபால்]

இன்று காலை முதலே சந்திப்புகள் நிகழும். காலையில் சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோருடனான சந்திப்புகள். தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் இவர்கள். எம்.கோபாலகிருஷ்ணன் பெரிதும் பேசப்பட்ட அவரது மணல்கடிகை நாவலுக்குப்பின் இப்போது ‘மனைமாட்சி’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். [தமிழினி]

சு.வேணுகோபாலின் ஆட்டம் சென்றவருடம் வெளிவந்த முக்கியமான நாவல் [தமிழினி] [ஆட்டம் ஒரு வாசிப்பனுபவம்] இவரது நுண்வெளிக்கிரணங்கள் நாவலும் கூந்தப்பனை முதலிய சிறுகதைத் தொகுதிகளும் முக்கியமானவை

download [எம்.கோபாலகிருஷ்ணன்]

மதியம் பாவண்னனுடனான உரையாடல். இரவில் டி.பி.ராஜீவனுடன் ஓரு கவிதை விவாதம். மறுநாள் புவியரசு,சா.கந்தசாமி, ஞானக்கூத்தன் ஆகியோருடன் விவாதம். வசந்தபாலன் 28 அன்று மதியம் வருகிறார். அவரிடமும் விவாதிக்கலாம்

சென்றமுறை போலவே ஓரளவு மட்டுமே ஒழுங்குபடுத்தப்பட்ட இயல்பான அளவளாவல்தான் நிகழும். எழுத்தாளர்களைச் சந்திக்கவும் தனிப்பட்ட முறையில் விவாதிக்கவும் வாய்ப்பளிக்கப்படும்.

நாளை மாலை நானி கலை அரங்கம், மணி மேல்நிலைப் பள்ளி, கோவை யில் பரிசளிப்பு விழா

விழாவில் மாலை 5 மணிக்கு நண்பர் கே.பி.வினோத் எடுத்த ஆவணப்படம் ‘இலைமேல் எழுத்து- ஞானக்கூத்தன்’ திரையிடப்படும். 40 நிமிடப்படம்.

அரங்கில் வெண்முரசு நூல்கள், டி.பி.ராஜீவன் மற்றும் பங்கேற்பாளர்களின் நூல்கள் கிடைக்கும்

அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்

*

விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு வரும் நண்பர்கள் தங்கவும், கலந்துரையாடவும் கீழ்க்கண்ட மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை ரயில்நிலையத்திலிருந்து எண் 13 பேருந்திலும், காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து எண் 7 பேருந்திலும் மண்டபத்தை அடையலாம்.

சனிக்கிழமை காலை 8 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை மண்டபத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கிச்செல்லும் நண்பர்கள் முன்னரே தெரிவித்தால் இரவு உணவிற்கும் சேர்த்து ஏற்பாடு செய்ய ஏதுவாக இருக்கும்.

Rajasthani Nivas
33, Periaswamy Road East,
R.S.Puram,
Coimbatore – 641 002
Phone : 91 – 422 – 2548581

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 69
அடுத்த கட்டுரைகுழந்தையின் கண்கள்