ராஜா சந்திரசேகர்- ஞானக்கூத்தன் ஆவணப்படம்

Raaja Chandrasaker

ஜெ,

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். எனது நண்பர் கவிஞர், இயக்குநர் ராஜா சந்திரசேகர் அவர்கள் எனக்கு இந்த ஆவணப்பட உருவாக்கத்தில் பெருமளவு உதவியிருக்கிறார்.

ஞானக்கூத்தன் சாரின் சிறந்த வாசகர் அவர். ஞானக்கூத்தன் பற்றிய ஆவணப்படமென்பதால் அவரது வேலைகளுக்கிடையேயும் தொடர்ந்து தொழில்நுட்ப ஆலோசனைகள் தந்து கொண்டிருந்தார். படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் ஸ்டுடியோ எனக்கு அறிமுகம் செய்துவைத்து பெரிய அளவில் உதவினார்.

இவரது ஈடுபாடு இல்லையென்றால் படம் இத்தனை சிறப்பாக வந்திருக்காது. அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,
வினோத்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 66
அடுத்த கட்டுரைபெருமாளும் நடராசரும்